Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

’’ஆப்பக்கடை கூப்பன் அதிகமா வச்சிருக்கிற ஆள் சிங்கப்பூர் தீபன்..!’’ - அத்தியாயம்-14

’கலக்கப்போவது யாரு’ சீசன் 4ல தான் சிங்கப்பூர் தீபன் போட்டியாளரா எனக்கு அறிமுகம் ஆனார். எல்லா மிமிக்ரி ஆர்டிஸ்ட்டும் ஸ்டேஜுக்கு வந்துதான் மிமிக்ரி பண்ணுவாங்க. ஆனால், தீபன் என்கிட்ட சாதாரணமா பேசிட்டு இருக்கும்போதே ’மகாநதி’ சங்கர் வாய்ஸ்ல பேசிட்டு இருந்தார். அப்பறம்தான் தெரிஞ்சது மனுஷனுக்கு வாய்ஸே அப்படித்தான்னு. 

சிங்கப்பூர் தீபன்

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

அவர் எனக்கு அறிமுகமானபோதே அதென்ன ’சிங்கப்பூர்’ தீபன்னு கேட்டேன். ஒரு நாள் ஜூக்கு போனேன் சார். அங்க சிங்கம் பூரி விட்டுடுச்சு. சிங்கம் பூர்னதால ’சிங்கப்பூர்’ தீபன்னு பேர் வச்சுக்கிட்டேன்னு சொன்னார். அப்போதான் எனக்கு தெரிஞ்சது இவர் சிங்கப்பூருக்கே போகாத ’சிங்கப்பூர்’ தீபன்னு. 

’கலக்கப்போவது யாரு’ சீசன் 4ல ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட்டா சக்ஸஸ்ஃபுல்லா ட்ராவல் ஆனார். அதுக்கப்பறம் ’சிரிச்சா போச்சு’ல தான் தீபன் ரீஎன்ட்ரி கொடுத்தார். அந்த டைம் சில பேர் சோலோ பெர்ஃபார்மென்ஸும் சில பேர் ஜோடியா பெர்ஃபார்மென்ஸும் பண்ணிட்டு இருந்தாங்க. அப்போ விக்னேஷ் கார்த்திக்கும் தீபனும் சேர்ந்து மிமிக்ரி பண்ணுவாங்க. இந்த ஜோடி பண்ணுன நிறைய எபிசோடு வைரல் ஆச்சு. அப்பறம் விக்னேஷ் கார்த்திக் சீரியல்ல நடிக்கப்போனதும், தீபன் தனி ஆளா இருந்தார். அப்போதான் ’சிரிச்சா போச்சு’ ஒரு டீமா உருவாச்சு. பசங்க டீம் பெர்ஃபார்மென்ஸ் பண்றதுல அதிக ஆர்வம் காமிச்சாங்க. நானும் பசங்களுக்கு ஆர்வம் அதிகமாகிடுச்சுனு நினைச்சா, எல்லாரும் ஆப்பக்கடை கூப்பனுக்காக வந்தாங்கனு அப்பறம்தான் தெரிஞ்சது. அதுல தீபன்கிட்டதான் அதிக கூப்பன் இருக்கும். ஆப்பக்கடை கூப்பன் வாங்குறதுக்காகவே பெர்ஃபார்ம் பண்ண வருவார். 

சிங்கப்பூர் தீபன்

டீமா சேர்ந்து பெர்ஃபார்ம் பண்ணின எல்லா எபிசோடுகளும் வேற லெவல்ல இருக்கும். ஹாலிவுட் படங்கள் வரை கலாய்ச்சு காமெடி பண்ணியிருக்காங்க. ஒவ்வொரு நடிகர்கள் மாதிரியும் கெட்-அப் போடுறதுக்கு ஒவ்வொரு ஆள் எங்க டீம்ல இருப்பாங்க. அப்படி விஜயகாந்த், ’நாட்டாமை’ விஜயகுமார், பிரபு, விணுசக்கரவர்த்தி மாதிரி கெட்-அப் போடணும்னா நான் தீபனைத்தான் கூப்பிடுவேன். அவங்களோட வாய்ஸையும் நல்லா மிமிக்ரி பண்ணுவார். வாய்ஸ் மட்டும் இல்லாம பாடி லாங்வேஜும் செட்டாகும். சில மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஒல்லியா இருப்பாங்க, அவங்க வெயிட் அதிகமா இருக்குற நடிகர்கள் வாய்ஸ் பேசும்போது, வாய்ஸ் பக்காவா இருந்தாலும் ஏதோ ஒரு விஷயம் செட்டாகாமல் இருக்கும். தீபன் வெயிட் அதிகமா இருக்கிறனால அந்த நடிகர்கள் வாய்ஸ் பேசும்போது நமக்கு நல்லா கனெக்ட் ஆகும். உடம்பு முழுக்க சந்தனம் பூசிக்கிட்டு வந்து நின்னா வினுசக்கரவர்த்தி மாதிரியே இருப்பார். 

சிங்கப்பூர் தீபன்

மனுஷங்க வேஷம் மட்டுமில்ல ஒரு முறை ’கிங்காங்’ வேஷமும் போட்டார். கெட்டப் போடணும்னு சொன்னா எந்த கெட்டப்பா இருந்தாலும் இறங்கி வந்து பண்ணுவார். அந்த கெட்-அப் எல்லாம் ரொம்ப நல்லா செட்டாகும். இது அவரோட மிகப்பெரிய ப்ளஸ். டக்கு டக்குனு கவுன்ட்டர்ஸ் கொடுக்குறதுல செம கில்லாடி; கலாய்ச்சுட்டே இருப்பார். அதே மாதிரி ’சிரிச்சா போச்சு’ ரவுண்டிற்கு லிப்ட்ல இருந்து வெளியில வரும்போதே கெஸ்டுகளை சிரிக்க வச்சிருவார். ’அது இது எது’ இரண்டாவது சீசன் ஆரம்பிக்கும்போது பட வாய்ப்புகள் அதிகமா வந்தனால ’சிரிச்சா போச்சு’ல தீபனால் கலந்துக்க முடியலை. ’ஹலோ நான் பேய் பேசுறேன்’, ’ஏண்டா தலையில எண்ண வெக்கல’, ’பதுங்கு பாயணும் தல’னு நிறைய படங்கள் பண்ணியிருக்கார். இன்னும் அதிக படங்கள் பண்ணி, டெலிவிஷன் மூலமா கிடைச்ச இடத்தைவிட, தீபன் இன்னும் பெரிய இடத்துக்கு போகணும்னு ஆசைப்படுறேன். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement