சாய் பல்லவி இஷ்டமான இடத்தில் மஹிமா... இன்ஜினீயர் ஜி.வி.பிரகாஷ்..! - ஐங்கரன் அப்டேட்

லோக்காலிடி பாய்ஸ்களில் ஒருவராகவே நடித்துவந்த ஜி.வி,பிரகாஷ், ஐங்கரன் படத்தில் இன்ஜினீயராக நடித்து வருகிறார். 'ஐங்கரன்' படம் பற்றிய அப்டேஸூக்காக படத்தின் இயக்குநர் ரவி அரசிடம் பேசினோம். ''ஈட்டி படத்துக்கு ஹிட் கொடுத்து விட்டேன். கண்டிப்பாக இந்தப் படமும் ஹிட் அடிக்கும்’’ என்று நம்பிக்கையுடன் பேச ஆரம்பிக்கிறார் டைரக்டர் ரவி அரசு. ’’வெற்றிமாறனிடம் இணை இயக்குநராய் வேலை பார்த்தேன். அப்போதிலிருந்தே என்னுடைய சினிமா கெரியர் ஆரம்பமாகிவிட்டது. 

ஐங்கரன்

'ஈட்டி' படத்துக்கு முன்பாகவே இந்தப் படத்தின் ஒன் லைன் வைத்திருந்தேன். 'ஈட்டி' படம் முடிந்தவுடன் இந்தப் படத்தின் ஃபுல் ஸ்க்ரிப்ட்டையும் எழுத ஆரம்பித்துவிட்டேன். `ஐங்கரன்' ஆக்‌ஷன் த்ரில்லர் படம். இந்தப் படத்துக்காக ஸ்க்ரிப்ட் எழுதும்போது இந்தக் கதையை விஜய் சேதுபதி, தனுஷ் இவர்களை மைண்ட்டில் வைத்துதான் எழுதினேன். ஆனால், இவர்கள் யாரிடமும் படத்தின் கதையைக்கூட சொல்லவில்லை. கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர்களால் கதைகூட கேட்க முடியவில்லை. அதன் பிறகு இந்த ஸ்க்ரிப்ட்டில் ஜி.வி நடித்தால் எப்படி இருக்கும்னு யோசித்து அவருக்கு ஏற்ற மாதிரி ஸ்க்ரிப்ட்டில் சில மாற்றம் செய்து ஜி.வி.யை நடிக்க வைக்க முடிவு பண்ணினேன். என்மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக படத்தின் கதைகூட கேட்காமல் ஜி.வி நடிக்க வந்துவிட்டார். 

ஐங்கரன்

இந்தப் படம் கண்டிப்பாக ஜி.வி.க்குப் பெரிய திருப்புமுனையாக இருக்கும். இதற்கு முன்னாடி எந்தப் படத்திலும் ஜி.வி. செய்யாத ஆக்‌ஷன் காட்சிகளை இந்தப் படத்துக்காகச் செய்திருக்கிறார். இந்தப் படத்தில் ஜி.வி கேரக்டர் பெயர் என்ன என்று தற்போது சொல்ல முடியாது. ஏன்னா, அதில் சஸ்பென்ஸ் இருக்கு. அதை வைத்துதான் கதையே இருக்கிறது. படத்தில் நாயகியாக மஹிமா நம்பியார் நடித்திருக்கிறார். நர்ஸ் கேரக்டரில் மஹிமா நடித்திருக்கிறார். ஒரு ஆக்‌ஷன் படத்தில் ஹீரோயினுக்கு ஏற்ற ஒரு வலுவான கேரக்டர். மஹிமா கேரக்டருக்காக முதலில் மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவியை நடிக்க வைக்க முயற்சி பண்ணினேன். சாய் பல்லவிக்கு கதை ரொம்ப பிடித்திருந்தது. ஆனால், அதே கால்ஷீட் பிரச்னை காரணமாக அவராலும் பண்ண முடியவில்லை. அதன்பிறகு ஜி.விக்கு ஏற்ற ஜோடி யாரென்று யோசித்தப்போது மஹிமா நினைவுக்கு வந்தார்.  படத்தின் பாடலும் ஜி.வி. இசையில் ஹிட் அடிக்கும். என்னுடைய முந்தைய படத்துக்கும் ஜி.விதான் இசையமைத்தார். அந்தப் படத்தில் 'மொசக்குட்டியே' பாடல் நல்ல ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் அடிக்கும் வகையில் இருக்கும். ஷூட்டிங் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் நான்கு நாள்களில் ஷூட்டிங் முடிய இருக்கிறது. 

ஐங்கரன்

'ஈட்டி' படத்தில் என்னுடன் வேலை பார்த்த அதே டீம் இந்தப் படத்திலும் தொடர்கிறது. என்னுடைய டீமை விட்டுவிட்டு வேறு டீம்முடன் பணியாற்ற எனக்கு மனசு வரவில்லை. இந்தப் படத்தில் எனக்குப் பெரிய சப்போர்ட்டாக ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யூ இருந்தார். படம் ரிலீஸூக்குப் பிறகு டெக்னீஷியன் டீம்முக்கு நல்ல பேர் கிடைக்கும். ஏப்ரலில் 'ஐங்கரன்' ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்’’ என்றார் இயக்குநர் ரவி அரசு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!