Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’’அடுத்தடுத்து ப்ரேக் அப் ஆகுதேன்னு, உங்க கேரக்டரை மாத்திக்காதீங்க..!’’ - டேனியல் #BreakUpNallathu #VikatanExclusive

’ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படத்தின் மூலம் டாப் காமெடியன்கள் லிஸ்டில் இணைந்திருக்கும் டேனியல்தான், தற்போது இளைஞர்களின் ஃபேவரைட். ஆள் பார்ப்பதற்கு ஐந்தாறு ப்ரேக்அப்களை கடந்தவர் போல் இருப்பதால், அவருடைய ப்ரேக் அப் கதைகளை கேட்க கால் செய்தேன். ஓவர் டு டேனியல்...

டேனியல்

உங்களோட முதல் லவ் எப்படி ப்ரேக் அப் ஆச்சு..?

’’நான் ஸ்கூல் படிக்கும்போது ரொம்ப நாளா ஒரு பொண்ணை ஃபாலோ பண்ணிட்டு இருந்தேன். சரி லவ்வை சொல்ல போலாம்னு போய் பேசுனா, ‘நீ கறுப்பா இருக்க. அதுனால செட்டாகாது போ’னு சொல்லிட்டாங்க. அதான் எனக்கு நடந்த முதல் ப்ரேக் அப்.’’ 

'ப்ரேக் அப்'ல இருந்து வெளிய வரணும்னா என்ன  வழி?

’’உடனே வேற பொண்ணை பார்க்கணும். நம்ம வாழ்க்கையில லவ் ஒரு பார்ட். அந்த பார்ட் நிறைய முறை நம்ம வாழ்க்கையில வரலாம். அதுனால, ஒரு ப்ரேக் அப் ஆனதுக்கு பின்னாடி சோகமா உக்காராம அதுல இருந்து மீண்டு வர இன்னொரு லவ் உடனே தேவை.’’

என்னென்ன காரணங்களுக்காக ப்ரேக் அப் ஆகும்னு நினைக்கிறீங்க..?

’’அதை யாராலும் சொல்ல முடியாது. ஏன்னா, ஒவ்வொரு காதலும் ஒவ்வொரு மாதிரி ப்ரேக் அப் ஆகுது. என் ஃப்ரெண்ட் ரொம்ப வருஷமா ஒரு பொண்ணை காதலிச்சான். அவனோட லவ்வர் ஒரு நாள் இவன்கிட்ட சாப்பாடு வாங்கிட்டு வர சொல்லியிருக்காங்க. இவன் ஏதோ ஒரு வேலையா பிஸியா இருக்க, வேறு ஒரு ஆள் மூலமா சாப்பாடு கொடுக்க வச்சிருக்கான். ’ஒரு சாப்பாட்டு விஷயத்துலேயே உன்னால என்னை பாத்துக்க முடியலையே, நீ எப்படி என்னை வாழ்க்கை ஃபுல்லா பாத்துக்க போற’னு சொல்லிட்டு, அந்தப் பொண்ணு ப்ரேக் அப் பண்ணிட்டாங்க. நான் என் ஃப்ரெண்ட்கிட்ட, ‘ஏன்டா பல வருஷ காதல்னு சொன்ன, இப்படி பார்சல் சாப்பாடுனால உன் லவ் ப்ரேக் அப் ஆகிடுச்சே’னு கேட்டேன். இப்படி என்னென்னமோ காரணங்களுக்காக லவ் ப்ரேக் அப் ஆகுது தலைவா. யாராவது ஒரு ஆள் இந்த காரணங்களை எல்லாம் தொகுத்து புத்தகமா போட்டா, சேல்ஸ் பிச்சுக்கும்.’’

டேனியல்

ஒரு மனுஷனுக்கு எத்தனை தடவை காதல் வரும்னு நினைக்கிறீங்க?

‘’எத்தனை தடவை வேணும்னாலும் வரலாம். ஏன்னா, நமக்கான சோல்மேட் யாருன்னு நமக்கு தெரியுற வரை லவ் வந்துட்டுதான் இருக்கும். இதுதான் இயற்கை.’’

காதல் தோல்விக்கு தாடி வைக்கிறது, சரக்கு அடிக்கிறதுனு இருக்கிறவங்களை எப்படித் திருத்தலாம்?

’’அவங்களை ஏன் திருத்தணும்? அதெல்லாம் ஒரு ஃபீலிங். என்னோட லவ் ப்ரேக் அப் ஆனதுக்கு அப்பறம் எனக்கு தாடி வளரலையேனு ஃபீல் பண்ணியிருக்கேன். ப்ரேக் அப் ஆன சில நாள் இப்படிதான் இருக்கும். அதுக்கப்பறம் அது சரியாகிடும். அதுனால அவங்களை திருத்தணும்னு அவசியம் இல்லை.’’

ப்ரேக்அப்ல இருந்து வெளியே வந்ததுக்குப் பிறகும், சில நண்பர்கள் அதை ஞாபகப்படுத்திக்கிட்டே இருப்பாங்க. அதை எப்படி சமாளிக்கிறீங்க?

‘’யப்பா... அந்த மாதிரி நிறைய பேரு இருக்காங்க. எந்த விஷயம் பேசுனாலும் கடைசியா லவ் மேட்டர்ல வந்துதான் நிப்பானுங்க. ஆனால், அந்த மாதிரி நண்பர்களும் நமக்கு வேணும். ஏன்னா, காதல் தோல்விக்கு அப்புறமா நாம ஃபீல் பண்ணிட்டு இருக்கும்போது, இப்படி பேசுனா கோபம் வரும். அதே கொஞ்ச நாளுக்கு அப்பறம் அதுதான் நமக்கு என்டர்டெயின்மென்ட். நம்மளை நார்மல் ஆக்குறதே அவங்கதான்.’’

டேனியல்

ப்ரேக்அப் ஆனதுக்குப் பிறகு அனலைஸ் பண்ணுவீங்களா, இல்லை விட்ருவீங்களா?

‘’விட்டுடணும். ஏன்னா, என்னை ஒரு பொண்ணு கறுப்பா இருக்கனால வேணாம்னு சொல்லிட்டு போனாங்க. இன்னைக்குவரைக்கும் அந்த வார்த்தை என்னை டிஷ்டர்ப் பண்ணிட்டேதான் இருக்கு. அதுனால, அதை கேர் பண்ணிக்காம போயிடணும். ஒவ்வொரு ப்ரேக் அப் ஆனதுக்குப் பிறகும் அதை அனலைஸ் பண்ணி உங்க கேரக்டரை நீங்க மாத்திட்டே இருந்தா, கடைசியில நீங்க, நீங்களா இருக்க மாட்டீங்க. உங்களை அப்படியே ஏத்துகுற பொண்ணு கண்டிப்பா வருவா, அதுவரைக்கும் காத்திருக்கலாம்.’’

'காதல்தோல்வி' பாடல்கள்ல உங்களோட பெஸ்ட் சாய்ஸ் என்ன?

‘’ ‘இதற்குதானே ஆசைப்பாட்டாய் பாலகுமாரா’ படத்தோட ‘ப்ரே பண்ணுவேன்’ பாட்டுதான். ஏன்னா, காதல் தோல்வினால சோகமாத்தான் பாடணும்னு இல்லாம, ஜாலியான ஒரு பாட்டா இருக்கும்.’’

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement