Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

“வைரமுத்துவுக்காக ‘அந்த’ நடிகர் ஏன் குரல் கொடுக்கவில்லை?” பாரதிராஜா

இருபது வருடங்களுக்குமுன் ‘கடவுள்’ என்ற படத்தை இயக்கினார் வேலுபிரபாகரன். மாபெரும் வெற்றி பெற்ற அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை நேற்று தொடங்கினார். தற்போது இளையராஜா இசையமைப்பில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி வேலுபிரபாகரன் 'கடவுள்-2' படத்தை இயக்குகிறார். படத்தின் துவக்க விழாவில் நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா, பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கடவுள் 2 படதுவக்க விழா

பாரதிராஜா பேசும்போது, “உலகம் முழுவதும் பல்வேறு கடவுள்கள் இருக்கின்றனர். அதுதான் இங்கு பிரச்னை. முருகன் ஆறு படைகள் கொண்டு தமிழனை ஆண்ட மனிதன். அதனாலேயே அவனை முப்பாட்டன் எனக் கூறுகிறோம். அந்த முருகனின் கையிலிருக்கும் வேல் அறிவை குறிக்கும். அத்தகைய கூர்மையான அறிவையுடையவன், வேலுபிரபாகரன். நேர்கொண்ட கொள்கையில் தவறாமல் வாழ்ந்து இருந்தவன் வேலுபிரபாகரன். எத்தகைய பொருளாதார நிலையிலும் தன் வழி தவறாத கொள்கையாளன்.

பா.ஜ.க கட்சியின் தமிழக ஆட்சி வேக்கையைப் பற்றி பேசும்போது

"எங்க தாத்தனுங்க கொடுத்த விதைகளை விதைக்காமல்விட்டதால்  நிலம் புண்பட்டு, புதர் பிடித்து பாம்புகள் அதிமாக கூட்டம் கூட்டமாக வந்துவிட்டது. எங்களுக்குப் பாம்பு விரட்டத் தெரியும், மீண்டும் விதைகளை விதைத்துள்ளோம், முதல் விதைதான் சீமான். எனது படத்தில் மத அடையாளங்களான சிலுவையையும், பூணுலையும் அறுத்தபோது இதைப் பார்க்க அண்ணாவும், பெரியாரும் உயிருடன் இல்லையே என எம்.ஜி.ஆர். என்னிடம் வருத்தப்பட்டார். பல மேடைகளில் பாராட்டியும் உள்ளார். அப்போது எங்கு போனது  இவர்களின் தைரியம். வீட்டைப் பூட்டி சந்தோஷமாக இருக்கலாம் என்று பார்த்தால் கொல்லைப்புறமாக வருகிறார்கள். அதானால்தான், வைரமுத்து விவகாரத்தைப் பூதாகரமாக சித்திரிக்கிறார்கள். இதைக் காரணமாகக் காட்டி கொல்லைப் புறமாக வர எண்ணாதீர்கள்... கையில் ஆயுதமேந்த வைக்காதீர்கள் மீண்டும் எங்களை குற்றப்பரம்பரை ஆக்கிவிடாதீர்கள்" என எச்சரித்தார்.

பாரதிராஜா

வைரமுத்துவைக் கண்டனத்திற்குரிய வகையில் பேசியவர்களைக் கடிந்து பேசியபோது,

பிரதேசம் தாண்டி வந்த பரதேசிகளிடம் பேசும் நேரமாக ஹெச். ராஜா பேசியதுபோல் அவரை பார்த்து அதே வார்த்தையில் ஏசி தாழ்வாக பேச இயலாது. வைரமுத்துவைப் பற்றி இழுக்கு பேசுவது என் மண்ணைப் பற்றி பேசுவதற்குச் சமம், என் வைகையை கலங்கப்படுத்துவதற்குச் சமம், எனது மேற்குத் தொடர்ச்சி மலை எரிக்கப்படுவதுபோல் உணர்கிறேன். எனது வைகையை நஞ்சாக்க நினைத்தால் சும்மா விடமுடியாது. வைரமுத்து தனிமனிதன் கிடையாது. அவருக்கும் தமிழுக்கும் உள்ள உறவு பெரியது. அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் மகத்தானவை.    

அரசியலுக்கு வரும் முன்னணி நடிகரை சூசகமாகச் சாடினார் பாரதிராஜா

என்னையும் சேர்த்துச் சொல்கிறேன், சினிமாக்காரர்கள் விசுவாசம் இல்லாதவர்கள். நியாயமாக எங்கிருந்து குரல் வரவேண்டுமோ அது வரவேயில்லையே. எவன் வார்த்தைகளை வடித்தெடுத்து, எவன் தனது வார்த்தைகளால் உங்களுக்கு அடையாளம் கொடுத்தானோ, அவனுக்கு அவநிலைமை ஏற்படும்போது ஏன் நீங்கள் குரல் எழுப்பவில்லை. எத்தனை பாடல்களை உங்கள் வாய்வழி கேட்டு உங்கள்  கருத்துகள் என நம்பியிருப்பார்கள். இன்று நீங்கள் அறுவடை செய்யலாம் என்று எண்ணுகிறீர்களே... உங்களுக்குப் பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்களைக் கட்டுப்படுத்தாமல், நீங்கள் ஆட்சிக்கு வருவதை நினைத்தால்... எனக்கு பயமாக இருக்கிறது" எனச் சாடினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement