Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``விளம்பர படங்களில் இனி நடிக்க மாட்டேன்..!” - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் பாசில் நடிப்பில் மோகன் ராஜா இயக்கியுள்ள திரைப்படம்  'வேலைக்காரன்'. அனிருத் இசையமைத்த இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. 

வேலைக்காரன்

படத்தில் வேலை செய்தவர்கள் மற்றும் படத்தைப் பற்றி பேசிய சிவகார்த்திகேயன், “ ‘தனி ஒருவன்’ திரைப்படம் பார்த்த பிறகு ஜெயம் ராஜா அவர்களை வாழ்த்த கால் செய்தேன். மோகன் ராஜா சாரிடம் பேசி முடித்தவுடன்.‘சந்திக்கலாம்’னு சொன்னாரு. இந்த மாதிரி ஒரு ஸ்ட்ராங்கான கதாபாத்திரம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டு அவரிடம் ‘நாம் ஒரு படம் பண்ணலாமா’ என்று கேட்டேன். இந்தியில் அவருக்கு வாய்ப்புகள் அமைந்த சுழல் அது. அதைப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்றார். அப்படி சென்னையில் வெள்ளம் வந்த நேரத்தில்தான் மோகன் ராஜா சார் கால் செய்கிறேன் என்று சொன்னார். போன் சிக்னல் ஏதுவும் கிடைக்காத நேரத்தில் நான் கால் பண்ணுவேன்னு அவர் காத்திருப்பார். அவர் கால் பண்ணுவார் என நான் காத்திருப்பேன். இப்படி ஒரு காதல் மாதிரி நடந்து முடிவானதுதான் 'வேலைக்காரன்' படம்.

முழுக்க முழுக்க நான் மோகன் ராஜா சார் மேலே வைத்த நம்பிக்கைதான் இந்தப்படம். இந்தப் படத்துக்காக எனக்கு என்ன பேர் கிடைத்தாலும் அது மோகன் ராஜா சாருக்குதான் சென்று சேரும். இரண்டு பெரிய கதையை ஒன்று சேர்த்து கொடுத்திருக்கார் ராஜா சார். அதை ஃபஹத் பாசில், நயன்தாரா, பறாக்ஸ் ராஜ், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, கலை இயக்குநர் முத்துராஜ், இசையமைப்பாளர் அனிருத் போன்ற பெரிய டீமை கொடுத்திருக்கார். இதுக்கு முன்னாடி என் படங்கள் மாதிரி இந்த படம் இருக்காது. என்னுடைய கம்ஃபோர்ட் ஆன காமெடி அப்படிங்குற இடத்தை தாண்டிய  சினிமா ஒண்ணு இருக்குது. எனக்கு இந்த இடம், என்னிடம் இருக்கும் எல்லாம் கொடுத்தது இந்த சினிமா மற்றும் தமிழ் ரசிகர்கள்தான். அவர்களுக்கு எதை நம்மால் கொடுக்க முடியும் என்று தெரியல. அப்படி என்னால் கொடுக்க முடிந்த ஒன்று இந்தப் படம்.

வேலைக்காரன்

படத்தின் சில காட்சிகளில் நடிக்கும்பொழுது மிக சந்தோஷமா இருந்தது ஒரு சில காட்சிகள் நெஞ்சை பாரம் கொள்ள வைத்தது. இதையெல்லாம் கடந்துதான் நாம் வருகிறோமா என்று நினைக்கவைத்தது. ஒரு குறிப்பிட்ட காட்சியில் உண்மையான டாக்டர் ஒருவரே நடித்திருந்தார். அந்த சீன் எடுக்கும்போது எனக்கு கண்கள் கலங்கிருச்சு. அந்தக் காட்சி முடிந்த பின் பார்க்கையில் ஸ்பாட்டில் இருந்த அனைவரும் கண்கள் கலங்கி இருந்தாங்க. இதுக்கு முன்னர் ஒரு சில விளம்பரங்கள்ல நடிப்பதை நான் தவிர்த்துவந்தேன். அதற்கு நான் அன்று பெருமைப்பட்டேன். இப்பொழுது இந்த மேடையை பயன்படுத்தி கூற விரும்புகிறேன். இனி நான் விளம்பரப் படங்களில் நடிக்க மாட்டேன். இதற்கு காரணம் இப்பொழுது கூற இயலாது. அதைச் சொல்லக் கூடாது என்பற்காக அல்ல. இதைக் கூறினால் படத்தின் காட்சியையும் கதையையும் கூற வேண்டி இருக்கும். விளம்பரங்கள் வருவது அனைத்தும் தவறானவை என்று கூறவில்லை. அதன் மூலமா என்னைப் பார்த்து ஒரு குழந்தைக்கோ, அந்த குடும்பத்தில் ஒரு நபருக்கோ எந்த பாதிப்பும் வரக்கூடாது என எண்ணித்தான் இந்த முடிவை எடுத்தேன். இதற்கு முன் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளேன். இனி நடிக்க மாட்டேன். இப்படி என்னுள் இருக்கும் மனிதனை தட்டி எழுப்பிய படம் 'வேலைக்காரன்' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்