``எனக்கு யுவன்ஷங்கர் குணங்களோட ஒரு பொண்ணு வேணுங்க..!’’ ’ரொமான்ஸ்’ சிம்பு

சிம்புவை சுற்றி பல பிரச்னைகள் மற்றும் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுவரும் நிலையல்.  நேற்று நடந்த 'சக்க போடு போடு ராஜா' திரைப்பட இசை வெளீயிட்டு நிகழ்ச்சியில் ரசிகர்கள் மற்றும்  ஊடகம் முன்பு தோன்றினார். தன்னை சுற்றி இருக்கும் பிரச்னைகளுக்கு, குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கும் விதமாக அவர் பேசினார்.  

விடிவி கணேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம், 'சக்க போடு போடு ராஜா". இந்தப் படத்தின்மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார் நடிகர் சிம்பு. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. தனுஷ், யுவன் சங்கர்ராஜா, இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தனுஷ் பாடல்களை வெளியிட படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர். 

சிம்பு

இந்த விழாவுல் சிம்பு பேசுகையில், "நான் இசையமைப்பதற்கு பலர் காரணமாக உள்ளனர். அவர்களுக்கு இந்த மேடையில் நன்றி சொல்ல நினைக்கிறேன். நான், இளையராஜா சாரின் பாட்டைக் கேட்டு வளர்ந்தவன். அவர் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அடுத்து, மைக்கேல் ஜாக்சன் ஒரு இன்ஸ்பிரேஷன், எனக்கு இசையமைத்த அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி. பிரேம்ஜிவரை நான் அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடம் கற்றுள்ளேன். 

எனக்கு பாடல் எழுதிய அனைத்து பாடலாசிரியர்களுக்கும் நன்றி. வாலி சார், எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர், 'தம்' படத்தில் ஒரு பாட்டில் 'நான் சொன்னா நம்பு... உன் நண்பன்தானே சிம்பு' என்று எழுதினார். ‘இது அதிகமா இருக்கிறமாதிரி இருக்கு சார்’ என்றேன். அதற்கு வாலி சார், "நீ என்றாவது ஒருநாள் பெரிய ஆள் ஆகிடுவ. அதற்கு நான் இன்னைக்கு எழுதித்தான் ஆகவேண்டும்" என்றார், அதற்கு காணிக்கையாக நான் எழுதிய, ‘லூசுப் பெண்ணே' பாடலில் 'வாலி போல பாட்டெழுத எனக்குத் தெரியலையே" என்று எழுதினேன். அவர் நம்மிடம் இல்லாதது வருத்தமாக உள்ளது. அவர் இடத்தை நிரப்பி வரும் வைரமுத்து சாருக்கு நன்றி. அமரர் கவிஞர் நா.முத்துகுமாரும் இங்கு இருந்திருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பார்.

சிம்பு

ஏ.ஆர்.ரஹ்மான் சார் எனக்கு சிறு வயதில் இருந்தே பழக்கம். அவரும் எனக்கு பெரிய முன்னுதாரணம். இவர்களைத் தாண்டி, இசையமைக்கும் அளவு கற்றுக்கொடுத்தது யுவன் ஷங்கர் ராஜா சார்தான். எனக்கு வேண்டிய பாடல்களை கொடுத்து நான் என்ன டார்ச்சர் செய்தாலும் அதை பொருத்துக்கொண்டு, எதை உணர்கிறேனோ அதைப்புரிந்துகொண்டு இசையமைத்துக் கொடுப்பார். நான் அவரிடம், 'சார் உங்க ஜாதகம் இருந்தால் கொடுங்க சார். அதேமாதிரி பெண்ணை தேடிப்பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்று கேட்பதுண்டு. 

நான் யாரென எனக்கே புரியாதபோது, என்னை புரிந்துகொண்டு நான் கொடுக்கும் டார்ச்சர்களை தாங்கிக்கொண்டு' அப்படி ஒரு பெண் அந்த ஜாதகத்தில்தான் கிடைக்கும் என நம்புகிறேன். நான் யுவனின் கம்ப்யூட்டர் கீபோர்டில் அமர்ந்து வேலைசெய்ததுண்டு. யாரும் அவ்வளவு எளிதில் நமக்கு அந்தமாதிரி விட்டுவிட மாட்டர்கள், யுவன் சாருக்கு நன்றி” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!