Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

``நெருப்புடா’ அளவுக்கு `செம வெயிட்டு’ ரீச் ஆகலையா? பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் பதில்

`கபாலி’ பட `நெருப்புடா நெருங்குடா’ பாட்டு மாதிரி இல்லை...’, `மோசமா இல்லை, கேட்கலாம்’, `நல்லாயிருக்கு... கேட்கக் கேட்கப் பிடிக்கும்’ - சமீபத்தில் வெளியான `காலா’ படத்தின் `செம வெயிட்டு’ பாடலுக்குத்தான் இப்படிக் கலவையான விமர்சனங்கள். ஏற்கெனவே `நெருப்புடா’ பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ்தான் இந்த `செம வெயிட்டு’ பாடலையும் எழுதியிருக்கிறார். இந்த விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள அருண்ராஜாவிடம் பேசினேன். 

அருண்ராஜா காமராஜ்

``இந்தப் பாட்டுக்கான வரிகளை டோப் ஏ டெலிஸும் நானும் சேர்ந்து எழுதினோம். இரண்டு பேரும் சேர்ந்துதான் பாடியும் இருக்கோம். இந்தி வெர்ஷனை அவரும் தமிழ் வெர்ஷனை நானும் எழுதினோம். அவர் எழுதின வரிகள் மும்பைத் தமிழிலும் நான் எழுதின வரிகள் நாம் பேசும் தமிழிலும் இருக்கும். இந்தப் பாட்டோட வரிகளைக் கேட்கும்போதே கதையைத் தெரிஞ்சுக்கலாம். இரஞ்சித் சார் எங்கக்கிட்ட காட்சிகளை விளக்கும்போதே அப்படித்தான் சொன்னார். இதுதவிர படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதில் ஒரு பாட்டு முழுமையாகவும் இன்னொரு பாட்டுப் பாதியும் எழுதியிருக்கேன். 

`காலா' படப் பாட்டின் ஜானர் வேற. அதனால பாட்டோட ஃபீலும் வேறுமாதிரிதான் இருக்கும். ஆனால் பாட்டில் எனர்ஜி கண்டிப்பா இருக்கும். அது எங்கேயும் குறையாது. `நெருப்புடா' பாட்டு முழுக்க மாடர்ன் மியூசிக்ல இருக்கும். இந்தப் பாட்டு வின்டேஜ் மியூசிக் ஸ்டைல்ல இருக்கும். மொத்தமாகவே வேறொரு ஃபீல்ல இந்தப் பாட்டை கொடுத்திருக்கிறோம். `நெருப்புடா'வுக்கு முன் `செம வெயிட்டு’ வந்திருந்தால், `அதைவிட இதுதான் மிகச்சிறந்த பாடல்’னு எல்லாரும் சொல்லியிருப்பாங்க. `நெருப்புடா’ போல இதுவும் நிச்சயம் பரவலாகப் பாடப்படும்.

அருண்ராஜா காமராஜ்

இந்தப் பாட்டின் ராப் வெர்ஷனை சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்யும்போதே எழுதினோம். அதாவது ஒரு டெம்போ செட் பண்ணி, அதுக்கேத்த ட்யூனை வரவைத்து வரிகளை எழுதிட்டோம். என் பாட்டு வரிகள் எப்பவுமே இரஞ்சித் சார்க்குப் பிடிக்கும். `நல்லா இருக்கு’னு சொன்னார். இந்தப் பாட்டுக்கு ரஜினி சார் என்ன ஃபீல் பண்ணினார்னு பட இசை வெளியீட்டு விழாவில்தான் தெரியும். 

கரிகாலன் என்ற கதாபாத்திர பிரதிபலிப்பாத்தான் `கறுப்பு வைரம்’ என்ற வார்த்தையை எழுதினேன். ஆனால், அது ரஜினி சாருக்கும் பொருந்தும். பாட்டு வெளியானதும் நண்பர் சிவகார்த்திகேயன் போன் பண்ணி, `பாட்டு நல்ல எனர்ஜியா இருக்கு’னு வாழ்த்தினார். இப்ப அவர் தயாரிப்பில் நான் ஒரு படம் டைரக்ட் பண்ணிட்டு இருக்கேன். முன்னைவிட பலமடங்கு பொறுப்பு அதிகமாகி இருக்குறதா உணர்றேன். இது, பெண்கள் கிரிக்கெட்டை மையமா வெச்சு எடுக்கப்படும் படம். இதில் வழக்கமான நடிகைகளை நடிக்கவைத்து எடுத்தால் நல்லா இருக்காது. துணை நடிகைகளைக் கூட்டிட்டு வந்து கிரிக்கெட் ஆட வெச்சால் நல்லாயிருக்காதே! 

அருண்ராஜா காமராஜ்

அப்படி உண்மையிலேயே கிரிக்கெட் விளையாடத் தெரிந்த ஒருத்தர்தான் படத்துக்குத் தேவை. அப்படிப்பட்ட ஒரு பெண்ணை ஒரு வருஷமா தேடிட்டு இருக்கேன். கிரிக்கெட் தெரிந்த பெண்கள், தானா முன்வந்து `நான் விளையாடுவேன். நடிக்கத் தயார்’னு சொன்னா நல்லாயிருக்கும். நிறையப் பெண்கள் கிரிக்கெட் விளையாடும் வீடியோவெல்லாம் அனுப்பினாங்க. அவங்க ஆர்வத்தை மதிக்கிறேன். ஆனால் எங்களுக்குத் துல்லியமா கிரிக்கெட் விளையாடத் தெரிஞ்ச பெண்கள்தாம் தேவை. ஒருத்தர் கிரிக்கெட் மட்டையைப் பிடிக்கிற ஸ்டைலை வெச்சே அவர் அடிப்பாரா, டக் அவுட் ஆவாரானு சொல்லிடுவாங்க. அப்படிப்பட்ட கேரக்டருக்கு வழக்கமான நடிகையை நடிக்கவைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த கிரிக்கெட் பெண்ணுக்காகத்தான் காத்திருக்கேன்!”

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement