Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''ஜி.எஸ்.டினா கவர்மென்ட்டுக்கு செலுத்தும் தண்டம்!'' - குறும்பட இயக்குநர் எழிலரசன்

‘#GST அநீதிக்கதைகள்' என்ற வித்தியாசமான பெயரில் குறும்படத்தை இயக்கியுள்ளார், இயக்குநர் ராஜுமுருகனின் உதவி இயக்குநர் பெ.எழிலரசன். வெறும் கதையாக மட்டும் இக்குறும்படத்தை சொல்லி முடிக்காமல், தோழர் ஆர்.நல்லகண்ணு, தோழர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களையும் அவர் சேர்த்திருப்பதால், ஒரு ஆவணப்படமாகவும் இந்தக் குறும்படம் முக்கியத்துவம் பெறுகிறது. ``சமகால அரசியல் சூழலில் இது முக்கியமான பதிவு. நடித்திருக்கும் நடிகர்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். ஜி.எஸ்.டி வரியால் பாதிக்கப்பட்ட மக்களின் நிஜமான வலியை இது பிரதிபலித்திருக்கிறது. தவறாமல் அனைவரும் பார்க்க வேண்டும்!'' என, இந்தக் குறும்படத்தின் முக்கியத்துவத்தைச் சொல்கிறார் இயக்குநர் ராஜுமுருகன்.

அநீதி கதைகள்

 27 நிமிடங்கள் ஓடும் இக்குறும்படம், மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரியால் பாதிக்கப்பட்ட 3 குடும்பங்களின் கதையைப் பொட்டில் அறைந்து சொல்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸத் தோழர்களின் பிரசாரங்களில் இந்தக்குறும்படம் பயன்படுத்தப்பட உள்ளது. அதிக பொருள்செலவு வைக்காமல் நண்பர்களை வைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர்.  

``காம்ரேட் டாக்கீஸ் தயாரிப்பில், மார்க்சிஸ்ட் தோழர்களின் உதவியால் இதை நான் இயக்கியிருக்கிறேன். `ஜோக்கர்' படத்துக்குப் பிறகு அடுத்த கதைக்கான விவாதத்தில் ராஜுமுருகன் சாரோடு இருந்தபோது இந்தக் குறும்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. மிகக்குறுகிய காலத்தில் நண்பர்களின் துணையோடு இதை இயக்கி முடித்தேன்.'' என்கிறார் இயக்குநர் பெ.எழிலரசன். 

இயக்குநர் ராஜு முருகன் உடன் குறும்பட இயக்குநர் பெ.எழிலரசன்

``அதென்ன அநீதிக்கதைகள் என்று ஒரு டைட்டில்..?'' 

``GST-ன்னா ‛கவர்மென்ட்டுக்கு செலுத்தும் தண்டம்’னும் புரிஞ்சுக்கலாம். ஜி.எஸ்.டி வரியால் நேரடியாக பாதிக்கப்பட்ட மூன்று பேரை மையமாக வைத்து கதை சொல்லி இருக்கிறேன். தன் வயலுக்கு பூச்சிக் கொல்லி மருந்து வாங்குவதற்காக  வட்டிக்குப் பணம் வாங்குகிறார் ஒரு டெல்டா விவசாயி. ஜி.எஸ்.டி வரி சேர்க்கப்பட்டதால் விலையேறிப்போன பூச்சிக்கொல்லி மருந்தை அவரால் கூடுதல் தொகை கொடுத்து வாங்க இயலவில்லை. இரண்டாவது கதையில்,

ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் பெண்ணுக்கு மாதவிடாய் வருகிறது. தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கு மொத்தமாக நாப்கின்கள் வாங்குவதுதான் வழக்கம். அப்படி மருந்துக்கடையில் நாப்கின் வாங்கச் செல்லும் பெண்களால் நாப்கின்களை வாங்க முடியாமல் திரும்ப நேரிடுகிறது.  மூன்றாவது கதையில்,

பிரசவத்துக்காக சேர்த்துவைத்த பணத்தைவிட அதிகம் வரியோடு சேர்த்து கட்டச் சொல்வதால், ஒரு கர்ப்பிணிப்பெண்ணும் அவரது கணவனும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மூன்று கதையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னவானது என்பதை க்ளைமாக்ஸில் சொல்லி இருக்கிறேன். இந்தக் கதைகளின்வழி சாமான்ய மக்களுக்கு புரியும்விதத்தில் கம்யூனிஸத் தோழர்களின் கருத்துகளையும் சேர்த்துள்ளேன். ஜி.எஸ்.டி வரிச்சுமைக்கு எதிரான காத்திரமான கருத்துகளை தோழர்களின் குரல்களாகவும், பொதுமக்களின் வலியை அவர்களின் வாய்மொழியிலும் பதிவுசெய்திருக்கிறேன். வைரலாகும் வீடியோவுக்கான `பீப்' ஒலி விஷயங்கள் இதில் இல்லையென்றாலும், முழுவதுமாகப் பார்த்தால், இந்த மூன்றில் ஒரு விஷயத்தால் சாமான்ய மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை நீங்கள் உணர முடியும்'' என்கிறார்.

கதைகளும் அதில் நடித்தவர்களின் இயல்பான நடிப்பும் ஈர்த்தாலும், கதைகளைவிட ஆங்காங்கே வரும் 'நாப்கினுக்கு ஜி.எஸ்.டி... காண்டத்துக்கு வரிவிலக்கு. ஷட் அப் பண்ணுங்க மக்களே... ஷட் அப் பண்ணுங்க!' போன்ற சாமியாரின் டைமிங் கமென்ட்டுகள் அதிகம் ஈர்க்கிறது.  

 

புதிய இந்தியா பொறந்துருச்சு..!

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்