Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"தனுஷுக்கு தனிக் கதை, ஒன்பது காதல் பாடல்! " - அறிமுக இயக்குநர்களின் அடுத்த பட அப்டேட்

Chennai: 

2017-ம் வருடம் பல நல்ல படங்களைக் கொடுத்த அறிமுக இயக்குநர்கள், இந்த வருடம் என்ன படம், என்ன ப்ளான் என்பதைத் தெரிந்துகொள்ள, அவர்களைத் தொடர்பு கொண்டோம். 

`அதே கண்கள்’ - ரோஹின் வெங்கடேசன்

ரோஹின் வெங்கடேசன்

`` ‘அதே கண்கள்’ படத்தைப் போல என்னுடைய அடுத்த படத்தையும் சின்ன பட்ஜெட்ல பண்ணலாம்னு ஐடியா. இப்ப எழுதிய வரைக்கும் கதை ரொமான்ஸ் த்ரில்லரா வந்திருக்கு. முழுசா எழுதி முடிச்சாதான் அது என்ன மாதிரி சினிமானு சொல்ல முடியும். ஆனா, நிச்சயம் அடுத்த லெவல் ஆஃப் சினிமாவா இருக்கும். ஸ்க்ரிப்ட் முடிச்ச பிறகுதான் ஆர்ட்டிஸ்ட் யார் யார்னு முடிவு பண்ணணும். ஆனா, டெக்னிக்கல் டீம் `அதே கண்கள்’ டீம்தான்!”

`மாநகரம்’ - லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்

'' 'மாநகரம்’ படத்தை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு சாருக்குதான் என்னோட ரெண்டாவது படத்தையும் பண்றேன். இப்போ அதுக்காக ஸ்கிரிப்ட் வொர்க்லதான் இருக்கேன். இது பக்கா ஆக்‌ஷன் ஸ்கிரிப்ட். இன்னும் நடிகர், நடிகைகள் யார்னு முடிவு பண்ணலை. இந்த வருஷம் முழுக்க என்னோட உழைப்பு இந்தப் படத்துக்காகத்தான்.’’ 

பாம்பு சட்டை - ஆடம் தாசன் 

ஆடம் தாசன் 

’’ஒன்பது பாடல்கள் கொண்ட ஒரு காதல் கதை எழுதிட்டு இருக்கேன். இப்போ வர்ற படங்களில் பாடல்கள் குறைவாகவும், பாடல்கள் இல்லாமலும் வருது. ஆனால், என் படத்தில் கண்டிப்பாக ஒன்பது பாடல்கள் இருக்கணும்னு ப்ளான் பண்ணி பண்ணிட்டு இருக்கேன். ஒன்பது பாடல்களுமே உதட்டசைவு இல்லாத மாண்டேஜ் பாடல்கள்தான். முழுநீள காதல் கதையாக எடுக்கலாம்னு இருக்கேன். ஸ்கிரிப்ட் ஃபைனல் ஆனதும் தயாரிப்பாளர்கள், நடிகர் - நடிகைகள் கமிட் பண்ணணும்.’’

டோரா - தாஸ் ராமசாமி

தாஸ் ராமசாமி

’’யதார்த்தமான படங்கள் அதிகம் வரவர கமர்ஷியல் படங்களோட எண்ணிக்கை குறைஞ்சிடுச்சு. பக்காவா ஒரு கமர்ஷியல் படம் பார்த்தே ரொம்ப நாள் ஆன மாதிரி ஒரு ஃபீல் இருக்கு. அதனால என்னோட ரெண்டாவது படத்தை பக்கா கமர்ஷியல் படமா எடுக்கலாம்னு இருக்கேன். ஸ்கிரிப்ட் ஃபுல்லா முடிச்சிட்டேன். தயாரிப்பாளருக்குக் கதை பிடிச்சிருச்சு. ரெண்டு, மூணு ஹீரோக்கள்கிட்ட கதை சொல்ற ப்ளான்ல இருக்கேன். யார் ஓகே சொல்றாங்களோ அவங்களை வெச்சு ஷூட் ஆரம்பிச்சிடுவேன். கண்டிப்பா இந்த வருஷம் படம் வந்திரும்.’’

‘8 தோட்டாக்கள்’ - ஸ்ரீகணேஷ்

ஸ்ரீகணேஷ்

“அதர்வாதான் என்னுடைய ரெண்டாவது படத்தோட ஹீரோ. அந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட் வொர்க்தான் இப்போ போயிட்டு இருக்கு. இன்னும் ஒரு மாசத்துல வொர்க் முடிஞ்சிரும். க்ரைம் த்ரில்லர் ஜானர்லதான் இந்த ஸ்கிரிப்ட் போயிட்டு இருக்கு.”

`ஒரு கிடாயின் கருணை மனு’ - சுரேஷ் சங்கையா

சுரேஷ் சங்கையா

`` `கிடாயின் கருணை மனு’ படம் வெளியான சமயத்திலேயே அடுத்த பட ஸ்க்ரிப்ட் வேலைகளைத் தொடங்கிட்டேன். இந்தப் படத்துல ஒரு பெரிய நடிகர்தான் ஹீரோவா நடிக்கிறார். சமுதாயம் சார்ந்த படமா இது இருந்தாலும் முழுக்க முழுக்க காமெடி இருக்கும். `ஒரு கிடாயின் கருணை மனு’ படத்துல எப்படி ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் பட்டாளமே நடிச்சிருப்பாங்களோ... இந்தப் படத்துலயும் அப்படி நிறைய பேர் நடிக்க இருக்காங்க.  சில சீன்களில் எல்லாம் 300-ல இருந்து 400 பேர்லாம் வருவாங்க. இப்படி ஒரு பெரிய கூட்டத்துல வேலை செய்யத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. ஈராஸ் இன்டர்நேஷனல்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறாங்க. முழு விவரத்தையும் விரைவில் சொல்றேன்.”

‘ரங்கூன்’ - ராஜ்குமார் பெரியசாமி

ராஜ்குமார் பெரியசாமி

“ ‘ரங்கூன்’ படத்திற்காக பல பாராட்டுகள் கிடைச்சது. இப்போ ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் ஸ்கிரிப்ட் எழுதிட்டு இருக்கேன். முடியற ஸ்டேஜ்ல இருக்கு. முடிச்சதும்தான் தயாரிப்பாளர், ஹீரோ எல்லாம் முடிவாகும். நிச்சயம் அடுத்த படமும் இதே மாதிரி நிறைய பாராட்டுகள் வாங்குற ஹிட் படமா இருக்கும்.”

மரகத நாணயம் - ARK.சரவணன்

ARK.சரவணன்

’’ ‘சூப்பர் நேச்சுரல் ஆக்‌ஷன் காமெடி’ ஜானர்லதான் என்னோட ரெண்டாவது படத்தை பன்ணிட்டு இருக்கேன். ஸ்கிரிப்ட் வொர்க் முடிச்சிட்டு ஹீரோக்கான செலக்‌ஷனில் இருக்கேன். மரகத நாணயத்தை விட இந்தப் படத்தில் ஹீரோவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அதே போல் காமெடிக்கும் பஞ்சம் இருக்காது. இந்த வருடம் ஜூன் அல்லது ஜூலையில் ஷூட்டிங் போற ப்ளானில் இருக்கோம். படம் அடுத்த வருடம்தான்.’’

பண்டிகை - ஃபெரோஸ்

ஃபெரோஸ்

’’ஆங்கிலத்துல 'buddy genre'னு சொல்லுவாங்க, அதை மையமா வெச்சுத்தான் என்னோட அடுத்த படத்தைப் பண்றேன். ஒரு 50 வயசு போலீஸ் ஆபீஸர், ஒரு 30 வயது போலீஸ் ஆபீஸர், இவங்க ரெண்டு பேருக்கும் ஆகவே ஆகாது. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு கேஸை விசாரணை செய்றாங்க. இதுதான் என் படத்தோட கரு. இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட்டைத்தான் இப்போ பண்ணிட்டு இருக்கேன். ஃபுல்லா முடிச்சதும் அந்தப் படத்தை எங்க பேனர்ல பண்றதா இல்லை வேற தயாரிப்பாளர்களிடம் சொல்வதா என்பதை முடிவு செய்ய வேண்டும்.’’

குரங்கு பொம்மை - நித்திலன்

நித்திலன்

’’மூணு ஜானர்களைக் கலந்து என்னுடைய ரெண்டாவது படத்தை எடுக்கிறேன். ஒரு பெரிய நடிகர்தான் ஹீரோவாக நடிக்கிறார். அது யார்னு தயாரிப்பு நிறுவனம் இன்னும் ஒரு மாதத்தில் முறையாக அறிவிப்பாங்க. சோஷியல் எலிமென்ட்டை வெச்சு ஒரு கமர்ஷியல் படமா இது இருக்கும். ஜூன் மாதம் ஷூட்டிங் ஆரம்பமாகும்னு எதிர்பார்க்கிறேன்.’’

மேயாத மான் - ரத்னகுமார்

ரத்னகுமார்

‘’ ‘மேயாத மான்’ படம் பார்த்துட்டு தனுஷ் சார் கூப்பிட்டார். அவருக்கு ஏற்ற மாதிரி ஒரு கதை சொல்லச் சொன்னார். நானும் எதையும் கமிட் பன்ணிக்காம கதை ரெடி பண்ணிட்டு வரேன் சார்னு சொல்லிட்டு வந்தேன். இப்போ அந்தக் கதைக்கான வேலைகளில்தான் இருக்கேன். இந்தப் படத்தில் தனுஷ்தான் நடிப்பார்னு உறுதியா நான் சொல்லலை. இந்தக் கதை அவருக்குப் பிடிச்சிருந்தால், நடிப்பார். இல்லை, வேற நடிகர்களுக்குக் கதை சொல்வேன்.

ஆணும் பெண்ணும், ஒரு கட்டத்திற்கு மேல் தங்களுக்கான அடையாளத்தைத் தேடுறதுதான் இந்தப் படம். இன்னும் ஸ்கிரிப்ட் முடியலை. இன்னும் வேலைகள் அதிகமாக இருக்கு. இந்த வருடம் முழுக்க இந்த வேலைதான்.’’

அறம் - கோபி

கோபி

’’இரண்டு, மூணு கம்பெனிகள் என்கிட்ட கதை கேட்டு, நான் சொன்ன கதை அவங்களுக்கு பிடிச்சிருச்சு. அதுல ஒண்ணுதான் வட சென்னையை மையமா வெச்சு நான் எடுக்கிற படம். அதில் சித்தார்த் ஹீரோவா நடிக்கிறார். எந்தப் படம் முதலில் தொடங்கும்னு சரியா தெரியலை.’’

அருவி - அருண் பிரபு புருசோத்தமன்

அருண் பிரபு புருசோத்தமன்

''ரெண்டு ஸ்கிரிப்ட்ஸ் எழுதி முடிச்சிருக்கேன். அதுல ஒண்ணு, 'அருவி' மாதிரி கலவையான படமா இருக்கு. ரெண்டுல எது ஓகே ஆகுதோ, அதை ஸ்டார்ட் பண்ணிட வேண்டியதுதான்."

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement