Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

"சாவித்ரி மட்டுமல்ல, என் அம்மாவும் ஒரு `கூல் சிக்'தான்!" - ட்வீட் சர்ச்சைக்கு விஜய் தேவரகொண்டா

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நடிகை சாவித்ரியின் பயோபிக் படம் தெலுங்கில் `மகாநதி' என்ற பெயரிலும், தமிழில் `நடிகையர் திலகம்' என்ற பெயரிலும் வெளியாகவிருக்கின்றன. இப்படத்தில் துல்கர் சல்மான், சமந்தா, ஷாலினி பாண்டே, பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். `அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் புகழ்பெற்ற விஜய் தேவரகொண்டா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.    

நடிகையர் திலகம் - சாவித்ரி
 

சாவித்ரி பற்றிய சுவாரஸ்ய தகவல்களைப் படத்தில் நடித்திருக்கும் பலர் ட்வீட் செய்துவருகின்றனர். தற்போது சென்னையில் `நோட்டா' பட ஷுட்டிங்கில் இருக்கும் விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டரில் `வாட் ஏ கூல் சிக்' எனப் பதிவிட, சாவித்ரியின் ரசிகர்களும், அபிமானிகளும் `இது சாவித்ரியைத் தரக் குறைவாகப் பேசியதற்குச் சமம்' எனக் கமென்ட் பாக்ஸில் தேவரகொண்டாவைத் துவைத்துத் தொங்கவிட்டு,  `மன்னிப்பு கேட்கவேண்டும்' எனக் கோரியுள்ளனர்.  

விஜய் தேவரகொண்டாஇதற்குப் பதிலளிக்கும் வகையில் தேவரகொண்டா, `நான் மன்னிப்பு கேட்கவேண்டும் என எண்ணுபவர்கள் சென்னை லீலா பேலஸ் வரவும். உங்களுக்கு `மகாநதி' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அனுமதிச் சீட்டு தருகிறேன். உங்களைப் போன்ற நியாயம் பேசுபவர்கள், சாவித்ரியை `குடும்பத்துக்கு ஆகாதவள்', `குடிபோதைக்கு அடிமையானவர்' என அழைத்தபோது, அவர் உயிரோடு இருந்திருந்தால் சாவித்ரி சந்தோஷப்பட்டிருப்பார்' எனப் பதிலுக்கு ட்வீட் போட்டிருக்கிறார்.  

``சாவித்ரி தைரியம், மனிதநேயம் மிக்கவர், எல்லாப் பெண்களையும்போல் பெருங்கனவு கொண்டிருந்தார். அனைவரையும் நேசிப்பதையும், அனைவராலும் நேசிக்கப்படுவதையும் விரும்பியவர் சாவித்ரி. எல்லாவற்றையும் மீறி, சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தவர். `குடும்பத்துக்கு ஆகாதவள்', 'குடிபோதைக்கு அடிமையானவர்' என்று வசை பாடாமல், `வாட் ஏ கூல் சிக்' என்று அவரைப் போற்றும் வகையில் கூறியதை நினைத்து சந்தோஷப்பட்டிருப்பார்!" எனவும் பதிவு செய்திருக்கிறார், விஜய் தேவரகொண்டா.   


ஆனாலும் நீண்டுகொண்டிருந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஒரு இ-மெயில் முகவரியைக் கொடுத்து அதில், `நான் எனது சமூகவலைதளப் பக்கத்தில் என்ன எழுதவேண்டும் என்று முறைப்படுத்த நீங்கள் விரும்பினால், இந்த இ-மெயிலில் அப்ளை செய்யுங்கள்; அந்த வேலையை உங்களுக்குத் தருகிறேன்" என்றும் கூறியிருக்கிறார்.  

இந்தச் சர்ச்சை குறித்து, விஜய் தேவரகொண்டாவிடம் பேசினோம். ``எதற்கெடுத்தாலும் ஓவர் ரியாக்ட் செய்யும் சிறுபிள்ளைகள் ஆகிவிட்டோம். மற்றவர்கள்  என்ன செய்யவேண்டும் என்று நாம் தீர்மானிக்கும் பகட்டிலேயே இருக்கிறோம். எனது பதிவில் கமென்ட் செய்ததுபோல  யார் வேண்டுமானாலும் இங்கே கருத்துக் கூறலாம். ஆனால், நாம் எதற்காக ஒருவரை எதிர்க்கிறோம், எதைச் சாதிக்கக் கோபப்படுகிறோம் என்று நினைக்காமல் தங்களது எனர்ஜியை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய விஷயங்களுக்குத் தங்கள் எனர்ஜியைப் பயன்படுத்தாமல், சுய முன்னேற்றங்களுக்குப் பயன்படுத்தினால் எல்லோருக்கும் நல்லது.     

மற்றவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் வாய்ப்பு நமக்கு அரிதாகத்தான் அமையும். அதை யாரிடம், எங்கே, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும்." என்றார். தவிர, ``நடிகை சாவித்ரியை உங்களுக்கு எந்தளவுக்குப் பிடிக்கும்" என்ற கேள்விக்குப் பதில் சொன்ன விஜய் தேவரகொண்டா, ``சாவித்ரியை மிகவும் பிடித்ததால்தான், அப்படி ஒரு பதிவைப் போட்டேன். சாவித்ரியைப் பிடித்ததால்தான் சிக்கலை எதிர்கொண்டேன். நான் சொன்ன அந்த வார்த்தை சிலருக்குப் பிடிக்கவில்லை. நமது நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் நடந்துகொண்டிருக்கும்போது நான் சாவித்ரியைப் பற்றி என்ன பதிவிட்டேன் என்பது முக்கியமா? எல்லாப் பிரச்னைகளிலும் அம்மா - சகோதரி சென்டிமென்ட் நுழைக்கப்படுகிறது. உண்மையில் நான் நானாக வளர்ந்து, என் கனவுகளை நனவாக்க வைத்த என் அம்மாவும் ஒரு 'கூல் சிக்'தான்.

நடிகையர் திலகம்

மற்றவர்கள் சொல்வதைக் கேட்கவும், செய்யவும் நான் இங்கே வரவில்லை. நான் சொல்வதெல்லாம் சரி என்றும், அதையெல்லாம் மற்றவர்கள் பின்பற்றவேண்டும் என்றும் சொல்லவில்லை. நான் நானாகவே இருக்கிறேன்; எனக்கு எது சரியெனப் படுகிறதோ அதை மற்றவர்களுக்குத் தீங்கு இழைக்காத வகையில் செய்ய விரும்புகிறேன். இந்த ட்வீட்டால் பலபேர் கோபமடைந்திருக்கிறார்கள் என்றார்கள், நண்பர்கள். அவர்களுக்கு என் பதில் இதுதான், `என்னை எப்படி நினைக்கிறீர்களோ, அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். பிடிக்காதவர்கள், அன்ஃபாலோ செய்துகொள்ளுங்கள்!' என்று முடித்தார். 

`நடிகையர் திலகம்' திரைப்படம் மே 9- ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ச்சை ஏற்படுத்திய  அந்த ட்வீட் இதோ!

      
      

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement