'' 'ஹாய், ஹலோ, பிரேக்அப்... இவ்ளோதான்... 'ஐ லவ் யூ'வே குறைஞ்சிருச்சு!" - 'எரும சாணி' விஜய்

"காதலர் தினம் சிங்கிள் பசங்களுக்குக் கோபத்தை வர வெச்சாலும். மிங்கிளா இருக்குறவங்களுக்கு ஸ்பெஷல் தினம்தான். ஆனா, ஒண்ணு. என்னைக்குமே சிங்கிளா இருக்குறதுதான் ஹாப்பி'' எனப் பேச ஆரம்பிக்கிறார், 'எரும சாணி' விஜய். 

எரும சாணி விஜய்

லவ் ப்ரேக்அப் நடந்திருக்கா?

நடக்காம எப்படி.. அப்போ அப்போ பிரேக்அப் நடக்கும். நான் சின்னப் பிள்ளையா இருந்தப்போ பார்த்த லவ் பண்ற பசங்களுக்குப் பிரச்னையா சாதி, பெற்றோர் எல்லாம் இருந்தாங்க. அதனால லவ் பிரேக்அப் ஆச்சு. இப்போ பார்த்தா,  'உனக்குப் பிடிக்கலையா ஓகே பிரேக்அப்', லவ் பண்றப்போவே வேற ஏதாவது பையன் வந்து பேசுவான், அவன் கொஞ்சம் அட்ராக்டிவா இருந்துட்டா, முந்தைய காதல் பிரேக்அப்... இப்படித்தான் போய்க்கிட்டு இருக்கு. உண்மையான காதலே செத்துப் போயிருச்சுனு சொல்லுவாங்கள்ல, அது  உண்மைதான். எனக்கு இப்போ எந்த பிரேக்அப்பும் ஆனதில்லை. எல்லாமே பப்பி லவ்வுல நடந்தது. ஸ்கூல் படிக்கும் போது அழகான பொண்ணு ஸ்டேஜ்ல டான்ஸ் ஆடிச்சுனா, 'என் ஆளு டான்ஸ் ஆடுதுடா'னு சொல்றதுக்காகவே சிலபேரைக் காதலிச்சேன், பிரேக்அப் பண்ணேன்!.

பிரேக் அப்பிலிருந்து எப்படி எஸ்கேப் ஆகுறது?

பிரேக்அப் ஆகுறது முக்கியமான காரணமே காதல்ல சீரியஸா இல்லாததுதான். சீரியஸா லவ் பண்ணுனா என்ன பிரச்னை வந்தாலும் கடைசியிலே ஒண்ணா சேந்துருவீங்க. ஆனா, சீரியஸா லவ் பண்ணலைனா கண்டிப்பா பிரேக்அப் ஆகும். அப்படி ஆகுற பிரேக்அப்புக்கு ஃபீல் பண்ணக் கூடாது. 

எந்தக் காரணத்துக்காக பிரேக்அப் ஆகுதுனு நினைக்குறீங்க?

இந்தக் காலத்துல, ஒரு பொண்ணு போயிட்டு இருக்கும். அப்போ பைக்ல ஒரு பையன் வந்து புரோபஸ் பண்ணாலே லவ் ஓகே ஆயிருது. தவிர வேறொரு பையன் கார்ல வந்துட்டா, இந்த லவ் பிரேக்அப் ஆயிருது. பசங்களைப் பொறுத்தவரை, லவ் பண்ண ஆரம்பிச்சப்போ உடம்பு ஃபிட்டா இல்லாம இருந்திருப்பான். தீடீரென்னு ஜிம்முக்குப் போய் சிக்ஸ்பேக் வெச்சுட்டா, நம்ம பெர்ஷனாலிட்டிக்கு இந்தப் பொண்ணு செட் ஆகலைனு பிரேக்அப் பண்ணிட்டுப் போறான். இப்போ எல்லாம் 'ஐ லவ் யூ'னு சொல்லிட்டு எல்லாம் யாரும் பேசுறதில்லை. ஹலோ, பிரேக்அப்னு சொல்லிட்டுதான் பேச ஆரம்பிக்குறாங்க. 

உங்க வாழ்க்கையிலே நீங்க சந்திச்ச வித்தியாசமான பிரேக் அப்?

ஒரு நாள் என் ப்ரெண்ட் ஒருத்தனுக்கு காலையில 'ஐ லவ் யூ' சொல்லி செட் ஆன காதல், அன்னைக்குச் சாயங்காலமே பிரேக்அப் ஆயிடுச்சு. ஒரு மாசமா அவன் ஒரு பொண்ணு பின்னாடி சுத்தி, அந்தப் பொண்ணை லவ் பண்ண வெச்சுட்டான். ரெண்டு பேரும் லவ் சொன்ன அன்னைக்கு ரெஸ்டாரென்ட் போலாம்னு போனாங்க. அங்கே அவனோட எக்ஸ் லவ்வர் இருந்திருக்கா. இவனைப் பார்த்தவுடனேயே அவ, 'நாம லவ் பண்ணப்போ கொடுத்த ஃகிப்ட் எல்லாம் இப்போவே, திருப்பிக் கொடு. மூணு லட்சம் ரூபாய் உனக்கு செலவு பண்ணியிருக்கேன்'னு சண்டை போட்டிருக்கா. உடனே, புதுசா இவனை லவ் பண்ண பொண்ணு, பிரேக்அப்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க.  

ஒரு மனுஷனுக்கு எத்தனை முறை காதல் வரலாம்?

சாகுற வரைக்கும் காதல் வரும். ஆனா, அந்தக் காதலை அவங்க தக்க வெச்சுக்கணும். பொண்ணு பையனுக்காக தியாகம் பண்ணனும், விட்டுக் கொடுக்கணும். பையன் பொண்ணுக்காக தியாகம் பண்ணி விட்டுக் கொடுக்கணும். அப்போதான் காதல் நிலைக்கும். பலமுறை வர்ற காதலை ஒருமுறையாவது தக்க வெச்சுக்கோங்க. 

காதல் தோல்விக்காக தாடி வைக்குறவங்க, சரக்கு அடிக்குறவங்களை எப்படித் திருத்தலாம்னு நினைக்குறீங்க?

ஆக்சுவலி, காதல் தோல்விக்காக தாடி வெச்சது, சரக்கு அடிச்சதெல்லாம் அந்தக் காலத்திலேயே முடிஞ்சிருச்சு. இந்தக் காலத்துல பையன் தாடி வெச்சிருந்தாதான் பொண்ணுகளுக்கே பிடிக்குது. ஸோ, இப்போல்லாம் தாடி வைக்கிறதே 'இன்னோரு பொண்ணைக் கரெக்ட் பண்ணப்போறேன்'னு கேர்ள்பிரெண்டுக்குச் சொல்றமாதிரிதான். 

உங்க ஃபேவரைட் காதல் தோல்வி பாட்டு?

'அஞ்சல' பாட்டுதான். (வாரணம் ஆயிரம்). பை த பை.. லவ் பிரேக்அப் என்பது இந்தக் காலத்துல சகஜம்பா'னு சிரிக்கிறார் 'எரும சாணி' விஜய். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!