Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சி.பி.எல். அப்டேட்ஸ்... கேப்டன் விஷ்ணு விஷால், தூதுவர் ஹன்சிகா, மோட்டிவேட்டர் யார்? #CBL

இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) போலவே, செலிபிரட்டி கிரிக்கெட் லீக் என்று வருடம் தோறும் திரைப்பிரபலங்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு முதல் செலிபிரட்டி பேட்மின்டன் லீக் (சிபிஎல்) என்று திரை நட்சத்திரங்களுக்கிடையே பேட்மின்டன் போட்டியும் நடந்து வருகிறது. அதில், சென்னை ராக்கர்ஸ், டோலிவுட் தண்டர்ஸ், கேரளா ராயல்ஸ், கர்நாடகா வாரியர்ஸ் என நான்கு அணிகள் விளையாடி வருகின்றன. இந்த சிபிஎல் போட்டியின் இரண்டாவது சீசன் வரும் பிப்ரவரி 25-ம் தேதி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருக்கிறது. இது குறித்து கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள சிபிஎல் போட்டியின் தலைமைச் செயல் அதிகாரி ஹேமச்சந்திரனைத் தொடர்புகொண்டோம். 

சிபிஎல்

"இந்தியாவில் கிரிக்கெட்டிற்குப் பிறகு பெரிதும் விளையாடக்கூடிய விளையாட்டாக பேட்மின்டன் உள்ளது. அதுவும், பி.வி.சிந்து, ஶ்ரீகாந்த் கடாம்பி போன்ற நபர்களைப் பார்த்து அந்த விளையாட்டின் மேல் மிகுந்த கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். எனவே, விளையாட்டும் சினிமாவும் சேர்ந்தால் அது இன்னும் நிறைய மக்களுக்கு போய்ச் சேரும் என்பதற்காக இந்த சிபிஎல்லை ஆரம்பித்தோம். கடந்த ஆண்டு, சிபிஎல் சீசன்-1 மலேசியாவில் நடந்தது. அதில் டோலிவுட் தண்டர்ஸ் வெற்றி பெற்றார்கள். சீசன்-2 இந்த ஆண்டு நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருக்கிறது. சென்னை ராக்கர்ஸ் அணிக்கு உரிமையாளராக கோகுலம் ஃபைனான்ஸ் பைஜு கோபாலனும், டோலிவுட் தண்டர்ஸ் உரிமையாளராக நந்தினி விஜய்யும் இருக்கிறார்கள். அதேபோல, கேரளா ராயல்ஸ் உரிமையாளராக ரஞ்சித் கருணாகரனும் கர்நாடகா வாரியர்ஸ் உரிமையாளராக ராஜிவ் தல்ரேஜாவும் உள்ளனர். ஒரு அணிக்கு தலா பன்னிரண்டு போட்டியாளர்கள் கலந்துகொள்வர். அவர்களுள் ஆடவர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர், மகளிர் ஒற்றையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் என நான்கு கேட்டகிரியில் போட்டி நடக்கும். இந்த சீசனுக்குத் தமிழ்நாடு பேட்மின்டன் அசோசியேஷன் துணைத் தலைவர் மாறன் இயக்குநராகச் செயல்படுகிறார். 

இந்தப் போட்டிகள் வரும் 25-ம் தேதி நடக்க இருக்கிறது. காலையில் ஆரம்பித்து மாலைக்குள் நான்கு அணிகளுக்குள் போட்டிகள் வைத்து, அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படும். அதில் சிபிஎல் மூன்றாவது சீசன் இந்த வருடம் டிசம்பர் மாதம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மூன்றாவது சீசனுக்கு பாலிவுட் அணியும் இணைய இருக்கிறது. சென்னை ராக்கர்ஸ் அணியில் விஷ்ணு விஷால் (கேப்டன்), கிருஷ்ணா (துணை கேப்டன்), கலையரசன், ஹரீஷ் கல்யாண், விக்ராந்த், ஜனனி ஐயர், மிஷா கோஷல், சுஜா வரூணி, காயத்ரி ஆகியோர் உள்ளனர். இந்த அணிக்குத் தூதுவராக ஹன்சிகாவும் மோட்டிவேட்டராக வரலட்சுமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். டோலிவுட் தண்டர்ஸ் அணிக்கு சந்தீப் கிஷன் கேப்டனாகவும் அஞ்சலி தூதுவராகவும் அணியின் மோட்டிவேட்டராக அடா ஷர்மாவும் செயல்படவிருக்கிறார்கள். கேரளா ராயல்ஸ் அணிக்குக் கேப்டனாக ஶ்ரீசாந்த்தும் கர்நாடகா வாரியர்ஸ் அணிக்குக்  கேப்டனாக மனு ரஞ்சித்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல், சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் ஆடிஷன் நடத்தப்பட்டு U 13, U17 என பேட்மின்டன் வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஸ்பான்ஸர் செய்து அவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தர திட்டமிட்டிருக்கிறது. செலிபிரிட்டி பேட்மின்டன் லீக் (சிபிஎல்). பாலிவுட் அணிக்கான உரிமையளர் பற்றியும் அணியில் யாரெல்லாம் விளையாட இருக்கிறார்கள் பற்றியும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என்றார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement