'' ‘படைவீரன்’ எனக்கு கம்பேக்!’’ - கார்த்திக் ராஜா


“சினிமாவைவிட்டு எப்போதும் நான் ஒதுங்கினதில்லை. இன்னும் படங்களுக்கு பின்னணி இசை பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். இசையில், கற்றது கையளவு கல்லாதது உலகளவு!'' என்கிறார், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா. 

கார்த்திக் ராஜா

’’கார்த்திக் ராஜா குறிப்பிட்ட சில படங்களில் மட்டும் பின்னணி இசைக்குப் பணிபுரிய என்ன காரணம்?’’ 

“என் இசையில் ‘படைவீரன்’ படம் ரிலீஸாகப் போகுது. இந்தப் படத்தை என் கம்பேக் படம்னு நிறையபேர் சொல்றாங்க. அதுல எந்தத் தப்பும் இல்ல. சினிமாவுடன் தொடர்புல இருந்துக்கிட்டேதான் இருக்கேன். ‘தில்லுக்குத் துட்டு’, ‘அரண்மனை’ படங்களில் பேக் க்ரவுண்ட் மியூசிக் மட்டும் பண்ணினேன். சுந்தர்.சி சார், 'அரண்மனை' படத்துக்காக என்னை அப்ரோச் பண்ணப்போ, 'படம் பார்க்குறேன், பிடிச்சிருந்தா பண்றேன்'னு சொன்னேன். படம் பார்த்தேன்; பிடிச்சிருந்துச்சு. பண்ணிட்டேன்.” 

கார்த்திக் ராஜாவுக்கு நெருங்கிய நண்பர்கள் யார்?

“நான் கொஞ்சம் கூச்ச சுபாவம். நல்லா பேச ஆரம்பிச்சாதான், ஒருத்தரோட நெருக்கம் ஆவேன். சென்னையைவிட மும்பையில்தான் எனக்கு நண்பர்கள் அதிகம். அதிகமா எங்கேயும் வெளியே போகமாட்டேன். பொது நிகழ்ச்சிகளிலும் அதிகமா கலந்துக்கமாட்டேன்!"  


'சகாப்தம்' படத்துக்கு இசையமைத்தது பற்றி?

அம்மாவுக்கு விஜயகாந்த் சார் ஃபேமிலியை ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே அவங்க குடும்பம் எங்களுக்கு நல்ல பழக்கம். அப்போ, விஜயகாந்த் சார் போன் பண்ணி, 'பையன் முதல்முறையா நடிக்கிற படத்துல நீங்க மியூசிக் பண்ணா நல்லாயிருக்கும்'னு கேட்டார், எனக்கும் சந்தோஷம். சரினு சொல்லிட்டேன்."

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!