Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``50 ஆயிரம் பேர் மனசு வைத்தால், 7 கோடி பேர் பயன்பெறுவார்கள்!” ஐ.பி.எல்-லைப் புறக்கணிக்கச் சொல்லும் ஜேம்ஸ் வசந்தன்

``நான் சொல்வது சிலருக்குச் சங்கடமாக இருக்கலாம். சிந்தித்து முடிவெடுங்கள். ஏப்ரல் 10-ம் தேதி, சென்னைச் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில், சென்னை அணியின் முதல் போட்டி நடைபெற உள்ளது. அன்று யாரும் போட்டியை நேரடியாகச் சென்று பார்க்காமல் இருந்தால் நல்லது.'' - இது, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் சமீபத்திய ஃபேஸ்புக் பதிவு. மேலும், ஐபிஎல் முதல் போட்டியை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்களையும் கூறியிருந்தார். இது, இன்று பரவலாக தமிழகம் முழுக்க பற்றி எரிகிறது. இந்த நிலையில் ஜேம்ஸ் வசந்தனிடம் பேசியபோது...

ஜேம்ஸ் வசந்தன்

``என் மியூசிக் ஸ்டூடியோவில் இருக்கும்போதுதான் இந்த யோசனை தோணுச்சு. எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். சென்னையில் மேட்ச் நடக்கும்போது, ஸ்டேடியம் போய் பார்த்திருக்கிறேன். ஐபிஎல் மேட்ச் எப்போது நடந்தாலும், அதை டி.வி-யில் பார்ப்பதையும் பழக்கமாக வைத்திருக்கிறேன். இந்த நிலையில், வரும் ஐபிஎல் மேட்ச் ஏப்ரல் ஏழாம் தேதி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவிருக்கிறது. இந்த முறை, அதை நேரில் சென்று பார்க்கலாம் என்று தோன்றியது. 

அந்தச் சமயத்தில்தான், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நம் சகோதர சகோதரிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், நாம் சேப்பாக்கம் மைதானம் போய் கிரிக்கெட் பார்ப்பதைத் தவிர்ப்போம்’ என்று தோன்றியது. ஏனெனில், நிறைய இளைஞர்கள் கிரிக்கெட் போட்டியை சேப்பாக்கம் மைதானம் போகாமல் புறக்கணித்தால், அரங்கமே காலியாக இருக்கும். 

ஆனால், அந்தப் போட்டியை டி.வி-யில் லைவாகப் பார்ப்பவர்களுக்கு, `எதற்காக இளைஞர்கள் யாரும் கிரிக்கெட் பார்க்க வரவில்லை’ என்று கேள்வி எழும். அப்போது, `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கணும்னு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றலை... அதனால்தான் தமிழக இளைஞர்கள் ஐபிஎல் போட்டியை நேரில் வந்து பார்ப்பதைத் தவிர்க்கிறார்கள்’ என்ற உண்மை புரியும். அதன் வீரியத்தையும் அவர்கள் உணர்வார்கள்.

`நேரில் ஸ்டேடியம் சென்று, `விவசாயம் காப்போம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம்’ என்று பேனர் ஏந்திக்கூட இந்தச் செய்தியைப் பரப்பலாமே’ என்று சிலர் கேட்கலாம். ஆனால், சேப்பாக்கத்துக்கு மேட்ச் பார்க்கச்செல்லும்போது, இளைஞர்கள் கையில் போர்டு உள்ளிட்ட எதுவும் எடுத்துச்செல்லக் கூடாது என்பது ரூல். இப்படிப் புறக்கணிப்பதால், யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை. இந்த யோசனை எனக்குத் தோன்றிய உடனேயே, என் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டேன். இது, பலபேருக்கு ஃபார்வர்டு ஆகி, எனக்கே மீண்டும் வாட்ஸ் அப்-ல் வந்தது. 

இந்த ஐபிஎல் புறக்கணிப்பை தமிழர்கள் மட்டுமன்றி, இங்கு குடியிருக்கும் மற்ற மொழியினரும் செய்ய வேண்டும்' என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், அவர்களும் தமிழகத்தில்தானே வசிக்கிறார்கள். நம் விவசாயத்துக்கு நாம்தான் குரல் கொடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு விரைவில் தீர்ப்பு வரப்போகிறது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளில் பெரும்பாலானோர் கிரிக்கெட் ரசிகர்களாக இருப்பார்கள். அவர்களும் முதல் போட்டியின்போது காலி ஸ்டேடியத்தைப் பார்க்கும்போது, இந்தப் பிரச்னையில் நம் உறுதியை உணர்வார்கள். 

50 ஆயிரம் பேர் செய்யும் இந்தத் தியாகத்தால், ஏழு கோடி பேர் பயன்பெறுவார்கள். எங்கள் குடும்பத்தில் யாரும் விவசாயம் செய்தது இல்லை. ஆனால், விளைநிலங்கள் இருந்தன. விவசாயிகளின் உழைப்பு, வேதனை எனக்குப் புரியும். ஜல்லிக்கட்டுக்காக நாம் மெரினாவில் திரண்டதுபோல, காவிரிக்காகவும் மெரினாவில் ஒன்று சேர வேண்டும். ஆனால், மெரினாவுக்கு நம்ம அரசு பூட்டுப் போடுகிறது.

மெரினாவைத் திறந்துவிடுங்க, கடலலை போல இளைஞர்கள் ஒன்று சேரட்டும். ஜல்லிக்கட்டுக்குத் தீர்வு கிடைத்ததுபோல காவிரிப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். அமைதியான முறையில் போராட்டம் நடத்த எங்கள் இளைஞர்களால் முடியும். தூத்துக்குடியில் நடக்கும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில், நண்பர்களுடன் சென்று கலந்துகொள்ள இருக்கிறேன். நமக்காக நாம்தான் போராட வேண்டும். போராடினால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.”

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்