Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

``அவர் செலக்‌ஷன் மாதிரிதான் என் சாய்ஸும் இருக்கும்!’’ - யாரைச் சொல்கிறார், `எரும சாணி' ஹரிஜா

Chennai: 

``என் நிச்சயத்துக்கு அப்புறம் நடிக்க மாட்டேன்னு பல பேர் புரளியைக் கிளப்பினாங்க. அதையெல்லாம் பிரேக் பண்ணனும்னு இப்போ நிறைய படங்களில் நடிச்சிட்டு வறேன்'' - கலகலப்பாகச் சிரிக்கிறார், `எரும சாணி' ஹரிஜா. சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா நடிக்கும் படத்தில், `எரும சாணி' ஹரிஜாவுக்கும் முக்கியமான கேரக்டர். அவரிடம் பேசினேன். 

எருமை சாணி ஹரிஜா

   ``எனக்கு எப்போதும் கேமரா ரொம்பப் பிடிக்கும். என் வாழ்க்கையில் கேமரா ஒரு அங்கம். அதனால், எப்போவுமே அதை நான் லவ் பண்ணிட்டுதான் இருப்பேன். `ஹரிஜா'வாக இருப்பது நான் பெருமைப்படக்கூடிய விஷயம். எனக்கு சினிமாவில் நடிக்க நிறைய சான்ஸ் வந்துக்கிட்டேதான் இருந்துச்சு. நான்தான் சில படங்களை தவிர்த்துக்கொண்டே வந்தேன். இயக்குநர் சாம் ஆண்டன் டீமிலிருந்து என்னை அவங்க படத்துல நடிக்கக் கூப்பிட்டப்போகூட முதலில் யோசிச்சேன். அப்புறம் உதவி இயக்குநர் டேனிஸ் அண்ணா என்கிட்ட கதையைச் சொன்னார். 

நாம எதிர்ப்பார்த்திருந்த ஸ்க்ரிப்ட் இதுதான். சரியான சமயத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுக்க, இந்தப் படம் நல்ல சாய்ஸ்னு ஓகே சொல்லிட்டேன். நல்ல கேரக்டர் ரோல் பண்றது எப்போவுமே எனக்குப் பிடிக்கும். அதேமாதிரி இந்தப் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டே எனக்கு ஜாலியா இருந்துச்சு. `எரும சாணி' ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இந்த ஸ்பாட்டும் இருந்துச்சு. படத்தோட ஹீரோ அதர்வாகூட எனக்கு நிறைய சீன்ஸ் இருந்துச்சு. நல்ல ஃப்ரெண்ட்லியா பழகினார், அதர்வா. தவிர மொத்தப் படக்குழுவும் புது டீம் மாதிரியான ஃபீலை எனக்குக் கொடுக்காம பார்த்துக்கிட்டாங்க. என் போர்ஷன் முழுக்க சென்னையில்தான் நடந்துச்சு. 15 நாள்ல எனக்காக ஷூட்டிங் முடிஞ்சது. என் கேரக்டர் என்னனு மட்டும் கேட்காதீங்க, அது சஸ்பென்ஸ். படம் பார்க்கும்போது நீங்களே தெரிஞ்சுக்கோங்க. இந்தப் படத்துல கமிட் ஆனதை, யார்கிட்டேயும் சொல்லலை. இப்போ ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. அதனால, `அதர்வாகூட நடிச்சிருக்கேன்'னு எல்லோர்கிட்டேயும் சொல்லிக்கிட்டு இருக்கேன். 

ஆக்சுவலா, `எரும சாணி' விஜய்தான் இந்த ஸ்க்ரிப்டைப் பத்தி என்கிட்ட முதல்ல பேசுனார். இந்தப் படத்துக்கான வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது, விஜய்தான். எங்களுக்குள்ளே எப்போவுமே நல்ல புரிதல் இருக்கும். எனக்கு எந்த மாதிரியான ஸ்க்ரிப்ட் தேவைனு விஜய்க்குத் தெரியும். விஜய், எனக்கு நல்ல ஃபிரெண்ட்!  

வருங்கால கணவருடன் ஹரிஜா

வீட்டுல எனக்கு அப்பா, அம்மா பெரிய சப்போர்ட். அதர்வா படத்துல கமிட் ஆனவுடனே படத்துல என் கேரக்டர் என்னனு வீட்டுல சொன்னேன். அவங்களுக்கும் ரொம்பப் பிடிச்சியிருந்தது. எனக்கு சினிமாவுல வந்த நிறைய சான்ஸை நான் தவிர்த்திருக்கேன். அதனால, பொண்ணு நல்ல கேரக்டருக்குத்தான் ஓகே சொல்லியிருப்பானு அவங்களுக்குப் பெரிய நம்பிக்கை. அதேமாதிரி என் வருங்கால கணவரும் எனக்குப் பெருசா சப்போர்ட் பண்ணுனார். அவருக்கு என் ஃபீல்ட்டைப் பத்தி நல்லாத் தெரியும். ஏன்னா, அவரே ஒரு குறும்பட இயக்குநர்தான்.  

இந்தப் படம் தவிர, `எரும சாணி' டீமோட 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'னு ஒரு படத்துல நடிச்சிருக்கேன். இந்தப் படத்தோட ஷூட்டிங்கும் இப்போதான் முடிஞ்சது. இந்தப் படத்துல நாங்க பிஸியா இருந்ததுனால, `எரும சாணி'க்கான வீடியோ எதையும் எடுக்கமுடியலை. இந்தப் படத்தை ரமேஷ் வெங்கட்ராம் டைரக்‌ஷன் பண்ணியிருக்கார். காமெடி த்ரில்லர் படம். சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சாலும், `எரும சாணி' யூ-டியூப் சேனல்லேயும் தொடர்ந்து நடிப்பேன். ஏன்னா, எனக்கு எல்லாமும் கத்துக்கொடுத்தது, `எரும சாணி' சேனல்தான். எவ்ளோ வயசு ஆனாலும், இந்தச் சேனல்ல நடிச்சுக்கிட்டு, எல்லோரையும் சிரிக்கவெச்சுக்கிட்டுதான் இருப்பேன்." என்ற ஹரிஜாவிடம், `சினிமாவுல எந்த ஹீரோகூட நடிக்க ஆசை?' என்றால், 

``மேடிகூட நடிக்கணும்னு ரொம்ப ஆசை. அவரை என் ஃபேவரைட் ஹீரோனு சொல்ல மாட்டேன். ஆனா, அவரோட ஆன் ஸ்கீரீன்  பெர்ஃபாமென்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாமே எனக்குப் பிடிக்கும். சினிமாவுல நானும் அப்படித்தான் செலக்ட் பண்ணனும்னு நினைப்பேன். இதுவரைக்கும் நான் அவரை மீட் பண்ணதில்லை. ஆனா, நிச்சயம் ஒருநாள் அவரைப் பார்ப்பேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை ஊட்டியில் ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்தேன். `நான்தான் சார், `எருமசாணி' ஹரிஜா'னு அறிமுகப்படுத்திக்கிட்டேன். `ஓ யெஸ்... பார்த்திருக்கேன்'னு சொன்னார். ஐ எம் ஸோ ஹாப்பி!.
 

விஜய் - ஹரிஜா

இப்போதான் காலேஜ் ஃபைனல் இயர் பண்ணிக்கிட்டிருக்கேன். எனக்கு கேமரா எவ்வளவு முக்கியமோ, அதேமாதிரி படிப்பும் முக்கியம். ஒரே நேரத்தில் படிப்பு ப்ளஸ் சினிமா ரெண்டையும் பேலன்ஸ் பண்றது சவாலாதான் இருக்கு., பண்ணுவோம்!'' தம்ப்ஸ் அப் காட்டிச் சிரிக்கிறார், ஹரிஜா.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement