‘ஸ்நாக்ஸ் விலையை நினைச்சாலே தியேட்டருக்குப் போக பயமாயிருக்கு..!’ - ஸ்டிரைக் சர்வே ரிசல்ட் #VikatanSurveyResult

ஸ்டிரைக் சர்வே ரிசல்ட்

’மார்ச் 1 ம் தேதியிலிருந்து புதுப்படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை; 16 ம் தேதியிலிருந்து படப்பிடிப்பும் நடத்தக் கூடாது எனத் தடை விதித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம். வெள்ளிக்கிழமையானால் புதுப்படம் பார்த்துப் பழகிப்போன இளைஞர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமையானால் குடும்பத்தோடு ஈவினிங் ஷோ பார்க்கும் ஃபேமிலி மேன்களுக்கும் இந்த ஸ்டிரைக் பெரிய ஏமாற்றமே. வாங்க... உங்க துக்கத்தை எல்லாம் இந்த சர்வேயில கொட்டுங்க பாஸ்...’ என்றதுமே பலபேர் இந்த சர்வேயில் கலந்துகொண்டனர். இந்த ஸ்டிரைக் சர்வே ரிசல்ட்  இதோ...

ஸ்டிரைக் சர்வே ரிசல்ட்

’இந்த ஸ்ட்ரைக்கிற்கு எது முக்கியமான காரணமாக நீங்க நினைக்கிறீங்க..?’ என்ற கேள்விக்கு, தயாரிப்பாளர் சங்க பிரச்னைகளே காரணம் என 10.2 சதவிகிதமும், க்யூப் பிரச்னைதான் என 14.6 சதவிகிதமும், GST வரி என 7.3 சதவிகிதமும், நடிகர்களின் சம்பளம் என 18.9 சதவிகிதமும், இவை எல்லாமே என 48.9 சதவிகிதமும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

ஸ்டிரைக் சர்வே ரிசல்ட்

’இந்த ஸ்ட்ரைக்கிற்கு எது தீர்வு..?’ என்ற கேள்விக்கு, 35.6 சதவிகிதம் நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் எனவும், 9.1 சதவிகிதம் க்யூப்புடன் அனுசரித்துப் போகணும் என்பதையும், 17.3 சதவிகிதம் ஒரு படத்தை அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதை குறைக்கணும் என்பதையும், குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்கள் எடுக்க ஊக்கிவிக்கணும் என்பதை 38.1 சதவிகிதம் பேர் தேர்ந்தெடுத்துள்ளனர். கமர்ஷியல், கலர்ஃபுல் என்கிற மோகம் மக்களிடம் குறைந்து, சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் தரமாக இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பது ஆரோக்கியமான ஒன்று. 

ஸ்டிரைக் சர்வே ரிசல்ட்

’புதுப்படங்கள் ரிலீஸாகி 20 நாள்கள் ஆகிறது... உங்களின் மனநிலை என்ன..?’ என்றால், படம் ரிலீஸான பார்ப்பேன் என 42.8 சதவிகிதமும், இப்போதான் சந்தோஷமா இருக்கு என 40.2 சதவிகிதமும், போர் அடிக்குது பாஸ் என 17 சதவிகிதமும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

ஸ்டிரைக் சர்வே ரிசல்ட்

’சமீபமாக எதில் படம் பார்த்தீர்கள்..?’ என்ற கேள்விக்கு தியேட்டரில் என்று 22.3, டிவியில் என்று 24.3, பணம் கட்டி இணையத்தில் என்று 9.6, பணம் கட்டாமல் இணையத்தில் என்று 22.3, மொபைலில் என்று 21.5 சதவிகிதமும் ரிசல்ட் வந்துள்ளது. 

ஸ்டிரைக் சர்வே ரிசல்ட்

’சினிமாத்துறையில் நடக்கும் இந்த பிரச்னைகளுக்கு தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்குதான் காரணமா..?’ என்றால் இல்லை என 50.2 சதவிகித மக்களும், ஆம் என 49.8 சதவிகித மக்களும் சொல்லியிருக்கிறார்கள். 

ஸ்டிரைக் சர்வே ரிசல்ட்

’சினிமாத்துறைக்கென தனியாக அரசு சார்ந்த ஒரு நல வாரியம் அமைக்க வேண்டுமா..?’ என்ற கேள்விக்கு ஆம் என 36.9 சதவிகித மக்களும், இல்லை என 63.1 சதவிகித மக்களும் தெரிவித்திருக்கிறார்கள். 

ஸ்டிரைக் சர்வே ரிசல்ட்

’தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க நினைக்கும் உங்களை எரிச்சலடைய செய்வது எது..?’ என்ற கேள்விக்கு பெருவாரியான மக்கள் (29.8 சதவிகிதம்) ஸ்நாக்ஸ் விலையே பயத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்கள். ஆன்லைன் புக்கிங் கட்டணத்திற்கு 23.5, பார்க்கிங் கட்டணத்திற்கு 22, எதிர்பார்க்க வைத்து ஏமாற்றும் படங்களுக்கு 24.7 சதவிகிதம் ரிசல்ட் வந்துள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!