Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'' 'ஏமாலி’ டீசர் பார்த்துட்டு என்னைத் தப்பா நினைக்காதீங்க ப்ளீஸ்..!’’ - ஹீரோயின் வேண்டுகோள்

''இயக்குநர் வி.இஸட். துரை என்னிடம் கதை சொன்னவுடன் கொஞ்சம் மாடல் கேர்ள் கேரக்டராக இருக்கிறதே, நம்ம அந்த அளவுக்கு மாடலான பெண் கிடையாதே என்று யோசித்தேன். டைரக்டர் என்னை முழுவதுமாக ஸ்க்ரிப்ட்டில் இருக்கும் பெண்ணாகவே மாற்றுகிறேன்னு சொல்லியிருந்தார். இருந்தாலும் எனக்குள்ளே ஒரு டவுட். ரொம்ப தைரியமான பெண்ணாக இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் நம்மால் முடியுமா என்று யோசித்தேன்’’ என்று பேச ஆரம்பிக்கிறார் 'ஏமாலி' படத்தின் நாயகி அதுல்யா ரவி. 

அதுல்யா ரவி

'' காதல் கண் கட்டுதே' படத்தை பார்த்து விட்டுதான் எனக்கு ''ஏமாலி'' படத்தின் வாய்ப்பு வந்தது. டைரக்டர் வி.இஸட் துரை என்னை அவர் ஆபிஸூக்கு வரச் சொன்னார். என்னை வைத்து ஸ்கீர்ன் டெஸ்ட், ஆடிஸன் எதுவும் அவர் பண்ணவில்லை. என் முந்தைய படத்தின் வீடியோ க்ளீப்ஸ் சிலவற்றை அவர் முன்பே பார்த்திருந்தார். அதனால் அவர் என்னிடம் கதையை மட்டும் சொல்லி கேரக்டர் எனக்கு ஓகே வானு கேட்டார். நான் ஓகே சொன்னவுடன் சில ட்ரெஸிங் சென்ஸ் எல்லாம் எனக்கு சேன்ஜ் பண்ணணும்னு சொன்னார். உடனே  இரண்டு மாதத்தில் ஷூட்டிங் போயிட்டார். 

என்னுடைய முந்தைய படம் பிப்ரவரியில் ரிலீஸ் ஆச்சு. அது ரிலீஸ் ஆனவுடனே எனக்கு 'ஏமாலி' படம் வாய்ப்பு வந்து விட்டது. ஏப்ரலில் இந்தப் படத்தின் ஷூட்டிங்  ஆரம்பித்து விட்டது. 'காதல் கண் கட்டுதே' படம் என்னுடைய நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து நாங்களே எடுத்த படம். அதனால் அந்தப் படத்தில் காஸ்ட்டியூம் எல்லாம் பெருசா இருக்காது. என்னுடைய சொந்த காஸ்ட்டியூமை  படத்தில் பயன்படுத்தி இருப்பேன். நாங்கள் நினைத்த நேரத்தில் ஷூட்டிங்  வைத்து கொள்வோம். என்ன சீன் எடுக்க போறோம் அப்படிங்குற விஷயத்தை கூட  ஷூட்டிங் ஸ்பாட்டில் யோசித்து அப்போதுதான்  ஷூட் போவோம். நான் எப்படி ஒரிஜினல் லைப்பில் இருப்பேனோ அதுதான் 'காதல் கண் கட்டுதே' படம். 

ஆனால், ஏமாலி அப்படியில்லை பக்கா ஸ்க்ரிப்ட், காஸ்ட்டியூம் எல்லாம் இருந்தது. இந்தப் படத்தில் நான் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் பெண். அதனால் அதற்கு ஏற்ற மாதிரி பாடி லாங்வேஜ் எல்லாம் வொர்க் பண்ணினேன்.  டீசர், ட்ரெயிலரை பார்த்துவிட்டு படத்தில் நான் கிளாமராக நடித்திருக்கிறேன் என்று நினைத்தால் அது தப்பு. இந்தப் படத்தில் தைரியமான பெண்ணாக நடித்திருக்கிறேன் அவ்வளவுதான். இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் மேல் பெரிய நம்பிக்கை இருக்கு. என் கேரக்டர் எல்லோருக்கும் பிடிக்கும். நான் இந்த கேரக்டர் செய்ய பயந்த போது துரை சார், 'உங்கள் உழைப்பை மட்டும் கொடுங்க போதும்''னு என்னை மோட்டிவேட் பண்ணினார். இந்தப் படத்துக்குள்ளே நான் வந்தற்கு அவர்தான் முக்கிய காரணம். 

அதுல்யா ரவி

சமுத்திரக்கனி சாரை படத்தின் பூஜையின் போதுதான் பார்த்தேன். அப்போது டைரக்டர் சார் என்னை அறிமுகப்படுத்தினார். தமிழ் பொண்ணு என்று தெரிந்தவுடன் சமுத்திரக்கனி சார் ரொம்ப சந்தோஷப்பட்டார். தமிழ் பொண்ணுங்க தைரியமாக நடிக்க வரணும்னு சொன்னார். ரொம்ப நட்பாக, ஜாலியாக பழகுவார். ஷாட் நல்லா பண்ணினால் 'சூப்பரா பண்ணின''னு என்கரேஜ் பண்ணுவார். 

இந்தப் படத்துக்கு ஜெயமோகன் சார் தான் வசனம் எழுதியிருக்கிறார். ரொம்ப அழுத்தமான வசனங்களை எழுதியிருக்கிறார். இந்தப் படத்தில் த்ரில்லர், லவ், ஈகோ என் எல்லாமே இருக்கும். அதுமாதிரி இந்த ஜெனரேஷன் ஆள்கள் செய்கின்ற தப்பு, அவங்களுக்கான மெசேஜ் என எல்லாம் இருக்கும். 

இந்த ஸ்க்ரிப்ட் பிடிச்சிருக்குனு வீட்டில் சொன்னவுடன் அப்பா, அம்மா மாடல் பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை பண்ணுனு நம்பிக்கை கொடுத்தாங்க. 'காதல் கண் கட்டுதே' டைரக்டர் சிவராஜ் என்னுடைய க்ளோஸ் ஃப்ரெண்ட், அவரிடம் ஸ்க்ரிப்ட் பற்றி சொன்னவுடன் ''இந்தப் படத்தில் நீ கட்டாயம் நடி''னு சொன்னார். படத்தில் சிகரெட் பிடிக்கிற சீன்ஸ் வருமே என்றெல்லாம் நான் முதலில் யோசித்தேன். சிகரெட் பிடிக்கிற சீன்ஸ் வருவதற்கு ஒரு மூன்று நாளைக்கு முன்னாடி சிகரெட் எப்படி கையில் பிடிக்கணும், பத்த வைக்கணும்,சைகோத்தனமாக எப்படி சிகரெட் பிடிக்கணும் என்றெல்லாம் துரை சார் பயிற்சி கொடுத்தார். ஷூட்டிங்கின் போது என்னுடன் அம்மாவும் வருவார். ஆனால், அவர் ஏன் இந்த சீன் இப்படி இருக்கு, அப்படியெல்லாம் கேள்வி கேட்க மாட்டார்.

என்னுடைய இரண்டாவது படமே எனக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற படமாக இருப்பது எனக்கு சந்தோஷம். என்னுடைய  அடுத்த, அடுத்த படங்களில் ரோல் வித்தியாசமாக இருக்கும்'' என்று சொல்லி முடித்தார் அதுல்யா ரவி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்