Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னைத் திரைப்பட விழாவின் இறுதி நாள்... காத்திருக்கும் சர்ப்ரைஸ்..! #CIFF2017

15-வது சென்னைத் திரைப்பட விழா இன்றுடன் முடிகிறது. ஒவ்வொரு நாளும் 20 திரைப்படங்களுக்கு மேல் பல தியேட்டர்கள் மூலம் திரையிடப்பட்டாலும், அதில் மிஸ் பண்ணக் கூடாதவற்றை தினமும் வரிசைப்படுத்தி வருகிறோம். இறுதி நாளான இன்று என்னென்ன படங்களை மிஸ் பண்ணக் கூடாது என்பதை பார்ப்போம்.

The Charmer

The Charmer

டென்மார்க்கில் வசிக்கும் ஈரான் நாட்டைச் சேர்ந்த இளைஞன் இஸ்மாயில். அவன் தொடர்ச்சியாக டென்மார்க்கில் இருக்க விரும்புகிறான். ஆனால், அதற்கு அந்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணமுடிக்க வேண்டும். அவனுக்கு கெடு விதிக்கப்பட்ட காலத்துக்குள் பெண்ணை மணந்து தொடர்ந்து டென்மார்க்கிலேயே இருக்கிறானா? மூட்டைக் கட்டி ஈரானுக்கே அனுப்பப்படுகிறானா? என்பதை விறுவிறுப்பாக சொல்லியுள்ள திரைப்படம் `The Charmer'. அண்ணா திரையரங்கில் பிற்பகல் 12:00 மணிக்கு The Charmer திரையிடப்பட உள்ளது.

I, Daniel Blake

I, Daniel Blake

இன்று ஒரேயொரு படத்தைத்தான் பார்க்க முடியுமென்றால், `I, Daniel Blake'- தான் உங்கள் சாய்ஸாக இருக்க வேண்டும். 2016-ம் ஆண்டு வெளியாகி இன்னும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் வட்டமடித்து வரும் உன்னத படைப்பு I, Daniel Blake. கலந்துகொண்ட அனைத்து திரைப்பட விழாக்களிலும் ஏதோ ஒரு பிரிவில் விருதுகளை வாங்கியப் படம் இது. பொதுவாக, ஆங்கில மொழியில் எடுக்கப்பட்டிருக்கும் படம் என்றால், திரைப்பட விழாக்களில் தவிர்த்துவிடுவதால் பெரிய பாதகம் இருக்காது. காரணம், இணையத்தில் இருந்து தரவிறக்கிக் கூட பார்த்துக் கொள்ளலாம். ஆனால், இந்தப் படத்தின் நேர்த்திக்காக சில்வர் ஸ்கிரீனில் பார்க்கலாம். தேவி திரையரங்கில் மதியம் 2:00 மணிக்கு இந்தப் படம் ஸ்கிரீனிங் செய்யப்படுகிறது.

Ciao Ciao

Ciao Ciao

இந்தத் திரைப்பட விழாவில் மூன்றாவது முறையாக காட்சிபடுத்தப் போகும் படம், Ciao Ciao. நகரத்தில் இருந்து கிராமத்துக்குப் போவதை ஒருவித அழகியல் தன்மையுடனேயே பல திரைப்படங்களும் உருவகப்படுத்தியுள்ளன. நகரத்தில் இருந்து கிராமத்துக்கு ஒரு டூரிஸ்டாக போவதற்கும், நகரத்தின் வாழ்க்கைக்குள் நன்றாக ஊறிப்போய் தன் சொந்த கிராமத்துக்குத் திரும்பி ஒரு பிரச்னையை சமாளிப்பதற்காக போவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும் அல்லவா. இரண்டாவதாக சொன்ன விஷயத்தைத்தான் Ciao Ciao டீல் செய்துள்ளது. தேவி பாலா திரையரங்கில் பிற்பகல் 2:15 மணிக்கு Ciao Ciao திரையிடப்படுகிறது.

திரைப்பட விழாவின் கடைசி நாள் என்பதால், கண்டிப்பாக ஆடியன்ஸ் அதிகம் கேட்டிருக்கும் முக்கியமான படங்கள் ரிப்பீட் செய்யப்படும். அதனால், அட்டவணையில் இல்லாத சிலப் படங்களை சர்ப்ரைஸாக பார்க்க கிடைக்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்