விஜய்க்கு ஒரு பவர்ஃபுல் கதை ரெடி! - இயக்குநர் மாதேஷ்

“இயக்குநர் ஷங்கர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவிஇயக்குநராய் இருந்த காலத்திலிருந்து நானும், அவரும் நெருங்கிய நண்பர்கள். அப்போது ஷங்கர் அவருடைய படத்தின் கதைகளைப் பற்றி என்னிடம் சொல்வார். அப்படி அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது எடுத்த படம்தான், 'ஜென்டில்மேன்'. அதன்பிறகு ஷங்கரிடம் நான் இணை இயக்குநராய் உதவி புரிந்தேன்.'' என்று பேச ஆரம்பிக்கிறார் 'மோகினி'படத்தின் இயக்குநர் ஆர். மாதேஷ். 

மோகினி

 

“ ‘முதல்வன்’ படத்தின் ஸ்கிர்ப்டை ரஜினியிடம்தான் முதலில் சொன்னோம். அப்போது அவரால் இந்தப் படத்தை செய்யமுடியவில்லை. ரஜினி மட்டும் 'முதல்வன்' படத்தில் நடித்திருந்தால், எப்படி இந்தப் படத்தில் நடிகர் அர்ஜூன் வீட்டு முன்பு மக்கள் கூட்டம் வெள்ளமாக நின்று இருக்குமோ, அதே போல் உண்மையாகவே நடிகர் ரஜினி வீட்டு முன்பு அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று மக்கள் கூட்டம் நின்றியிருக்கும். 'முதல்வன்' படம் வந்த சமயத்தில் ரஜினி அரசியல் பிரவேசம் எடுக்க வேண்டும் என்று பலரும் நினைத்தனர். ரஜினி இந்தப் படத்தில் நடித்திருந்தால் அவருடைய இன்றைய அரசியல் பிரவேசத்துக்கும் அது பெரும் துணையாக இருந்திருக்கும். ஆனால், அந்த நேரத்தில் ரஜினியால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. அதனால், இந்தக் கதையை மற்ற பெரிய ஹீரோக்களிடமும் சொன்னோம். பட், யாருடைய கால்ஷீட்டும் கிடைக்கவில்லை. படத்தின் பட்ஜெட் பிரச்னையின் காரணமாக இந்தப் படத்தை ஷங்கரும், நானுமே தயாரிக்க முன்வந்தோம். படம் ரிலீஸாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. 

அதன்பிறகு என்னுடைய முதல் படத்தை இயக்கத் தயார் ஆனேன். காதல் படங்களில் நடித்து, காதலுக்காக மட்டுமே ஆக்‌ஷன் செய்யும் கேரக்டரில் நடிகர் விஜய்யை வைத்து 'மதுர' படம் எடுத்தேன். இந்தப் படத்திலிருந்துதான் விஜய் முதல் முறையாக சமூகத்துக்காக ஆக்‌ஷன் செய்யச் தொடங்கினார். இந்தக் கதையை விஜய்யிடம் சொன்னபோது அவர் சந்தேகமாக என்னிடம் கேட்டார், ''இந்தக் கதை எனக்கு ஓகே-வாக இருக்குமா''னு. 'மதுர' படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதன்பிறகு சில படங்களை எடுத்தேன். பிறகு மாராத்தி மொழியில் படம் இயக்கப் போய்விட்டேன். 

மோகினி

தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகை த்ரிஷாவை வைத்து தமிழில் 'மோகினி' படத்தை எடுத்திருக்கிறேன். இந்தப் படம் அவருக்கு முக்கியமான படமாக இருக்கும். ஏன்னா, இந்தப் படத்தில் வித்தியாசமாக ஆக்‌ஷன் செய்திருக்கிறார். அவருக்கு நிறைய ஆக்‌ஷன் சீக்வென்ஸ் படத்தில் இருக்கிறது. ரோப் எல்லாம் கட்டி ஒரு ஹீரோ எப்படிச் சண்டை போடுவரோ அதேமாதிரி ரொம்ப ஆக்ரோஷமாக இந்தப் படத்தில் த்ரிஷா சண்டை போட்டிருக்கிறார். 

இது ஒரு ஹாரர் படமாக இருந்தாலும், படத்தில் காமெடிக்குப் பஞ்சம் இருக்காது. இந்தப் படத்தின் கதை முழுவதும் லண்டனில் நடப்பது போல் எடுத்திருக்கிறேன். ஹாரர் அப்படிங்குற விஷயத்தைத் தாண்டி படத்தில் நம்ம நாட்டுக்குத் தேவையான மெசேஜ் இருக்கிறது. இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் கேட்டுவிட்டு நடிகர் மாதவன் இந்தக் கதையை ஹீரோவை மையமாக வைத்து எழுதி என்னிடம் கொடுங்கள். இந்தியில் நான் நடிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக 'மோகினி' இருக்கும். இந்தப் படத்தின் கதையை த்ரிஷாவிடம் சொன்னவுடன், 'என்னால், இந்தக் கதையில் நடிக்க முடியுமா'னு டவுட்டாக இருக்கிறது என்றார்.  நான்தான் அவருக்கு நம்பிக்கை கொடுத்தேன். கண்டிப்பாக 'மோகினி' ஹிட் அடிக்கும்." என்றவர், அடுத்த திரைப்படம் குறித்தும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

மோகினி

“விஜயை வைத்து 'மதுர' படம் கொடுத்தபிறகு, அவரை வைத்து அடுத்த படம் நான் இயக்கவில்லை. ஏன்னா, அவருக்கு ஏற்ற மாதிரி பவர்ஃபுல்லான கதை எனக்குக் கிடைக்கவில்லை. அவருக்கு ஏற்ற மாதிரி ஒரு ஸ்டோரி எழுதி வைத்திருக்கிறேன். விஜயும் கேட்க ஆர்வமாக இருக்கிறார். அவருக்கு என் கதை பிடித்திருந்தால், அவரை வைத்து இயக்குவேன். இனி என்னைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநராகப் பார்க்கலாம்" என்று முடிக்கிறார், இயக்குநர் ஆர்.மாதேஷ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!