Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"கலாய்த்த சிவகார்த்தி... ஷூட்டிங் ஸ்பாட்டை சுற்றிக்காட்டிய விஜய் சேதுபதி..!" - ரக்‌ஷன்

Chennai: 

’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தபோது தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸையும் தொடங்கிவிட்டார் தொகுப்பாளர் ரக்‌ஷன். ராஜ் டிவி, கலைஞர் டிவியில் தொகுப்பாளராக இருந்தாலும், தனக்கான வெளிச்சம் கிடைக்காமல் இருந்தவருக்கு, இப்போது வெள்ளித்திரையின் வாசல் திறக்கப்பட்டிருக்கிறது. துல்கர் சல்மானின் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவரும் ரக்‌ஷனிடன் பேசினேன். 

ரக்‌ஷன்

'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியால் கிடைத்த பாராட்டுகள் என்னென்ன..?

''நிறைய இருக்கு ப்ரதர். எங்க டீமைத் தாண்டி எனக்கு வெளியிலயிருந்து கிடைத்த முதல் பாராட்டுன்னா, அது சிம்பு சாரோடதுதான். ஒரு நாள் வீட்டுல இருக்கும்போது போன் வந்தது. போனை எடுத்தா, ‘ஹே ரக்‌ஷா, எப்படிடா இருக்க; என்னடா பண்ற’னு கேட்டார். நான் யாரோ மிமிக்ரி பண்ணித்தான் ஏமாத்துறாங்கனு நினைச்சேன். ஏன்னா, நான் ’கலக்கப்போவது யாரு’ ஷோல ஒர்க் பண்றேன். அங்க இருக்கிற யாரோதான் இப்படிப் பண்றாங்கன்னு நினைச்சேன். அப்பறம்தான் அது சிம்புனு தெரிஞ்சது. ‘ரொம்ப நல்லா பண்ற. தொடர்ந்து சூப்பரா பண்ணு’னு சொன்னார். 

ரக்‌ஷன்

ஒரு நாள் ஒரு ஹோட்டல்ல விஜய் சேதுபதி அண்ணாவைப் பார்த்தேன். எனக்கு அவரைத் தெரியுமாங்கிற தயக்கத்தோடதான் அவர்கிட்ட பேசப்போனேன். என்னைப் பார்த்ததும் பலநாள் பழகிய ஃப்ரெண்டைப் போல பேச ஆரம்பிச்சார். என் வொர்க்கையெல்லாம் பார்த்திருக்கார். அதைப் பத்தி நிறைய பேசினார். ’நீ யதார்த்தமா பண்ற. அதுதான் உன் ப்ளஸ். அப்படியே பண்ணு’னு சொன்னார். அப்பறம் ஒருநாள் என்னை ’கவண்’ படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைச்சிட்டுப் போய், ‘இதுதான் கேரவன், இதுதான் டயலாக் பேப்பர், ஷூட்டிங் இப்படித்தான் இருக்கும்’னு ஒரு நாள் முழுக்க என்னை அவர்கூடவே வெச்சுக்கிட்டார். இது எத்தனை பேருக்குக் கிடைக்கும்னு தெரியலை. எனக்குக் கிடைச்சது செம ஹேப்பி.

ரக்‌ஷன்

’கலக்கப்போவது யாரு’ல ஆங்கரிங் மட்டுமில்லாம போட்டியாளர்களோடு சேர்ந்து நான் நடிச்சிட்டு இருந்த சமயத்தில் எனக்கு சிவகார்த்திகேயன் அண்ணாகிட்ட இருந்த ஒரு பெரிய மெசேஜ் வந்துச்சு. ‘உன்னோட காஸ்டியூம் சென்ஸ் ரொம்ப நல்லாயிருக்கு. ஸ்கிரீன்ல அழகா தெரியுற. நீ போட்டியாளர்களுக்கு நல்லா சப்போர்ட் பண்ற; அதே சமயம் அவங்களைவிட உனக்கு ஒரு தனி ஸ்டைல் இருக்கு. நாம சீக்கிரமே மீட் பண்ணலாம்’னு சொன்னார். ஒரு நாள் எங்க வீட்டை க்ராஸ் பண்ணி சிவா அண்ணாவோட கார் போச்சு. நானும் அந்த காரை ஃபாலோ பண்ணிட்டுப் போனேன். அப்போ சிவா அண்ணனுக்கு கால் பண்ணி, ’அண்ணே உங்களைப் பார்க்கலாம்னுதான் உங்க கார் பின்னாடி வந்துட்டு இருக்கேன்’னு சொன்னேன். உடனே, ’அய்யோ ப்ரதர், இங்க நீங்க இறங்கிடாதீங்க. கூட்டம் கூடிடப்போகுது. நாம அந்தப் பக்கமா போய் காரை நிறுத்தலாம்’னு வழக்கம்போல் கலாய்ச்சார். இந்த மாதிரி அடிக்கடி என்னைக் கலாய்ப்பார். என்னோட பிறந்தநாளுக்கு வாட்ச் கிஃப்ட் பண்ணினார். இவங்க மூணு பேரோட பாராட்டை என்னால மறக்கவே முடியாது.’’

உங்களையும் ஜாக்குலினையும் சேர்ந்து வைத்து நிறைய செய்திகள் வருதே..?

’’ஆமா ப்ரதர். எல்லாரும் நினைக்கிற மாதிரி நானும் ஜாக்குலினும் அவ்வளவு க்ளோஸ் கிடையாது. வொர்க்கைத் தாண்டி நானும் அவங்களும் அதிகமா பேசிக்கிட்டது கிடையாது; வெளிய மீட் பண்ணிக்கிட்டது கிடையாது. ஆனால், வேலைன்னு வந்துட்டா நாங்க ஒருத்தரைத் ஒருத்தர் விட்டுக்கொடுக்காம இருப்போம். இதேமாதிரி ஜூலியையும் என்னையும் சேர்த்து வெச்சு சில செய்திகள் வந்துச்சு. ஜாக்குலின் என்கூட சேர்ந்து ஷோ பண்றாங்க, அதனால வதந்தி வர்றது இயல்புதான். ஆனால், நான் ஜூலிகூட பேசுனதேயில்ல. எப்படி எங்களைப் பத்தி இவ்வளவு வதந்தி வந்துச்சுன்னே தெரியலை. அவ்வளவு வதந்தி வந்தபோதும் நான் அவங்களுக்கோ, அவங்க எனக்கோ போன் பண்ணி, ’என்ன இப்படியெல்லாம் வதந்தி வருது’னு  பேசிக்கிட்டதில்ல.’’

’சினிமாவில் நடிக்க வைக்கிறேன்’ என்று ஒருவர் ரக்‌ஷனை ஏமாற்றிய கதை, துல்கர் சல்மானின் படத்தின் தான் கமிட்டான கதை, துல்கரின் நட்பு, தான் வளர்ந்து வந்து பாதை என பல சுவாரஸ்யமான சம்பவங்களை ரக்‌ஷன் இந்த வீடியோக்களில் பகிர்ந்துள்ளார். அதையும் தவறாமல் பாருங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்