Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

``ரஜினிக்கு நான் 'தலைவா'... மத்தவங்களுக்கு மட்டும் மாஸ்டரா?!" - மகேந்திரன்

’நாட்டாமை’ படத்தில் ’தாத்தா நான் பாத்தேன்...’ என்று டயலாக் பேசிய மாஸ்டர் மகேந்திரனை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மூணு வயதில் இருந்து நடிக்க வந்த மகேந்திரன், 25 வருடங்கள் சினிமாவோடு வாழ்ந்தும், வளர்ந்தும் இருக்கிறார். குழந்தை நட்சத்திரத்துக்காக பல விருதுகளையும் பாராட்டுகளையும் வாங்கிய மகேந்திரனிடம், ஒரு சாட். 

மகேந்திரன்

``சின்ன வயசில் இருந்து சினிமாவில் இருக்கீங்க, இதில் இருந்து கத்துக்கிட்ட விஷயம் என்ன..?'' 

’’ ‘பாகுபலி’ பிரபாஸ் எல்லாருக்கும் தெரியும். அவரோட கெரியர்ல நிறைய ஹிட் அண்ட் ஃப்ளாப்ஸை பார்த்தப்பிறகுதான், அவருக்கு ’பாகுபலி’ கிடைச்சது. அதுக்கு காரணம் அவர் நல்ல நடிகராக இருந்தது மட்டும் இல்லை; அவர் ரொம்ப நல்ல மனிதர். அவரைப் பற்றி யார்கிட்ட கேட்டாலும், ரொம்ப நல்ல மனிதர்னு சொல்லுவாங்க. இது என் மனசுகுள்ளேயே இருக்கிற ஒரு விஷயம். நாம என்னதான் திறமையான ஆளா இருந்தாலும், தொடர்ந்து ரெண்டு படம் ஹிட்டாகும்; இல்லை மூணு படம் ஹிட்டாகும். தொடர்ந்து வெற்றிகள் மட்டுமேதான் கிடைக்கும்னு சொல்ல முடியாது. ஆனால், நல்ல மனிதரா இருந்தால் சினிமா என்னைக்குமே உங்களை விடாது. அதுக்கு ரஜினி, கமல், விஜய், அஜித்னு நிறைய பேரை உதாரணமா சொல்லலாம். சினிமாவுல ரொம்ப வருஷம் இருக்கணும்னா அதுக்கு குணம்தான் முக்கியம்னு கத்துக்கிட்டேன்.’’

``குழந்தை நட்சத்திரமா 138 படங்கள் பன்ணியிருக்கீங்க. அந்தச் சமயத்தில் உங்களுக்கு யார் நடிக்கச் சொல்லிக்கொடுப்பா..?''

’’நான் எப்போதுமே டைரக்டர்ஸ் சொல்ற மாதிரிதான் நடிப்பேன்; இப்போ நிறைய பேர் என்கிட்ட, ‘ஒரு ரூபாய்க்கு நடிக்கச் சொன்னா நூறு ரூபாய்க்கு நடிச்சிருக்க’னு கேட்பாங்க. அதுக்கு நான் என்ன பண்ண முடியும். டைரக்டர்ஸ் இந்த மாதிரி நடினு சொல்லும்போது அப்படித்தானே என்னால நடிக்க முடியும். குழந்தை நட்சத்திரமா இருந்த என்னை ’விழா’ படம் முழுசா மாத்திடுச்சு. அந்தப் படத்தில்தான் ரொம்ப யதார்த்தமா நடிச்சிருப்பேன். அந்தப் படத்தில் நான் கத்துக்கிட்டது இப்போ வரைக்கும் யூஸ் ஆகுது.’’

மகேந்திரன்

``உங்க அப்பானால நடிகராக முடியலைனு சின்ன வயசுலேயே உங்களை நடிக்க வெச்சுட்டார். அதுக்காக எப்பவாது ஃபீல் பண்ணியிருக்கீங்களா... இல்லை மூணு வயசுலேயே நடிப்புல ஆர்வம் வந்துடுச்சா..?''

`இல்ல, எப்போதுமே சினிமாதான். சினிமாவைத் தவிர வேற எந்த வேலை செய்யச்சொன்னாலும் எனக்கு தெரியாது. இதுக்காக நான் பெருமையாகத்தான் ஃபீல் பண்றேன். சின்ன வயசுல என்னைச் சுத்தி நிறைய பேர் இருந்தாலும் நான் தனியா தெரிவேன். அந்த மாதிரி ஒரு இடத்தை யாருக்கு பிடிக்காமப் போகும்.’’

``மாஸ்டர் மகேந்திரன் ஆக்டிங்ல கில்லி... படிப்புல..?''

``படிப்புல ரொம்ப புவர். ஒவ்வொரு வருஷமும் வார்னிங் புரமோஷனில்தான் அடுத்தடுத்த வகுப்புக்கு மாத்துனாங்க. பத்தாவது படிக்கும்போது எங்க ஸ்கூல் ஹெச்.எம் என்னைக் கூப்பிட்டு, ‘கண்ணா, இதுவரைக்கும் உன்னை நாங்க பாஸ் பண்ணிவிட்டு அடுத்தடுத்த க்ளாஸுக்கு மாத்தி விட்டுட்டோம். இது பத்தாவது; பப்ளிக் எக்ஸாம். உன் பேப்பரை நாங்க திருத்தப்போறது இல்லை. ஸோ, நல்லா படி’னு சொன்னாங்க. மார்ச் மாத எக்ஸாமுக்கு நவம்பர்ல இருந்துதான் படிக்க ஆரம்பிச்சேன். நான் பாஸானதை என்னாலேயே நம்ப முடியலை.’’

மகேந்திரன்

``நடிகர் மகேந்திரன் சினிமாவில் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பாரா..?''

``மகேந்திரன் ஒரு நடிகன். எந்த கேரக்டர் கொடுத்தாலும் நல்லா பண்ணணும். அந்த கேரக்டருக்கு நான் செட்டாவேன்னு டைரக்டருக்கு தெரிஞ்சு, என்னை நம்பி என்கிட்ட வந்துட்டாருனா அவர் நினைக்கிறதை நான் பண்ணிக்கொடுத்துருவேன். நான் குழந்தை நட்சத்திரமா 5 மாநில விருது, தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், Assist World Recordsனு நிறைய பண்ணியிருக்கேன். அதெல்லாம் என்னோட முதல் இன்னிங்ஸ். இப்போ நடிகனா என்னோட இரண்டாவது இன்னிங்ஸ்ல இருக்கேன். ஆனால், இப்போதும் என்னை மாஸ்டர் மகேந்திரன்னுதான் சொல்றாங்க. அவங்ககிட்ட நான் ஹீரோவா ஒரு நடிகனா தெரியணும். ’’

``மாஸ்டர் மகேந்திரனுக்கு ரஜினி - கமல் ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸாமே..?''

``சினிமாவில் ரொம்ப க்ளோஸ்னா அது ரஜினி சார்தான். நிறைய பேசியிருக்கோம் ரெண்டு பேருமே. ஒரு நாள் ’அருணாச்சலம்’ படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நான் போயிருந்தேன். அப்போ ரம்பா மேடம்க்கூட ’அல்லி அல்லி அனார்க்கலி’ சாங் ஷூட் போயிட்டு இருந்துச்சு. ஷாட்டுக்கு முன்னாடி என்கிட்ட உக்கார்ந்து நிறைய விஷயங்கள் பேசினார். அரசியல் பத்தியெல்லாம் பேசுவார். எனக்கு ஒன்னுமே புரியாது. நாங்க பேசிட்டு இருக்கும்போது மாஸ்டர் கூப்பிட்டதும் டான்ஸ் ஆட போயிட்டார் ரஜினி சார். அவர் அங்க ஆடிட்டு இருக்கும் போதே, ‘தலைவா... ஸ்டெப்ஸ் எப்படி ஓகேவா..?’னு கேட்டார். ரஜினி சார் எப்போதும் என்னை ’தலைவா’னுதான் கூப்பிடுவார். இப்போ நான் ஹீரோ ஆனதுக்கு அப்பறம் சாரை நிறைய இடங்களில் பார்த்தேன். ஆனா பேச முடியலை. 

மகேந்திரன்

கமல் சாரை சமீபத்தில் பார்த்து 40 நிமிஷம் வரை பேசிட்டு இருந்தேன். அப்போ, ’குழந்தை நட்சத்திரம்கிற இமேஜை உடைக்கிறது ரொம்ப கஷ்டம். நான் சில படங்கள்தான் பண்ணினேன். ஆனால், நீ நிறைய படம் பண்ணிட்ட. அதை நீ எப்போ உடைக்கிறீயோ அப்போதான் நிறைய பண்ண முடியும்’னு சொன்னார். இவங்க ரெண்டு பேருமே என் கெரியர்ல ரொம்ப முக்கியமான நபர்கள்.’’

``அடுத்தடுத்து என்னென்ன படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க..?''

‘’ ‘ரங்க ராட்டினம்’, ’இதுக்குதான் நான் அப்போவே சொன்னேன்’னு ரெண்டு காமெடி படங்கள், ’நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’னு செல்வராகவன் சாரோட அசோஸியேட் பண்ற படம். இது வித்தியாசமான சைன்ஸ் ஃபிக்‌ஷன் படம். அப்பறம் ‘சாவி’னு ஒரு தெலுங்கு படம்னு சில படங்கள் பண்ணிட்டு இருக்கேன்.’’

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement