வெளியிடப்பட்ட நேரம்: 21:09 (15/02/2018)

கடைசி தொடர்பு:21:09 (15/02/2018)

"சைக்காலஜிகல், ஹாரர், த்ரில்லர், காமெடி, லவ்... ஆறு பேய்க்கதை!" - '6 அத்தியாயம்' சுவாரஸ்யம்

பல கதைகளைத் தொகுத்து அதனை நேர்கோட்டிற்குள் அடக்குவதே 'ஆந்தாலஜி' சினிமா. வழக்கமான சினிமாவிலிருந்து சற்று மாறுபட்ட ஒன்று. இதுபோன்ற ஜானர்களில் பல சினிமாக்கள் வந்திருந்தாலும், சங்கர் தியாகராஜன் தயாரிப்பில் ஆறு இயக்குநர்களால் உருவாகியிருக்கும் '6 அத்தியாயம்' படத்தில் என்ன ஸ்பெஷல் என்று தெரிந்துகொள்ள ஆறு ஆத்தியாயங்களுள் ஓர் அத்தியாயத்தை இயக்கிய இயக்குநரும், படத்தின் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசருமான கேபிள் சங்கரைத் தொடர்பு கொண்டோம். 

6 அத்தியாயம்

"ஒரு அமானுஷ்யத்தை மட்டுமே கதைக்கருவா வெச்சுகிட்டு சைக்கலாஜிக்கல், பழிவாங்கல், டிபிக்கல் ஹாரர், காமெடி, லவ், பீரியட் ஜானர் என ஆறு விதமான எமோஷனை கொண்டுவரலாம்னு ப்ளான் பண்ணோம். பொதுவா, ஆந்தாலஜி படங்கள்ல கதைகளை இணைக்க ஒரு தொடர்பு ஏற்படுத்துவாங்க. நிறைய கதைகள் ஒரு படத்துக்குள்ளே வர்றதுனால முழுமையா படம் பார்த்த ஃபீல் இருக்காது. அதனால, நாங்க 6புதுசா ஏதாவது பண்ணணும்னு யோசிக்கும்போதுதான், இந்த ஐடியா தோணுச்சு. இதுவரைக்கும் யாரும் பண்ணலை. ஒரு கதை நடக்குதுன்னா, அதோட ப்ரீ-க்ளைமாக்ஸ்ல அதை அப்படியே நிறுத்திட்டு, அடுத்த கதை ஆரம்பிச்சுடும். அப்போ, அந்தக் கதையோட க்ளைமாக்ஸ் என்னன்னு தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கும். அப்படி ப்ரீ-க்ளைமாக்ஸ்ல நிறுத்தின் ஆறு கதைகளுக்குமே கடைசியா ஒவ்வொரு கதைக்குமான க்ளைமாக்ஸ் தொகுப்பா வரும். அதுதான், இந்தப் படத்தோட ஸ்பெஷல்" என்று தங்கள் படத்தின் புதுமையான விஷயங்களை உற்சாகத்தோடு சொல்கிறார், கேபிள் சங்கர். 

6 அத்தியாயம்

"நாங்கள் பேய், அமானுஷ்யம்னு ஏன் தேர்ந்தெடுத்தோம்னா, இந்த முயற்சி முழுக்க முழுக்க பரிசோதனை முயற்சியா மட்டும் இருக்காமல், கமர்ஷியலும் சேர்ந்து இருந்தா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. இந்தப் படத்துக்குள்ள ஆறு படங்கள் (கதைகள்) இருக்கு. மிசை - அஜயன் பாலா, சூப் பாய் சுப்ரமணி - லோகேஷ், சித்திரம் கொல்லுதடி - ஶ்ரீதர் வெங்கடேசன், அனாமிகா - சுரேஷ், சூப்பர் ஹீரோ - கேபிள் சங்கர், இனி தொடரும் - சங்கர் தியாகராஜன். முப்பது கதைகளுக்கு மேல் செலக்ட் பண்ணி, அதுல இந்த ஆறு கதையை ஓகே பண்ணோம். அதுமாதிரி இந்தக் கதைகள் ஒவ்வொன்னுக்கும் தனித்தனி டெக்னீஷியன்கள் வொர்க் பண்ணிருக்காங்க. இந்தப் படத்துக்கான ப்ரோமோ பாடலுக்கு சாம்.சி.எஸ் மியூசிக் பண்ணியிருக்கார். ஆறு இயக்குநர்களும் அவங்கவங்க டீமை வெச்சு முழுசா ஷூட் பண்ணிக் கொடுத்திடணும்னு ப்ளான் பண்ணிட்டுதான் படத்தை ஆரம்பிச்சோம். அவங்க கொடுத்த அந்தப் படத்தை ட்ரிம் பண்ணி, அவங்களை கூட வெச்சுட்டு கதையை டிஸ்டர்ப் பண்ணாம எடிட் பண்ணோம். முதல்ல எடிட் பண்ணாம படத்தை நண்பர்களுக்குப் போட்டுக் காட்டினோம். அதுல அவங்களுக்குப் படம் புரிஞ்சதைவிட எடிட் பண்ணிப் போட்டுக்காட்டிய வெர்ஷன் ரொம்பவே பிடிச்சது. க்ளைமாக்ஸுக்கு நல்லா ரெஸ்பான்ஸ் கிடைச்சது. ரொம்பவே கம்மியான பட்ஜெட்ல எங்களால எவ்ளோ சுவாரஸ்யம் கொடுக்கமுடியுமோ, அதை நாங்க முயற்சி பண்ணிருக்கோம். போனமுறை, சினிமா நண்பர்களுக்கு இந்தப் படத்தை போட்டுக் காட்டினோம். அப்போ, பாரதிராஜா சார் பார்த்துட்டு 'நான் அப்படியே ஷாக்காயிட்டேன்'னு சொல்லி ரொம்பவே பாராட்டினார். மக்களுக்கும் இதுவரை பார்த்த ஆந்தாலஜி படம் மாதிரி இல்லாமல் புதுமையான விஷயமா '6 அத்தியாயம்' இருக்கும்னு நம்புறோம்". என்று உறுதியுடன் முடித்தார் கேபிள் சங்கர். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்