Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

கண்ணழகி, நடிப்பு ராட்சசி, பாடி ஷேமிங்குக்கு பதிலடி...ஹாட்ஸ் ஆஃப் நித்யா மேனன்! #HBDNithyaMenen

'சுருட்டை முடியையும், திராட்சை கண்களையும் கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்தவர், நித்யா மேனன். நடிப்பில் ராட்சசி. தான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பவர். 

நித்யா மேனன்

 பிறந்தது கேரளாவில். பல நடிகைகளை இன்டர்வியூ எடுக்க நினைத்து ஜர்னலிசம் படித்தாராம்... ஆனால், தானே இன்டர்வியூ எடுக்கும் நிலைக்குச் சென்றது இவருடைய சக்சஸ் சீக்ரெட். 

'ஹனுமன்' என்கிற ஆங்கில தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தன்னுடைய மீடியா பயணத்தின் முதல் புள்ளியை தொடங்கினார் நித்யா.

பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கும்போது, டூரிஸம் மேகஸினில் இவர் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்துத்தான் 'ஆகாஷா கோபுரம்' படத்தில் மோகன்லாலுக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது நித்யாவுக்கு. 'அல மோடலைன்டி’ படத்துக்காக நந்தி விருது வாங்கிய சமயத்தில் தான் தமிழ் படங்களில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

நித்யா மேனன்

மிழில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தன்னை தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயம் ஆனவர் 'மெர்சல்' படத்தின் 'ஐஸ்'ஸாக அனைவரின் நெஞ்சத்திலும் உறைந்தார். இதுவரை நித்யா நடித்துள்ள எந்த கதாபாத்திரமும் ஒரே சாயலில் இருக்காது. ஏனெனில், புதியதாக ஒவ்வொன்றையும் தேடி, முயன்று அதில் வெற்றி அடைவதுதான் இவருடைய பலம்.

 ''ஒன்றுக்கும் ஆகாத விஷயங்களைப் பற்றி மக்கள் பேசுவதை நான் விரும்பவில்லை. அவைகளை ஊக்கப்படுத்துகிற விஷயங்களின் நடுவில் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. சமூக வலைத்தளத்தைப் பொறுத்தவரை எனக்கான ஒரு பாதையை நான் உருவாக்கி வைத்திருக்கிறேன். அதில் மட்டுமே பயணிக்கிறேன்'' என ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

'ஓகே கண்மணி' படத்தில் ஈரமான கண்கள், குண்டு கன்னம், சுருள் முடி ... பார்க்கிற நமக்கும் அவரின் உற்சாகத்தைக் கடத்தியிருப்பார். திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வது சமூக வலைத்தளத்தில் விவாதங்களை உண்டாக்கியது. அப்போது, 'திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வதில் தவறேதும் இல்லை. திருமணம் சார்ந்த முடிவுகளை எடுக்கும் உரிமையை இளைஞர்களிடம் கொடுக்க வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் வாழ்வதால் பிரச்னைகள் உருவாகிப் பிரியக்கூட நேரிடலாம். எனினும், இந்த உறவில் குழந்தை பிறந்தால் பிரச்சனைகள் வரும்' என தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நித்யாவுக்கு லைக்ஸ், ஷேர்ஸ் குவிந்தது.

நித்யாமேனன்

டிகைகளின் உடல்வாகு விஷயம் எப்போதும் விவாதங்களுக்கு உட்படும். ஸ்லிம், ஃபிட் என்கிற எல்லையை உடைத்து 'நான் இப்படித்தான்... என் உடலை யாருக்காகவும் குறைக்க முடியாது. உடல் பருமனா, ஆரோக்கியமா என்றால்... ஆரோக்கியம் என்றுதான் சொல்வேன். என் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. என்னைப் பற்றிய கமெண்ட்ஸ் என்னை ஒன்றும் செய்யாது'' என்று தன் முடிவில் உறுதியாக நின்றவர்.

'ஒகே கண்மணி' பட ரிலீஸின் போது, இந்தப் படத்தில் நடித்த போது மணிரத்தினத்திடம் இருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள் என ஒரு கேள்வியை நித்யாவிடம் முன்வைக்கிறார்கள். 'கண்டிப்பாக நான் ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டுமா..? ஐ லவ் மணி சார். அதற்காக நான் அவரிடமிருந்து இதை கற்றுக் கொண்டேன் என்றெல்லாம் கூற முடியாது. ஒவ்வொருவரும் ஒருவித தடைகளை சந்திக்கும்போது அதிலிருந்து சில விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். அப்படியான தடைகளை ஓகே கண்மணியில் நான் சந்திக்கவில்லை. 'காஞ்சனா 2' பட 'கங்கா' கதாபாத்திரத்தில் நடிக்கும்போது பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஏனெனில், மாற்றுத்திறனாளியாக  நடிப்பது சற்று சிரமமான விஷயம்தான்'' எனத் திறமையாக பதிலளித்தார்.

நித்யா மேனன்

துறுதுறு நடிகை ஒருபக்கமென்றால், மறுபக்கம் மென்மையான குரலுக்குச் சொந்தக்காரி. ஏஆர் ரகுமானின் இசையில் பாடியதுதான் இவருடைய பொக்கிஷமான  வாழ்நாள்  நினைவுகளில் ஒன்றாம். ஒவ்வொரு முறைப் பாட்டு பாடும்போதும் தனக்குள் ஒரு அமைதியையும், மகிழ்ச்சியையும் உணர்வதாகக் கூறியிருக்கிறார். உங்களுக்கு மட்டுமல்ல நித்யா, எங்களுக்குள்ளும் உங்களது குரல் மகிழ்ச்சியையே ஏற்படுத்துகிறது.

'இதுவரை என்னுடைய எல்லா முடிவுகளையும் என் மனத்தின் விருப்பத்திற்கு ஏற்பவே எடுத்துள்ளேன். யாரையும் போட்டியாளராக நினைத்ததேயில்லை'' என்கிற பளீச் ஸ்டேட்மென்டில் உணர்ந்து கொள்ளலாம் நித்யாவை.

மேக்கப் என்பது நடிகைகளுக்கு மிகவும் முக்கியம் என்கிற பிம்பத்தையும் தகர்த்தெறிந்து இருக்கிறார். நடிகை ரோகிணியின் இயக்கத்தில் வெளியாகவுள்ள 'அப்பாவின் மீசை' படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறார்.

தார்த்தமாக தன் கதாபாத்திரத்தைத் திரையில் பிரதிபலிக்கத் துடிக்கும் நித்யாவுக்கு இன்று பிறந்த நாள்.

ஹாப்பி பர்த்டே நித்யா..!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement