Published:Updated:

``கீர்த்தி சுரேஷ் சிஸ்டர்... பயப்படாதீங்க..!” - ஜாலி கேலி விக்னேஷ் சிவன்

பிர்தோஸ் . அ
``கீர்த்தி சுரேஷ் சிஸ்டர்... பயப்படாதீங்க..!” - ஜாலி கேலி விக்னேஷ் சிவன்
``கீர்த்தி சுரேஷ் சிஸ்டர்... பயப்படாதீங்க..!” - ஜாலி கேலி விக்னேஷ் சிவன்

“ஸ்பெஷல் 26” இந்திப் படத்தின் ரீமேக் தான் ‘தானா சேர்ந்த கூட்டம்’னு ஒரு கூட்டம் சொல்லிட்டு இருந்த போது, அதை பத்தி எந்த பதிலும் சொல்லாமல் முழு படத்தையும் வெற்றிகரமாக ஷூட் செய்து முடித்து விட்டனர் 'தானா சேர்ந்த கூட்டம்' படக்குழு. அனிருத் இசையில் படக்குழு வெளியிட்ட 'சொடக்கு' பாடல் இணையத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. 

இதற்கு முன்னரே சூர்யாவின் பிறந்தநாளன்று இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது. பொங்கல் ரேஸ்லில் கலந்து கொள்ள போகும் இந்தப் படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், தம்பி ராமைய்யா, ரம்யா கிருஷ்ணன், கார்த்தி, செந்தில் என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைப்பெற்றது. அப்போது படத்தில் நடித்தவர்கள் மற்றும் படத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

விழாவில் விக்னேஷ் சிவன் பேசும் போது, “இந்தப் படம் பண்ணுற வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஞானவேல் ராஜா சாருக்கு என் முதல் நன்றி. சூர்யா சாரை வைத்து படம் பண்ணலாம்னு சொன்னவுடன் எனக்கு ஒரிஜினல் ஸ்க்ரிப்ட் பண்ணி பண்ணணும்னுதான் ஆசை. பட், இந்தப் படத்தை உடனே ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அதனால், ஒரு இன்ரஸ்டான  ஃபிளாட் எடுத்துகிட்டு வேலை பார்க்கலாம்னு முடிவு பண்ணினேன். அதனால், 'ஸ்பெஷல் 26' படத்தை ரீமேக் செய்யலாம்னு அந்தப் படத்தை ரீமேக் செய்ய முடிவு பண்ணினேன். 

இந்தப் படத்தின் உள்ளே போகும் போது சில மாற்றங்களை ஸ்க்ரிப்ட்டில் பண்ணினேன். படம் பார்க்கும்போது அதை ஃபீல் பண்ணுவீங்க. படம், 1987ல் நடக்கிற மாதிரியான கதை. அதை அப்படியே 2017வது வருஷத்தில் நடக்கிற மாதிரி எடுத்தேன். இப்போது இருக்கின்ற ஆடியன்ஸூக்கு ஏத்த மாதிரி எண்டர்டெயின்மென்ட் படமாக எடுத்திருக்கிறேன்.

நான் ஸ்கூல் படிக்கும் போது ‘காக்க காக்க’ படம் ரிலீஸ் ஆச்சு. அந்தப் படத்தை பார்க்கும் போதுதான், சினிமாக்குள்ளே போய் படம் பண்ணணும்னு ஆசை வந்தது. என்னை மாதிரி நிறையப் பேருக்கும் அந்த ஆசை வந்திருக்கு. எல்லோருடைய ஆசையை தூண்டிய படம் 'காக்க காக்க' அதில், சூர்யா சார் ஆக்டிங் செம்மையா இருக்கும். 

அந்தப் படத்தை பார்த்த எனக்கு சூர்யா சாரை மீட் பண்ணியது நம்பமுடியாத விஷயமாக இருந்தது. அவரை மீட் பண்ணி பேசியவுடனே இந்தப் படம் அடுத்த ஸ்டேஜூக்கு போய்விட்டது. அதற்கு சூர்யா சாருக்குதான் நன்றி சொல்லணும். 'தேங்க் யூ சூர்யா சார்'. எனக்கு பெரிய வாய்ப்பை கொடுத்தார். 

இந்தப் படத்தில் ஒரு முக்கியமான ரோல் இருந்தது. அதை ரம்யா கிருஷ்ணன் மேம் பண்ணினால் நன்றாக இருக்கும்னு அவங்களிடம் கேட்டு பார்த்தோம். அப்போதுதான் 'பாகுபலி' படத்தின் கிரேஸ் நம்ம எல்லோரிடமும் இருந்தது. போய் கேட்டோம். ஸ்க்ரிப்ட் கேட்டவுடன் ஓகேனு சொல்லிட்டாங்க. இந்தப் படத்தில் அவங்க நடித்தற்கு பெரிய நன்றி.  இதை சொல்லலாமனு எனக்கு தெரியல. கமல் சாரிடம் எப்படி ஒரு ஒர்க் குவாலிட்டி இருக்குமோ, அதை ரம்யா கிருஷ்ணன் மேம்மிடம் பார்க்கலாம். அவர் நடிகைகளில் கமல். ரம்யா மேம்மை ஷூட் செய்யும் போது, ''என்னமா நடிக்குறாங்க''னு நினைப்பேன்.  

படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ், என்னை பலமுறை மேடையில் 'ப்ரதர் ப்ரதர்'னு அழுத்தி சொல்லிட்டாங்க. பயப்படுறாங்க. கீர்த்தி சுரேஷ் சிஸ்டர் அவர்களே பயப்படாதீங்க. நீங்க சேஃப் ப்ளேசில்தான் இருக்கீங்க. இந்தப் படம் முழு காதல் படம் இல்லை. ஆனாலும், சில ரொமாண்டிக் காட்சிகளும் படத்தில் இருக்கும். அதற்கு எல்லாத்துக்கும் ஒத்துழைத்து நடித்தார் கீர்த்தி சுரேஷ். முக்கியமாக நம்ம ஊர் பாஷை தெரிஞ்சவங்க கூட ஒர்க் பண்ணுறது ஹாப்பியாக இருக்கும். எடிட்டிங்கில் உட்காரும் போது, அவங்க தமிழில் பேசி நடித்திருந்ததைப் பார்க்கும் போது நல்லாயிருந்தது. அவங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கு. ஆல் தி பெஸ்ட் சிஸ்டர். 

இந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டர் கிரண் என் ப்ரதர் மாதிரி. நல்லா ஒர்க் பண்ணி இருக்கார். இந்தப் படத்தில் சுரேஷ் மேனன் சார் நடித்திருக்கிறார். அவரை பார்க்கும் போது கொஞ்சம் ரஃப்பான ஆள் மாதிரி தெரியும். ஆனால், ரொம்ப மென்மையான மனிதர். என்னுடைய 'நானும் ரெளடி தான்' படம் ஆகட்டும், அதற்கு முன்னாடி பண்ணிய மியூசிக் ஆல்பம் ஆகட்டும் எல்லாத்துக்கும் அனிருத் பெரிய சப்போர்ட்டாக இருந்தார். என்னுடைய கண்ணாடிதான் அனிருத்னு நான் தைரியமாக சொல்லலாம். என் வாழ்க்கையில் எனக்கு பெரிய சப்போர்ட்டாக இருந்த ஆள் அவர்தான். இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் பார்க்கும் போது என் கண் முன்னே அனிருத்தான் வருகிறார். தேங்க் யூ அனி, லவ் யூ சோ மச். 

இந்தப் படத்தில் செந்தில் நடித்திருக்கிறார். பெரிய லெஜன்ட் ஆக்டராக இருந்தாலும், எங்களுடன் சகஜமாக பழகினார். நவரச நாயகன் கார்த்தி சாரை லேட்டாகதான் அப்ரோச் பண்ணினோம். அவரும் ரொம்ப ஆர்வமா நடித்தார். பெரிய ஆக்டர், ஆக்டர்ஸ் எல்லாம் இந்தப் படத்தில் நடிச்சிருக்காங்க. பக்காவான என்ட்ர்டெயின்மென்ட் படமாக 'தானா சேர்ந்த கூட்டம்' இருக்கும். 

முக்கியமாக ஆர்.ஜே.பாலாஜிக்கு பெரிய நன்றி சொல்லணும். ரொம்ப குட்டியான ரோல் பண்ண மாட்டான்னுதான் நினைத்தேன். பட், பண்ணினான். இதுவரைக்கும் ஆர்.ஜே.பாலாஜி நடிச்சு பார்த்ததில்லை. ஃபர்ஸ்ட் டைம் இந்தப் படத்தில் பார்த்தேன். இதுதான் நடிப்பில் அவனுடைய முதல் படம்னு சொல்லலாம். அவனுக்கு பெரிய தேங்க்ஸ். அவனுக்கு நன்றி சொல்ல மறந்து விட்டால் நாளைக்கு எதாவது வீடியோவில் நம்மை கலாய்த்து விடுவான்” என்று ஜாலியாக பேசி முடித்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

பிர்தோஸ் . அ

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..
வ.யஷ்வந்த்