Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

``இது எனக்கு எட்டாவது தேசிய விருது; நினைச்சுக்கூடப் பார்க்கலை..!" - கே.ஜே.யேசுதாஸ்

65 வது தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டது. பிராந்திய மொழி படங்கள் அதிகளவிலான விருதுகளை வென்றிருக்கும் நிலையில், தமிழ் சினிமாவுக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த பாடகருக்கான விருதை மலையாளப் படப் பாடல் ஒன்றுக்காக கே.ஜே.யேசுதாஸ் வென்றிருக்கிறார். இது அவருக்கு எட்டாவது தேசிய விருதாகும். 

கே ஜே யேசுதாஸ்

மேலும் படங்களுக்கு...

இன்று சென்னையில் இந்தியன் சிங்கர்ஸ் ரைட்ஸ் அசோஷியேஷன், பாடகர்களுக்கு ராயல்டி கொடுக்கும் நிகழ்ச்சியை நடத்தியது. அதில் கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசிலா, வாணி ஜெயராம், சித்ரா, ஸ்ரீனிவாஸ், மனோ, உன்னிகிருஷ்ணன், உன்னி மேனன், விஜய் யேசுதாஸ், எஸ்.பி.பி.சரண் மற்றும் பல பாடகர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இன்று தனது எட்டாவது தேசிய விருதை வென்றிருக்கும் யேசுதாஸை, பாடகர்கள் பலரும் கெளரவித்தனர். யேசுதாஸுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தும், அவரிடமிருந்து ஆசிர்வாதங்களையும் வாங்கிய பாடகர்கள், இந்தக் கொண்டாட்டத்தை கேக் வெட்டி ஆரம்பித்தனர். 

மகிழ்ச்சியில் பேச ஆரம்பித்த கே.ஜே.யேசுதாஸ்,``எனக்குத் தேசிய விருது கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை. எப்போதும் போல இன்று காலை எழுந்து நான் ப்ராக்டிஸ் செய்துகொண்டிருந்த போது, வீட்டிற்குள் அப்பா, அப்பா எனச் சத்தம் கேட்டது. விஜய் வந்து என்னைக் கட்டி அணைத்தான். அடிக்கடி இப்படித்தான் செய்வான்; அதுபோலதான் இப்போதும் என நினைத்தேன். அப்பறம்தான் எனக்குத் தேசிய விருது கிடைத்திருக்கிறது என்று சொன்னான். இது எனக்கு எட்டாவது தேசிய விருது. ரொம்ப சந்தோஷமா இருந்தது. நாம் எதை நினைத்து தியானம் பண்றோமோ அது நமக்கு தானாகவே வரும்; நாம் அதை தேடிப் போகவேண்டாம். இதுதான் என் பழக்கம். இன்று என்னை வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

கே.ஜே.யேசுதாஸ்

மேலும் படங்களுக்கு...

நாங்கள் பாடகர்களாக அறிமுகமான காலத்தில் ஒரு பாடல் ரெக்கார்டிங் முடிந்தவுடன், `சார் ரொம்பப் பிரமாதமா பாடியிருக்கீங்க என்று தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் சொல்வதுதான் எங்களுக்கு ராயல்டி. ஆனால், இப்போதெல்லாம் ரெக்கார்டிங் அப்படி இருப்பது இல்லை. பாடகர்கள் சிரமத்தில்தான் இருக்கிறார்கள். அதற்கு இந்த ராயல்டி சிஸ்டம் ரொம்ப உதவியாக இருக்கும்’’ என்றார். 

கே.ஜே.யேசுதாஸ்

மேலும் படங்களுக்கு...

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசும் போது, ``நிறையப் பாடகர்களை இன்று ஒரே இடத்தில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. பாடகர்களுக்கு ராயல்டி இருக்கிறது என்று பலரும் நினைச்சிட்டு இருக்காங்க. இதுவரை அப்படி எதுவுமே எங்களுக்குக் கிடைத்தது இல்லை. பெரிய, பெரிய நிறுவனங்களுக்குப் பக்தி பாடல்கள் பாடிக்கொடுத்தால், அவர்கள்தான் வருடாவருடம் ராயல்டி கொடுப்பார்கள். மற்ற நிறுவனங்களெல்லாம் சம்பளத்தோடு சரி. இப்போதுதான் எங்களுக்கான ராயல்டி கிடைப்பதற்கு வழி செய்து வருகிறோம். இந்த வருடம் மட்டும் எங்களது அசோஷியேஷனுக்கு 51 லட்ச ரூபார் ராயல்டி வந்துள்ளது. இது ஒவ்வோர் ஆண்டும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார். 

கே.ஜே.யேசுதாஸ்

மேலும் படங்களுக்கு...

இந்தியன் சிங்கர்ஸ் ரைட்ஸ் அசோஷியேஷனின் இயக்குநரும் பாடகருமான ஸ்ரீனிவாஸ் பேசும் போது, ``இரண்டு பாடல்கள் பாடிய பாடகராக இருந்தாலும் அவருக்கு ராயல்டி கிடைக்க வேண்டும் என்பதும் வயதான பிறகு பென்ஷன் கிடைக்க வேண்டும் என்பதும் எங்களின் நோக்கம். அதற்காகவே இந்த நிறுவனத்தை சஞ்சய் ஆரம்பித்தார். இந்த வருடம் எங்களின் நோக்கத்துக்கு முதல் வெற்றி கிடைத்திருக்கிறது’’ என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement