``அர்விந்த் சாமியை ஷுட் பண்றது ரொம்ப ரொம்ப கஷ்டம்!” - ஒளிப்பதிவாளர் ராம்ஜி

“என்னைப் பார்ப்பவர்கள், பழகியவர் எல்லோரும் என்னை கோபக்காரன் என்று சொல்வார்கள். அதனால், அந்தப் பெயரை உடைக்க வேண்டுமென்று, 'வேலைக்காரன்' ஷூட்டிங் சமயத்தில் சிவகார்த்திகேயனுடன் நிறைய நேரங்கள் செலவு செய்தேன். ஜாலியாக, அரட்டை அடித்துக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் எல்லோருடனும் பேசிப் பழகினேன். எனக்கே, பத்து வயது குறைந்த மாதிரி பீல் கிடைத்தது. தற்போது எல்லோருடனும் சிரித்துப் பேசுகிறேன். என் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்கிறேன்" என்று பேச ஆரம்பிக்கிறார் 'பருத்திவீரன்', 'மயக்கம் என்ன', 'இரண்டாம் உலகம்' படங்களின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. 

ஒளிப்பதிவாளர் ராம்ஜி

“ 'வேலைக்காரன்' செட் எனக்கு ரொம்ப சவலாக இருந்தது. பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறமாதிரி இந்த செட்டை அமைத்தார்கள். லைட்டிங் எல்லாம் பக்கவாக பிளான் பண்ணி அமைத்தார்கள். ரியலிஸ்டிக்கா வேண்டும் அப்படிங்குறதுக்காக எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து இந்தப் படத்துக்காக பண்ணினேன்.” என்றவரிடம், சில கேள்விகள்.

வேலைக்காரன்

“அடுத்த அடுத்த படங்களுக்கு இடையில் ஏன் அதிக இடைவெளி?"  

“இந்த இடைவெளி நானாக கேட்டு எடுத்துக்கொள்கிற இடைவெளி. நான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படமும் என்னை அடுத்தடுத்த உயரங்களுக்குக் கொண்டுபோகவேண்டும் என்று நினைப்பேன். 'பருத்திவீரன்' படம் பண்ணி முடித்தவுடன் கலர்ஃபுல்லாக ஒரு கமர்ஷியல் படம் பண்ணலாம்னு நினைத்தேன். அதற்குப்பிறகு நிறைய கதைகள் கேட்கும்போது தோன்றியது, இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டு ஒளிப்பதிவளராக வந்தோம்னு. அதனால், நல்ல கதைக்குக் காத்திருந்து படங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டேன். ஸ்க்ரிப்ட் கேட்கும்போது எனக்குள்ளே ஒரு அதிர்வு ஏற்படும். அதைத்தான் தேர்ந்தெடுப்பேன். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றிக்கொள்ள முயற்சித்து இருக்கிறேன். கமர்ஷியல் படங்களும் அதிகமாகப் பண்ணவேண்டுமென்று நினைக்கிறேன்."

"இயக்குநர் செல்வராகவன் உங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆச்சே?" 

''செல்வாவுடன் மூன்று படங்கள் பண்ணி இருக்கிறேன். இந்தக் காலக்கட்டத்திற்கு முக்கியமான இயக்குநராக செல்வராகவன் இருக்கிறார். அவருடைய கதைகள் எல்லாம் வித்தியாசமாக, அட்வான்ஸாக இருக்கும். எங்களுக்குள் நல்ல அன்டர்ஸ்டான்டிங் இருக்கும். என்னிடம் கதை மட்டும் சொல்வார். என் விருப்படி அந்தக் காட்சியைக் கொண்டு வருவேன். அதற்கு எதுவும் சொல்லமாட்டார். ஏதாவது ஸ்க்ரிப்ட்டில் மாற்றங்கள் சொன்னாலும் அதை யோசித்துவிட்டு,  முழுமனதாக ஏற்றுகொள்வார்.

ஒளிப்பதிவாளர் ராம்ஜி

‘மயக்கம் என்ன' படத்தில் என் வாழ்க்கையில் நடந்தவை சிறு பகுதியாக வரும். அதை செல்வாவிடம் நான் சொல்லியிருக்கிறேன். என் வாழ்க்கையில் கொஞ்சம் சவலான காலம் இருந்தது. அதுவும் நானே விரும்பி எடுத்துக்கொண்டதுதான். 'மயக்கம் என்ன' படம் ஒரு ஸ்டில் போட்டோஃகிராபரைப் பற்றிய கதை. ஷூட் செய்யும்போது எல்லா போட்டோஃகிராபரும் என்ன யோசிப்பாங்கனு முதலில் நான் யோசித்தேன். ''நம்ம ஏரியா, அதனால் நல்ல லைட் மோடில் காட்டணும்'னு நினைப்பாங்கனு தோணுச்சு. நாம கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. இந்தக் கதைக்கு ஏற்றமாதிரி, ரொம்ப ரொம்பக் கஷ்டப்படுறவன் என்ன பண்ணுவான்னு, அத்தியாவசியமான லைட்டிங்கிலேயே கதையை நகர்த்தினேன். அவருடைய ஒவ்வோரு விஷயங்களுக்கும் ஏத்த மாதிரி லைட்டிங் எல்லாத்தையும் மாற்றுவேன். எல்லோரும் படம் பார்த்துவிட்டு கதைக்கு ஏற்றமாதிரி லைட்டிங் இருக்கு அப்படினு சொன்னப்போ, 'ஏதோ ஒன்று வித்தியசமாக செய்துவிட்டோம்'ங்கிற திருப்தி எனக்கு." 

ராம்ஜி'

“அரவிந்த் சாமியுடம் 'தனிஒருவன்' படத்தில் பணிபுரிந்த அனுபவம்?”

“எப்போதும் அழகான நபர் அவர். அவரைக் கேமராவில் காட்டும்போது, அவர் அழகையும் தாண்டி ஏதாவது ஒன்றைக் காட்ட வேண்டுமென்றுதான், எந்தக் கேமராமேனாக இருந்தாலும் விரும்புவார். அவருடைய ஸ்கின் டோன்கூட ரொம்ப நல்லாயிருக்கும். அவருடைய அழகுக்கு ஏற்றமாதிரி எந்தவொரு லைட்டிங் வைத்தாலும் மேட்ச் ஆகும். கேமராமேனுக்கு ஏற்ற ஸ்கின்டோன் அவருடையது. கதையைப் புரிந்து கொண்டு வேலை பார்ப்பார். அதற்கான ஹார்ட் ஒர்க் அவரிடம் இருக்கும். எனக்குப் பிடித்த நடிகர்களில் அவரும் ஒருவர்."

Do you like the story?

Please Appreciate the Author by clapping!