Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"சுஜாதா, இராஜேஷ்குமார், சுபா, பி.கே.பி... க்ரைம் எழுத்தாளர்களின் தாக்கம் இருக்கும்!" - 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' மாறன்

"நான் இந்தக் கதையை எழுதும்போதே வில்லனா அஜ்மல் நடித்தால் நல்லாயிருக்கும்னுதான் எழுதுனேன். ஏன்னா, 'கோ' படத்துல அவருடன் நான் வேலை பார்த்துருக்கேன். அவர் நடிப்பைப் பற்றி எனக்கு நல்லாவே தெரியும். 'தனி ஒருவன்' படத்துக்காக அரவிந்த் சாமி கேரக்டரில் நடிக்க முதலில் அவரிடம்தான் கேட்டிருக்காங்க. அப்போ, அஜ்மல் பிஸியா இருந்ததால பண்ண முடியலை." - என்றபடி உரையாடலைத் தொடங்குகிறார், மு.மாறன்.  பத்திரிகையாளராக இருந்து, 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகியிருக்கிறார்.

இரவுக்கு ஆயிரம் கண்கள்

''நிஜத்தில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை மையமா வெச்சுதான் இந்தப் படத்தின் கதையை ரெடி பண்ணினேன். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி பத்திரிகைத் துறையில் வேலை பார்த்தனால தினமும் பேப்பர் படிக்கிற பழக்கம் இருக்கு. அப்படி ஒருநாள் பேப்பர் படிக்கும்போது சில செய்திகள் என்னை பாதிச்சது. அதை அடிப்படையா வெச்சு கூடவே குட்டிக் குட்டி கற்பனைகளைச் சேர்த்து ஸ்க்ரிப்ட் எழுத ஆரம்பிச்சேன். 

ஒரு பத்திரிகையாளனா ஆனந்த விகடன், கல்கி, குமுதம்னு பல பத்திரிக்கைகளில் வேலை பார்த்திருக்கேன். சின்ன வயசுல இருந்தே சினிமா எனக்குப் பிடிக்கும். கிரேஸி மோகன்தான் சினிமாத்துறைக்கு நான் வர நிறைய உதவிகள் செஞ்சார். இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா, கே.வி.ஆனந்த். லாரன்ஸ் ஆகியோரிடம் உதவி இயக்குநராய் வேலை பார்த்துட்டு, இப்போ என் முதல் படத்தை இயக்கியிருக்கேன். 

அதுல ஒண்ணுதான், இந்தக் கதை. இதுல ஹீரோவா யார் நடிச்ச நல்லாயிருக்கும்னு யோசிச்சப்போ, அருள்நிதிதான் முதல்ல ஞாபகத்துக்கு வந்தார். ஏன்னா, 'மெளனகுரு', 'டிமான்டி காலனி' படங்கள்ல அவரோட நடிப்பு தனித்துவமா இருக்கும். தயாரிப்பாளருக்கும் அவரை ஹீரோவா வெச்சுப் பண்ணலாம்னு ஐடியா இருந்தது. அருள்நிதிகிட்ட கதை சொன்னேன், அவருக்குப் பிடிச்சிருந்தாலும், இந்தக் கதை எப்படி சுவாரஸ்யமா வரும்னு ஒரு சந்தேகம். அப்புறம், திரைக்கதையை இன்ச் பை இன்ச் அவருக்கு விவரிச்சு சொன்னேன். புரிஞ்சுக்கிட்டவர், 'நிச்சயம் பண்றோம்'னு சொல்லிட்டார். நான் அறிமுக இயக்குநரா இருந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநருக்கான அங்கீகாரத்தை எனக்கு முழுமையா கொடுத்தார். இந்த விஷயத்தில் அவருக்கு நிகர் அவர்தான்!" என்றவரிடம், சில கேள்விகள். 

"அறிமுக இயக்குநராய் உங்கள் பயணம் எப்படி இருக்கு?"

"இந்தக் கதையை ஒரு வருடமா படமாக்க முயற்சி பண்ணினேன். நிறைய இடத்துல கதை சொல்லியிருக்கேன், 'பிடிச்சிருக்கு'னு சொல்வாங்க. ஆனா, எந்தப் பதிலும் வராது. அப்புறம்தான் 'மரகதநாணயம்' படத்தோட புரொடியூசரை மீட் பண்ணி கதை சொன்னேன். உடனே படம் பண்ணலாம்னு சொல்லிட்டார். ஏன்னா, அவங்க ஒரு நல்ல த்ரில்லர் படத்துக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்களாம். வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி!"  

அருள்நிதி

"இந்தப் படத்தின் உண்மை தன்மைக்காக நிஜத்தில் யாரையாவது ஃபாலோ பண்ணினீங்களா?"

"நான் படிச்ச செய்தியிலேயே அந்தப் பிரச்னை குறித்த முழுதகவல்களும் இருந்தன. ஒரு பிரச்னை; அதிலிருந்து மீண்டு வருவதுதான் கதை. கூடவே குட்டிக் குட்டியா நிறைய தகவல்கள் கிடைச்சது. அதைத்தான் ஒரு ஹீரோ, ஹீரோயினை மையமா வெச்சு எழுதினேன். மத்தபடி, யாரையும் ஃபாலோ பண்ணலை."  

"படத்திற்கும் டைட்டிலுக்குமான தொடர்பு?" 

"மர்மம். இந்த விஷயத்துக்கும் இரவுக்குக்கும் எப்போதும் ஒரு நெருக்கம் இருந்துக்கிட்டே இருக்கு. இரவு நேரத்தில் எந்தத் தப்பு பண்ணாலும் வெளியில தெரியாதுனு நினைச்சிட்டு இருக்காங்க. ஆனா, யாராவது எங்கேயாவது நம்மளைப் பார்த்துக்கிட்டுதான் இருப்பாங்க. ஏதாவது சூழ்நிலையில அது வெளியே வந்துரும். ஒரு பிரச்னையில மாட்டிக்கிற ஹீரோ, அதுல இருந்து எப்படி மீண்டு வருகிறார்னு திகில் கலந்து இந்தப் படத்துல சொல்லியிருக்கேன். ஒருநாள், 'இரவுக்கு ஆயிரம் கண்கள்'னு ஒரு பழைய பாடலைக் கேட்டுக்கிட்டு இருந்தேன். இதையே தலைப்பா வெச்சுட்டோம். தவிர, இந்தப் படத்தின் கதை ஒரே நாளில் நடக்கிறமாதிரி அமைக்கப்பட்டிருக்கு. இரவில் தொடங்கி, மறுநாள் மாலையில் முடியறமாதிரி திரைக்கதை இருக்கும். இடையிடையே கொஞ்சம் ஃப்ளாஷ்பேக் சம்பவங்கள் வரும். படத்துல அருள்நிதி கால் டாக்ஸி டிரைவரா நடிச்சிருக்கார்."  

"ஆக்‌ஷன் த்ரில்லர் கதையில் ஹீரோவுக்கு சமமான ரோல், ஹீரோயினுக்கும் இருக்குனு சொல்றீங்க. எப்படி?" 

"மஹிமாவுக்கு மட்டுமில்ல, படத்துல நடிச்சிருக்கிற எல்லோருக்குமே முக்கியமான ரோல்தான். 'சுசீலா'ங்கிற பவர்ஃபுல்லான கேரக்டர்ல மஹிமா நடிச்சிருக்காங்க. வந்தோம், போனோம்னு இல்லாம, ரொம்ப அர்ப்பணிப்போட உழைச்சிருக்காங்க. தவிர, இது நான்-லீனியர் திரைக்கதை. அதனால, ரசிகர்களுக்குத் தெரிந்த முகங்களைத்தான் பெரும்பாலும் பயன்படுத்தியிருக்கேன். ஏன்னா, அப்போதான் கேரக்டரின் முகங்கள் ஆடியன்ஸூக்கு ஞாபகமிருக்கும். 

அதேமாதிரி, பரத், சுசீலா, கணேஷ், வஸந்த், ரூபலா... இப்படி சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேஷ்குமார்னு பலரும் எழுதிய துப்பறியும் நாவல்கள்ல வர்ற கேரக்டர் பெயர்களா தேடிப்பிடிச்சு வெச்சிருக்கேன். எல்லாமே தமிழ் க்ரைம் நாவல்களில் வர்ற பெயர்களா இருக்கணும்னு முன்கூட்டியே தீர்மானிச்சதுதான்!"

இரவுக்கு ஆயிரம் கண்கள்

"துப்பறியும் நாவல்கள் அதிகமா படிக்கிற பழக்கம் இருக்குபோல?" 

"சுபா எழுதிய 'சூப்பர் நாவல்'களில் சப்-எடிட்டராக வேலை பார்த்துதான், என் கேரியரையே தொடங்கினேன். நிறைய க்ரைம் நாவல்கள் படிப்பேன். சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார், சுஜாதா என எல்லோரையும் கடந்துதான் நான் வந்திருக்கேன். 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' ஜானரே இன்வெஸ்ட்டிகேஷன் த்ரில்லர்தான்." 

"ஆக்‌ஷன் த்ரில்லர் படத்துக்கு சாம்.சி.எஸ் இசை எப்படிப் பயன்பட்டிருக்கு?" 

"ஆக்‌ஷன், த்ரில்லர் கதைக்கு இசை பெரிய பலம். இசை நல்லா இல்லைனா, இதுமாதிரி படங்களுக்குப் பாதி பலம் குறைஞ்சமாதிரி ஆகி0டும். அதனால, படத்துக்குத் தகுந்தமாதிரி ஓர் இசையமைப்பாளருக்காக காத்திருந்தேன். அப்போதான் சாம்.சி.எஸ் அறிமுகம் கிடைச்சது. 'விக்ரம் வேதா' படத்துக்குப் பிறகு இந்தப் படத்தின் இசை அதிகமா பேசப்படும்னு நம்புறேன்." 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்