``பாலா சார் பதிலுக்காகக் காத்திருக்கேன்!” `லென்ஸ்’ டைரக்டரின் அடுத்த படம் | Director jayaprakash ramakrishnan explains about his next project

வெளியிடப்பட்ட நேரம்: 15:47 (04/05/2018)

கடைசி தொடர்பு:15:47 (04/05/2018)

``பாலா சார் பதிலுக்காகக் காத்திருக்கேன்!” `லென்ஸ்’ டைரக்டரின் அடுத்த படம்

`லென்ஸ்' படத்துக்குப் பிறகு தன் இரண்டாவது படத்திற்கான வேலைகளில் தீவிரமாக இருக்கிறார், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். முதல் படத்தைப்போலவே, இந்தப் படமும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்கிறார்.

``பாலா சார் பதிலுக்காகக் காத்திருக்கேன்!”  `லென்ஸ்’ டைரக்டரின் அடுத்த படம்

சென்ற ஆண்டு வெளியான படங்களில் பரவலாக கவனத்தைப் பெற்ற திரைப்படம், `லென்ஸ்'. அறிமுக இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஜெயபிரகாஷே நடித்திருந்தார். சமூகத்துக்குத் தேவையான கருத்தை வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்டிருந்த அந்தப் படத்தைத் தொடர்ந்து தன் இரண்டாவது படத்துக்கான வேலைகளில் தீவிரமாக இருக்கிறார், ஜெயப்பிரகாஷ். அவரிடம் பேசினேன்.

லென்ஸ்

`` `லென்ஸ்' படத்தை முதல்ல வேறொரு தயாரிப்பாளரை வெச்சுதான் எடுக்கலாம்னு இருந்தேன். ஆனா, அந்த சமயத்தில் என் படத்தைத் தயாரிக்க யாரும் முன்வரலை. அதனால் நானே தயாரிச்சு இயக்கினேன். தினம் தினம் பட்ஜெட் பார்த்துப் பார்த்து செலவு பண்ணி, கம்மியான பட்ஜெட்ல `லென்ஸ்’ படத்தை முடிச்சேன். அந்தப் படத்துக்கு நல்ல விமர்சனம் கிடைச்சது. தவிர படத்துக்கு நிறைய தியேட்டர்கள் கிடைச்சதுதான் பெரிய விஷயம். படத்தை வெற்றிமாறன் சார் வாங்கி வெளியிட்டதால எனக்கும் போதுமான லாபம் கிடைச்சது.  

முதல் படத்துக்குக் கிடைச்ச வெற்றி, விமர்சனம் என் அடுத்த படத்திலும் தொடரும்னு நினைக்கிறேன். என் இரண்டாவது படத்துக்கான ஸ்க்ரிப்ட்டை எழுதி முடிச்சிருக்கேன். சிலர் மூணு, நாலு மாச இடைவெளியில கமர்ஷியலா படம் பண்ணுவாங்க. எனக்கு அது செட் ஆகாது. எனக்குப் பிடிச்ச ஒன்லைனை எடுத்து, அதைச் சுத்தியே கதை நகர்ற மாதிரி திரைக்கதை அமைப்பேன். அதுதான் என் பாணி. 

பாலா -ஜெயப்பிரகாஷ்


இந்தக் கதை என்ன ஜானர் சினிமானு இப்போதைக்குச் சொல்ல முடியாது. இதுலயும் புது நடிகர்களே நடிக்கிறாங்க; ஆனால் நான் நடிக்கலை. `இவர் நடிச்சா நல்லா இருக்கும், அவர் நடிச்சா நல்லா இருக்கும்’னு யாரையும் மனசுல வெச்சுக்கிட்டு கதை எழுத மாட்டேன். கதைக்குத் தேவைப்படுற நடிகர்கள்தாம், என் கதையில இருப்பாங்க. 

அதனால, இந்தப் படத்துல நான் ஒன்லி டைரக்‌ஷன்தான். தவிர, இதில் எனக்கான கேரக்டரே இல்லைனு கதை எழுதி முடிச்சப்பிறகுதான் தெரிஞ்சது. இந்தப் படம் சம்பந்தமா நிறைய பேர்கிட்ட பேசிகிட்டு இருந்தேன். அந்த சமயத்தில் ஒருத்தர், `உங்க ஸ்கிரிப்டை இயக்குநர் பாலாகிட்ட சொல்லுங்க'னு சொன்னார். `அவர் தயாரிக்கிறாரோ இல்லையோ, பாலா சார்கிட்ட சொல்லிதான் பார்ப்போமே’னு நினைச்சு அவரை சந்திச்சேன். உண்மையைச் சொல்லணும்னா, இதுக்கு முன் நட்பு ரீதியாக்கூட அவரை சந்திச்சதே இல்லை. சொன்னதும வரச்சொல்லிட்டாங்க. நடுநிலையான மனநிலையிலதான் போனேன்.

என் `லென்ஸ்' படத்தை அவர் பார்த்திருக்கார். அந்தப் படத்தைப் பற்றி என்கிட்ட பேசினார். `நல்லா எடுத்திருக்க'னு பாராட்டினார். இந்தப் படத்தோட முழுக் கதையையும் பொறுமையா உட்கார்ந்து கேட்டார். `நான் சொல்றேன்’னு சொல்லியிருக்கார். அவரோட பதிலுக்காகத்தான் காத்துட்டு இருக்கேன். அவர் தயாரிக்கிறாரோ இல்லையோ அது வேற விஷயம். ஆனால் அவர் என் கதையை கேட்டது எனக்கு சந்தோஷமா இருந்தது" என்கிறார், இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

நல்லதே நடக்கும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close