Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

``மர்மயோகி, மருதநாயகம்... இவை கமல் சாரின் கனவுப் படைப்புகள்!” ஏன் என்று விளக்கும் அவரின் உதவி இயக்குநர்

``கமல் சார் என் குரு. அவரின் கனவுப்படங்களான  'மர்மயோகி', 'மருதநாயகம்' போன்றவற்றில் அவரிடம் உதவி இயக்குநராக இருந்தேன். சில காரணங்களால் அந்தப் படங்களை எடுக்க முடியவில்லை. அவை இரண்டும், ‘எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம்’ என்று சொல்லும் அளவுக்கு சிறந்த கன்டென்ட் கொண்ட ஸ்கிரிப்டுகள். தற்போது அவற்றை எடுத்தால் கமல் சார் எந்தளவுக்கு சந்தோஷப்படுவாரோ அதேஅளவுக்கு நானும் சந்தோஷப்படுவேன். ஏனெனில் அவை இரண்டும் கமல் சாரின் கனவுப் படைப்புகள்.” - ராஜேஷ் எம்.செல்வாவின் வார்த்தைகளில் அவ்வளவு அன்பு. கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராக இருந்தவர், அவரை வைத்தே ‘தூங்காவனம்’ படத்தை இயக்கினார். விஸ்வரூபம், உத்தமவில்லன், தூங்காவனம் படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்தும் இருப்பார்.  தற்போது விக்ரம், கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் நடிக்க, கமலின் ‘ராஜ்கமல்’ நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கும் வேலைகளில் இருக்கிறார். ராஜேஷிடம் பேசியதிலிருந்து... 

இந்தப் படங்களின் ப்ரீ புரொடக்‌ஷனுக்காக மட்டுமே கிட்டதட்ட ஒன்றரை வருடங்கள் வேலை செய்தோம். நான் வேலை செய்த ஸ்கிரிப்ட் என்பதற்காகச் சொல்லவில்லை, அவை எடுக்கப்பட்டிருந்தால் வேற லெவல் படங்களாக இருந்திருக்கும். அந்த ஆசையில் என் முதல் படம் ‘தூங்காவன’த்தை கமல் சாரை வைத்துத்தான் இயக்கினேன். பிறகு ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்துக்காக சில வேலைகளில் ஈடுபட்டிருந்தேன். சில காரணங்களால் அந்தப் பட வேலைகள் தள்ளிப்போயின. தவிர சரியான கதை முடிவாகாமல் இருந்தது. 

ராஜேஷ் எம் செல்வா

அந்தச் சமயத்தில்தான் இந்தக் கதை முடிவானது. கமல் சாருடன் பயணப்படுவதால் இதிலும் கமல் சார் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், சில காரணங்களால் அது முடியவில்லை. கமல் சார் நடிக்காதபட்சத்தில் விக்ரம் சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதையும் கமல் சாரிடம்தான்  முதலில் சொன்னேன். அவரும் அதற்கு ஓ.கே சொல்ல, பிறகு விக்ரம் சாரிடம் இந்தச் கதையைச் சொன்னேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. 

ரொம்பவே ஸ்டைலிஷான படம். விக்ரம் உடன் அக்ஷராஹாசனும் நடிக்கிறார். ஸ்க்ரிப்ட் எழுதும்போதே அக்ஷராவை மனதில் வைத்துதான் எழுதினேன். அவருக்கு கச்சிதமாகப் பொருந்தும் கதை. சவாலான கேரக்டர். படம் பார்ப்பவர்கள் அத்தனை பேருக்கும் அக்ஷரா ஹாசனைப் பிடிக்கும் அளவுக்கான கேரக்டர். எமோஷனல் த்ரில்லர் கதை, கமர்ஷியல் படம். ஆனால், வழக்கமான நாயகன், ஹீரோயின்ஸ் என்றில்லாமல் கதை வித்தியாசமாக இருக்கும். இரண்டு மாதத்தில் ஸ்க்ரிப்ட் வேலைகளை முடித்துவிட்டு பிறகு ஷூட்டிங் போகிறோம். ‘ராஜ்கமல் பேனரில் விக்ரம் நடிக்கிறார்’ என்பதே அழகாக இருக்கிறது. 

சினிமா தொடர்பான நிறைய விஷயங்களைக் கமல் சாரிடம் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். அவரைத் தொடர்ந்து ஓரிரு நாள்கள் பார்க்கவில்லை என்றால்கூட அனுமதி வாங்கிக்கொண்டு போய் பார்த்துவிட்டு வந்துவிடுவேன். அவரிடம் சினிமா பற்றி நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறேன். அவர் நட்பாகப் பழகினாலும் அவரை என் குரு ஸ்தானத்தில் வைத்தே பார்க்கிறேன். அவரை மீண்டும் இயக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு நிறையவே உண்டு. அது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை உண்டு. அது நடந்தாலும் நடக்காவிட்டாலும் அவருடன் தொடர்ந்து பயணிப்பேன்” என்றார்  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement