வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (14/06/2018)

கடைசி தொடர்பு:13:28 (14/06/2018)

``பாவமா நடிக்கிற எஸ்.ஜே.சூர்யா, கோபம் வந்தா கடிச்சிடுவேங்றார்!" - ப்ரியா பவானி சங்கர்

சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்தவர், நடிகை ப்ரியா பவானி சங்கர். இவரது முதல் திரைப்படம் 'மேயாதமான்'. தொடர்ந்து நடிகர் கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்திருக்கிறார்.

``நான் சென்னையில பிறந்து வளர்ந்த பொண்ணு. சீரியல்ல நடிக்கும்போது இருந்த அதே வீட்டுலதான் இப்பவும் இருக்கேன். சீரியலிருந்து சினிமாவுக்கு வந்ததுனால ஏதோ என்னோட லைஃப் ஸ்டைலே மாறிருச்சுனு நினைக்க வேண்டாம்!'' எனச் சிரிக்கிறார், நடிகை ப்ரியா பவானி சங்கர். 

ப்ரியா பவானி சங்கர்

'மேயாதமான்' படம் ரிலீஸுக்குப் பிறகு 'கடைக்குட்டி சிங்கம்' படத்தோட வாய்ப்பு என்னைத் தேடி வந்துச்சு. புரொடியூசரை மீட் பண்ணப் போனப்போ, இயக்குநர் பாண்டியராஜ் சாரும் இருந்தார். அந்த மீட்டிங்லேயே படத்துல ஒரு ஹீரோயினா என்னைக் கமிட் பண்ணிட்டாங்க.  படத்துல கார்த்தியோட அக்கா பொண்ணா நடிச்சிருக்கேன். 'பூங்குழலி செல்லம்மா' என் கேரக்டர் பெயர். ரொம்ப அழகான தமிழ் பெயரைக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. 'மாமா மாமா'னு  கார்த்தி சாரை சுத்தி ரவுண்ட் அடிக்கிற கேரக்டர். கிராமத்துக் கதை. ஷூட்டிங் ஸ்பாட் ரொம்ப ஜாலியா இருந்தது. படத்துல ஹீரோயினா சாயிஷா இருக்கும்போது, என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்குமானு முதல்ல யோசிச்சேன். இதை பாண்டிராஜ் சார்கிட்டயே கேட்டேன். என்னோட எல்லா சந்தேகங்களையும் அவர் கிளியர் பண்ண பிறகுதான், இந்தப் படத்துல நடிக்க சம்மதிச்சேன்.

படத்துல நிறைய நடிகர், நடிகைகள் இருக்காங்க. எல்லோரும் பகிர்ந்துகிட்டு நடிச்சோம்னுதான் சொல்லணும். சத்யராஜ் சார்கூட ''யாருக்கு எந்த சீன் வரும். யாரும் நம்மளை ஓவர்டேக் பண்ணி நடிச்சிடுவாங்களோனு டென்ஷனாவே இருந்தது ஷூட்டிங் ஸ்பாட்!" அப்டீன்னு படத்தோட ஆடியோ லாஞ்ச்ல சொன்னார். அவருக்கு மட்டுமில்ல, படத்துல நடிச்ச எல்லோருக்கும் அந்த டென்ஷன் இருந்தது.  ஏன்னா, படத்துல நடிச்ச எல்லோருமே ஹீரோக்கள்தான். அத்தனை சீனியர் நடிகர்களும் எங்களுக்கு நிறைய விஷயங்களைக் கத்துக்கொடுத்தாங்க. அத்தனை பேரும் ஜாலியான கேரக்டர்ஸ். ஜூனியர்ஸ் எங்களைவிட அவங்க ரொம்ப ஜாலியா இருப்பாங்க; எங்களைக் கலாய்ப்பாங்க.  

கடைகுட்டி சிங்கம்

கார்த்தி சார் நல்ல நடிகர் மட்டுமில்ல, நல்ல மனிதர். நானும், அவரும் ஒரே காலேஜ்ல படிச்சிருக்கோம். ஷூட்டிங் ஸ்பாட்ல பேசிக்கும்போதுதான் எனக்கு இந்த விஷயமே தெரிஞ்சது. சாயிஷாவும் ரொம்ப நல்ல கேரக்டர். நாங்க ரெண்டுபேரும் வர்ற காட்சிகள் குறைவுதான். ஆனா, ஜாலியா இருக்கும். படத்தோட ஆடியோ லாஞ்ச்ல சாயிஷா தமிழ்ல பேசுனதைப் பார்த்து ஆச்சர்யம் ஆயிடுச்சு. படத்தோட தயாரிப்பாளர் சூர்யா சார் ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். அப்போ எனக்கான சீன்ஸ் ஷூட் இல்லை. அதனால அவரைப் பார்த்துப் பேசமுடியலை. ஆடியோ லாஞ்ச்லதான் முதல்முறையா சூர்யா சாரைப் பார்த்தேன்." என்றவர், இயக்குநர் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்துக்கொண்டிருக்கும் பட அனுபவத்தைப் பகிர்கிறார்.  

`` 'ஒருநாள் கூத்து' இயக்குநர் நெல்சன் சார் படத்துல எஸ்.ஜே.சூர்யாகூட நடிக்குறேன். அவர் ரொம்ப கோபக்காரர்னு சொன்னாங்க. நானும் பயந்தேன். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் ரொம்ப அமைதியா இருந்தார். 'நீங்க கோபப்படுவீங்கனு சொன்னாங்க. ஆனா, அப்படித் தெரியலையே சார்!'னு அவர்கிட்ட கேட்டேன். சிரிச்சுட்டு, 'அது, இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவா இருக்கிறப்போ... கோபம் வந்துச்சுனா, கடிச்சுகூட வைப்பேன். இப்போ நடிகரா இருக்கிறதுனால அமைதியா இருக்கேன்!'னு சொன்னார். மனுஷன், டேக் ரெடினு சொன்னா, பேய்த்தனமா நடிப்பார். ஆயிரம் கேள்விகள் கேட்டு, ஒரு காட்சியில நடிப்பார். ஒரே டேக்ல ஓகே பண்ணி அசத்துவார். அவர்கூட நடிக்கும்போது நாம கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கணும். இல்லைனா, அவர் மட்டுமே ஸ்கோர் பண்ணிட்டுப் போயிடுவார். இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கலை. சிட்டி சப்ஜெக்ட். கொஞ்சம் ஹோம்லி, கொஞ்சம் மாடர்னா நடிச்சிருக்கேன். எஸ்.ஜே.சூர்யா சார் கொஞ்சம் பாவமான பையனா நடிச்சிருக்கார்!." எனச் சிரிக்கிறார், ப்ரியா பவானி சங்கர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க