வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (01/04/2018)

கடைசி தொடர்பு:16:31 (01/04/2018)

செகண்ட் ஹேண்ட் ஹார்ட் டிஸ்க்... சிக்கன டிஸ்கஷன் ரூம்... பட்ஜெட் படங்களுக்கு உதவும் ’Give and Take’..!

சின்ன பட்ஜெட் படங்களுக்காக மட்டுமே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கும் இயக்குநரும் தயாரிப்பாளருமான வெற்றி மகாலிங்கம்.

செகண்ட் ஹேண்ட் ஹார்ட் டிஸ்க்... சிக்கன டிஸ்கஷன் ரூம்...  பட்ஜெட் படங்களுக்கு உதவும் ’Give and Take’..!

இயக்குநரும் தயாரிப்பாளருமான வெற்றி மகாலிங்கம் 'கிவ் அண்ட் டேக்' (Give and Take) என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். அந்த நிறுவனம் சின்ன பட்ஜெட் படங்கள் பண்ணுவோர்க்கும் புதிய படங்கள் பண்ண வாய்ப்பு தேடுவோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற செய்தி வெளியானதையடுத்து வெற்றி மகாலிங்கத்தை தொடர்புகொண்டோம்.

Give and Take வெற்றி மகாலிங்கம்

அப்போது பேசியவர், "படப்பிடிப்புக்கு தேவையான கேமரா மெட்டிரியல், காஸ்ட்யூம்கள், ஹார்ட் டிஸ்க் மாதிரியான அத்தியாவசியப் பொருட்களை சின்ன பட்ஜெட் படங்களுக்கு எளிமையான முறையில் கிடைக்குற மாதிரி ஏற்பாடு பண்றதுதான் ’கிவ் அன்ட் டேக்’ நிறுவனத்தோட வேலை. ஃபிலிம் ரோல் பயன்படுத்திட்டு இருந்தபோது டிஜிட்டலுக்கு மாறுனா பட்ஜெட் குறைஞ்சுரும், வேலையும் சீக்கிரமா முடியும்னு நினைச்சுத்தான் எல்லாரும் டிஜிட்டல் சினிமாவுக்கு மாறுனாங்க. ஆனா, இப்போ ஹார்ட் டிஸ்க் வாங்குறதுக்கு மட்டும் 5 லட்ச ரூபாய் செலவாகுது. டிஜிட்டல்னு சொல்லி மூணு பேக் அப் எடுத்து வைக்க சொல்றாங்க. முதல்ல ஷூட் பண்ற ரா ஃபுட்டேஜைக்கூட பேக் அப் செய்யணும்னு பயமுறுத்துறாங்க. அதை பாக்கணும்னு நினைச்சாக்கூட டிஐ சென்டர், எடிட்டிங் ஷூட் மாதிரியான இடங்களுக்குப் போய்தான் ஓபன் பண்ணி பாக்க முடியும். புரொடியூசர்கிட்ட நம்பிக்கையை ஏற்படுத்த இந்த மாதிரி சொல்லிடுறாங்க. அந்த படம் முடிந்தப்பிறகு ஹார்ட் டிஸ்கை பயன்படுத்தாமலே வெச்சிருக்காங்க. அப்படி அவங்க பயன்படுத்தாமல் இருக்கும் ஹார்ட் டிஸ்க், கேமரா மாதிரியான சினிமா மெட்டிரியல்களை வாங்கி சின்ன பட்ஜெட் படங்களுக்கு உதவிகரமா இருக்குற மாதிரி கொடுக்கணுங்கிறதுதான் எங்களோட நோக்கம்.

வெற்றி மகாலிங்கம்

அந்தப் பொருட்கள் வாரண்டி பீரியடுக்குள்ள இருந்தா 60 சதவிகித விலைக்கு கொடுக்குறோம். வாரண்டி பீரியட் முடிஞ்சுதுன்னா 40 முதல் 50 சதவிகித விலைக்கு கொடுக்குறோம். அதை வித்தவங்கக்கிட்டயும் வாங்குனவங்ககிட்டயும் 5 சதவிகிதம் கமிஷன் எடுத்துக்குறோம். அதுக்கு இன் பாஸ், அவுட் பாஸ் போட்டு வாங்குறவங்களுக்கும் விக்குறவங்களுக்கும் கொடுத்திடுறோம். இப்போ ஒரு இயக்குநர் தன்னோட கதையை டிஸ்கஸ் பண்ண வெளியே ரூம் எடுத்தா அதுக்கே குறைஞ்ச பட்சம் 30,000 ரூபாய்க்கு மெல செலவாகுது. அதுக்காக, தியேட்டர் செட் அப், கம்ப்யூட்டர் பிரிண்ட்டர் வசதியோட டிஸ்கஷன் ரூம் உருவாக்கி இருக்கோம். அதுக்கு ரொம்ப குறைவான விலையில புது இயக்குநர்களுக்கு வாடகைக்கு விடுறோம். படத்தை எந்தளவுக்கு கலந்தாலோசிக்குறோமோ அந்தளவுக்கு நேர்த்தி கிடைக்கும். படத்தைப் பத்தி என் இடத்துல டிஸ்கஸ் பண்ணி வெற்றியடைஞ்சா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும். ஆரம்பிச்ச முதல்நாளே நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. நிறைய பேர்கிட்ட சினிமா பொருட்கள் இருக்கு. அதை வெளியே கொடுக்கும்போது 'ஏன் நீங்க படம் பண்ணலையா?'னு கேள்விகள் வரும்போது அவங்களோட நிலைமையை வெளியே சொல்ல தயங்குகிறாங்க. அதனால் நிறைய பொருட்கள் பயன்படாமலே போயிடுது. அப்போ இந்த மாதிரியான இடையில் இருக்கும் அமைப்பு மூலமா போனால், துணிஞ்சு அவங்ககிட்ட இருக்க பொருட்களை கொடுக்குறாங்க. அது சின்ன பட்ஜெட் படங்கள் பண்றவங்களுக்கு ரொம்பவே பயன்படும். இந்த வேலைகள் எல்லாத்தையும் என் மனைவி ராஜேஸ்வரிதான் பாத்துக்குறாங்க. சிம்பிளா சொல்லணும்னா, சின்ன பட்ஜெட் படங்கள் நிறைய வரணும். சினிமா நல்லாயிருக்கணும் அவ்வளவுதான்" என்றபடி முடித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்