யுவனின் டான்ஸ், ஆர்.ஜே-வாகிய தமன்னா, ஷாமிலி என்ட்ரி - சினிமா அப்டேட்ஸ் #QuickSeven

'மெட்ரோ' படத்தில் அறிமுகமான சிரிஷ் தற்போது 'ராஜா ரங்குஸ்கி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் வரும் ஒரேயொரு பாடலுக்கு மட்டும்  இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா நடனமாட இருக்கிறார். இதில் சாந்தினி, அனுபமா குமார், சத்யா உட்பட பலர் நடிக்கின்றனர். கெளதம் கார்த்தியின் 'பர்மா' படத்தை இயக்கிய தரணீதரன் இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதற்கு முன்பு சரோஜா பட பாடலில் சிறப்புத் தோற்றத்தில் யுவன் நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

#QuickSeven

மிழில் 'ஸ்கெட்ச்' படத்திற்குப் பிறகு, 'குயின்' தெலுங்கு ரீமேக்கில் பிஸியாக நடித்து வருகிறார் தமன்னா. மேலும், ஜெயேந்திரா இயக்கும் 'நா நுவ்வே' படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் கலக்கல் ரேடியோ ஜாக்கியாக நடிக்கிறார். இதற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இவரின் ஒளிப்பதிவில் தமன்னா நடிப்பது இதுவே முதன்முறை. ரேடியோவில் காதலர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை மையமாக வைத்துதான் இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் இன்று யூ-டியூபில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதில் தமன்னா ரேடியோ ஜாக்கியாக வரும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. 

Tamanna

'வேலைக்காரன்' படத்துக்கு அடுத்தபடியாக இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தமன்னா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்திற்கு 'சீமராசா' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுவரை அதிகாரபூர்வமான டைட்டில் அறிவிக்கப்படவில்லை. இப்படம் ஏப்ரலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஷூட்டிங் கிட்டத்தட்ட 75% நிறைவாகியுள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தைப் பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன. 'இன்று நேற்று நாளை' என்ற திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமார் ராஜேந்திரனின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். மேலும், இப்படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர் ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படத்தில் இவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கவிருக்கிறார் என்ற தகவலை படக்குழுவினர் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இதற்கு முன்பு ரகுல் ப்ரீத்சிங்தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. பிறகு, சாய்பல்லவி நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியும் வெளியாகியது. மேலும், சூர்யாவுக்கு ஜோடி சாய்பல்லவியா, ராகுல் ப்ரீத்சிங்கா என்ற கேள்வி ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட் எனவும், இரு ஹீரோயின்களும் படத்தில் நடிக்கின்றனர் எனவும் படக்குழு உறுதி செய்துள்ளது. 

Surya 36

'காற்று வெளியிடை'க்கு அடுத்தபடியாக மணிரத்தினம் இயக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் தற்போது இவரது ரோல் மாற்றியமைக்கப்பட்டு படம் முழுவதும் பயணிக்கும் முழு ரோலில் நடிக்கவிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படவிருக்கிறது. இதற்காக விஜய் சேதுபதி தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறார். இதில் அரவிந்த் சாமி, சிம்பு, பகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோரும் நடிக்கின்றனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்துக்கான பாடல் பதிவு கவிஞர் வைரமுத்து முன்னிலையில்  கோவாவில்  நடைபெற்றது. சந்தோஷ் சிவன் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குழந்தை நட்சத்திரம் ஷாமிலி 'ஓய்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும், தமிழில் 'வீரசிவாஜி', மலையாளத்தில் 'வள்ளியும் தெட்டி புள்ளியும் தெட்டி' ஆகிய படங்களில் நடித்தார். இதற்கடுத்து சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்த ஷாமிலி, தற்போது தெலுங்குப் படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். நாக சௌரியா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் பெயர் 'அம்மம்மா கரி இலு'. இதில் இவருக்குச் சண்டைக்காட்சிகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுந்தர் சூர்யா இயக்கும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

ஷாமிலி

'பாஸ்கர் த ராஸ்கல்', 'மதுரவீரன்', 'குலேபகாவலி', 'தானா சேர்ந்த கூட்டம்', 'ஸ்கெட்ச்', 'மன்னர் வகையறா' என ஆறு திரைப்படங்கள் பொங்கல் அன்று வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதில், 'தானா சேர்ந்த கூட்டம்' படத்துக்கான ரிலீஸ் செய்தி உறுதி செய்யப்பட்ட தினத்தில் 400-க்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடவும் முடிவு செய்யப்பட்டது. எஞ்சியுள்ள 500 திரையரங்குகளை மற்ற 5 திரைப்படங்களும் பகிர்ந்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டின் முன்னணி விநியோகிஸ்தர்களிடம் 'குலேபகாவலி' உரிமையை இதன் தயாரிப்பாளர் வழங்கியுள்ளார். 'குலேபகாவலி' தயாரிப்பாளரின் இந்த அதிரடி முடிவால், 'பாஸ்கர் த ராஸ்கல்', 'மதுரவீரன்' ஆகிய படங்கள் போட்டியிலிருந்து விலகியுள்ளன. மேலும், 'மன்னர் வகையறா' இன்னும் தணிக்கை ஆகாததால், இப்படமும் பொங்கலுக்கு வெளியாகாத சூழ்நிலையே தற்போது வரை நிலவிவருகிறது. 

Gulebagavali

Do you like the story?

Please Appreciate the Author by clapping!