Published:Updated:

`` `களவாணி’ டைட்டில் பிரச்னை, `மாமா’ வடிவேலு, ஓவியாவுடன் ஷூட்டிங், சிவகார்த்திகேயனுடன் மீட்டிங்!" - விமல்

பிர்தோஸ் . அ

`மன்னர் வகையறா' படத்துக்குப் பிறகு சற்குணம் இயக்கத்தில் `K2' படத்தில் நடிக்கிறார் விமல். இந்தப் படம் பற்றிய தகவல்களைச் சொல்லியிருக்கிறார்.

`` `களவாணி’ டைட்டில் பிரச்னை, `மாமா’ வடிவேலு, ஓவியாவுடன் ஷூட்டிங், சிவகார்த்திகேயனுடன் மீட்டிங்!" - விமல்
`` `களவாணி’ டைட்டில் பிரச்னை, `மாமா’ வடிவேலு, ஓவியாவுடன் ஷூட்டிங், சிவகார்த்திகேயனுடன் மீட்டிங்!" - விமல்

"'மன்னர் வகையறா' படம் கொடுத்த வெற்றி எனக்கு சந்தோஷமா இருக்கு. இன்னும் நிறைய நல்ல படங்களில் நடிக்கணும்ங்கிற உத்வேகம் எனக்குள்ளே வந்திருக்கு!'' - என்கிறார் விமல். `களவாணி 2', சுராஜ் இயக்கவிருக்கும் புதிய படம் என பிஸியாக இருக்கும் நடிகர் விமலிடம் பேசினேன்.  

``ஓவியாவுடன் நான் நடிக்கும் படம், `K2'. இது `களவாணி 2' படத்தைத்தான் குறிக்கும். சுருக்கமா, `K2'னு சொல்றோம். `களவாணி 2' சம்பந்தமா படத்தோட இயக்குநர் சற்குணத்துக்கும் தயாரிப்பாளர் நசீருக்கும் இடையில இருந்த பிரச்னை முடிஞ்சிருச்சு. இதைப் பத்தி நிறைய விஷயங்களை நான் சொல்ல முடியாது. சற்குணம்தான் சொல்லணும். முதல் ஷெட்யூல் ஷூட்டிங்கை முடிச்சிட்டோம். அடுத்த ஷெட்யூல் ஆரம்பமாகப்போகுது. இதுலதான், ஓவியாவும் நானும் இடம்பெறும் காட்சிகள் இருக்கு. `களவாணி' மாதிரி, இந்தப் படத்தோட ஷூட்டிங்கும் தஞ்சாவூர் சுற்று வட்டாரங்கள்ல நடக்குது. 

காமெடி கேரக்டர்ல ஆர்.ஜே.விக்கி, கஞ்சா கருப்பு ரெண்டுபேரும் நடிக்கிறாங்க. சூரி அண்ணா இந்தப் படத்துல இல்லை. நானும் அவரும் சேர்ந்து நடிச்சு ரொம்பநாள் ஆச்சு. நல்ல கதை அமையணும், சீக்கிரம் அவரோட சேர்ந்து நடிக்கணும். நேத்துதான் சூரி அண்ணாவோட ஃபேமிலி ஃபங்ஷனுக்காக மதுரைக்குப் போயிட்டு வந்தேன். அங்கே, சிவகார்த்திகேயனும் வந்திருந்தார். பார்த்துப் பேசினேன். மூணுபேரும் நல்ல சந்தர்ப்பத்துல சந்திச்சது ரொம்ப சந்தோஷம். மீண்டும் எங்க மூணுபேரையும் ஒரு படத்துல ஒண்ணா பார்க்க முடியுமானு தெரியலை. அதுக்குக் காலம்தான் பதில் சொல்லும்.

`களவாணி' படத்துல வந்த `அறிக்கி' கேரக்டர்லதான் `K2' படத்திலும் நடிச்சிருக்கேன். ஓவியாவும் `களவாணி' மகேஷ் கேரக்டர்லதான் வர்றாங்க. `களவாணி' படத்துல என் அம்மா, அப்பாவா நடிச்சவங்க இதிலும் தொடருவாங்க. ஆனா, ஓவியாவோட அண்ணன் கேரக்டர் இந்தப் படத்துல இல்லை. இந்தக் கதையில ஓவியாவோட அப்பாவுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்திருக்கோம். ஓவியாவோட அப்பாவா புதுமுகம் ராஜாமோகன் நடிக்கிறார். 

`களவாணி' படத்தோட ஃபிளேவர் இந்தப் படத்துல அப்படியே இருக்கும். ஆனா, படத்தோட கதை முற்றிலும் வேறமாதிரி இருக்கும். சுருக்கமா சொன்னா, `K2' படம் `களவாணி' படத்தோட தொடர்ச்சியா இருக்காது. படத்துல ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொருத்தர் இசையமைச்சிருக்காங்க. `சண்டிவீரன்' இசையமைப்பாளர் அருணகிரி அதில் ஒருவர். படத்தோட இயக்குநர் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் சற்குணம்தான்.

`K2' படத்தோட ஷூட்டிங் முடிஞ்சதும் சுராஜ் சார் படத்தோட ஷூட்டிங் ஆரம்பமாகும். இந்தப் படம் சிட்டியில் நடக்கிற கதை. படத்தோட ஹீரோயின், படத்தோட பெயர் எதுவும் இன்னும் முடிவாகலை. இந்தப் படத்துல என் தாய் மாமா கேரக்டர்ல வடிவேலு நடிக்கிறார். படத்துல அவருக்குப் போலீஸ் கேரக்டர். நான் போலீஸ் ஆக முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கிற பையனா வருவேன். காமெடி லெஜன்ட் வடிவேலு சாருடன் முதல் முறையா நடிக்கப்போறது சந்தோஷமா இருக்கு. இதுக்கு முன்னாடியே அவரோட சேர்ந்து நடிக்கணும்னு ஆசை இருந்தது. இப்போதான் அதுக்கான நேரம் அமைஞ்சிருக்கு. `மன்னர் வகையறா' படத்தைத் தொடர்ந்தும் நிறைய படங்களைத் தயாரிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன். நல்ல கதைக்காக வெயிட் பண்றேன். அதே சமயம், மற்ற தயாரிப்பாளர்கள் படத்திலும் நடிப்பேன்!'' என்று முடித்தார் விமல்.  

பிர்தோஸ் . அ

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..