வெளியிடப்பட்ட நேரம்: 21:24 (14/02/2018)

கடைசி தொடர்பு:21:24 (14/02/2018)

"ரெண்டாம் வகுப்பு படிக்கும்போது முதல் காதல்... ஷங்கர் அண்ணன்கிட்ட சொன்னேன்!" - பார்வதி நாயர் #LetsLove

"என்கிட்ட காதல் பத்தியா.. நான் யாரையுமே லவ் பண்ணலேயே... ஓகே கேளுங்க"னு நாம் கேட்கப்போகும் கேள்விக்குத் தயார் ஆகிறார், 'என்னை அறிந்தால்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான மலையாளப் பைங்கிளி நடிகை பார்வதி நாயர். 

பார்வதி நாயர்

உங்கள் வாழ்க்கையின் முதல் புரபோஸ்?

ரொம்ப சின்ன வயசுலதான் ஃபர்ஸ்ட் புரொபோஸ் நடந்துச்சு. அப்போ, நான் ரெண்டாவது படிச்சுக்கிட்டு இருந்தேன். அப்போ, என் கிளாஸ்ல ரெண்டாவது படிச்ச பையன்தான் புரபோஸ் பண்ணினான். அவன் எங்க ஃபேமிலி ப்ரெண்ட்டும்கூட. ஒரு பேப்பரில் 'ஐ லவ் யூ, ஐ லவ் யூ'னு பேப்பர் முழுக்க எழுதிக் கொடுத்தான். அவன் லெட்டருக்கு நான் பதில் சொல்லலை. ஆனா, அவன் லெட்டர் கொடுத்ததை என் பிரதர்கிட்ட மட்டும் சொன்னேன். 

நீங்க யாராவது காதலித்தால் அதை யாரிடம் முதலில் சொல்வீங்க?

என் ப்ரதர் எனக்கு நல்ல ப்ரெண்ட் மாதிரி. ஸோ, என் அண்ணன் ஷங்கரிடம்தான் சொல்வேன். இதுவரைக்கும் எனக்கு யாராவது புரபோஸ் பண்ணினாலும் அவர்கிட்டதான் முதல்ல சொல்லியிருக்கேன். 

நீங்க யாராவது காதலித்தால் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் மாத்துவீங்களா?

யாராவது என்னை உண்மையாகக் காதலித்து, நானும் உண்மையா காதலிச்சா கண்டிப்பா ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் மாத்துவேன். அதுக்கு அவரும் சீரியஸா இருக்கணும்.

உங்க காதலருடன் முதல் செல்ஃபி எங்கே எடுக்கணும்னு ஆசைப்படுறீங்க?

எனக்கு இடம் முக்கியமில்லை. செல்ஃபிக்கும் அது முக்கியம் இல்லை. நாங்க ரெண்டு பேரும் நல்ல புரிதலுடன் இருக்கணும். அன்பா, ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து இருக்கணும். அப்படி இருக்கும் போது எந்த நேரம், எந்த இடமா இருந்தாலும் பரவாயில்லை, செல்ஃபி எடுப்பேன். 

உங்க காதலருடன் வெளியே செல்ல ஆசைப்படுற இடம்?

எனக்கு சுவிஸ் நாடு ரொம்பப் பிடிக்கும். அங்கதான் அவரை முதலில் கூட்டிகிட்டுப் போவேன்.  

உங்களுக்கு எப்படி புரபோஸ் பண்ணுனா பிடிக்கும்?

என்னை நல்லா தெரிஞ்ச ஒருத்தர் எனக்கு எப்படி புரபோஸ் பண்ணினாலும் பிடிக்கும். என்னைப் பொறுத்தவரைக்கும் ஃகிப்ட் பெரிய விஷயமில்லை. அவர் மனசுதான் முக்கியம். என்னை காலம் பூரா ஹாப்பியா வெச்சுக்கணும். அவர்கூட நிறைய டிராவல் பண்ணனும். முக்கியமா, அடிக்கடி லாங் ட்ரைவ் போகணும். 

இந்தக் காதல் படம் மாதிரி, நமக்கும் ஒரு காதல் இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சா, எந்தப் படத்தைச் சொல்வீங்க? 

'நோட் புக்'னு ஆங்கிலத்துல ஒரு படம் இருக்கு. என்னோட ஆல்டைம் ஃபேவரைட் அது. இந்தப் படத்துல வர்ற மாதிரி என்னோட காதலும் அமைச்சா, ரொம்ப நல்லா இருக்கும்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்