"நண்பர்களுக்கு பார்ட்டினு சொல்லி படம் எடுத்துட்டேன்!" - 'லென்ஸ்' இயக்குநரின் அடுத்த சர்ப்ரைஸ் | lens movie director say's about their next movie the mosquito philosophy

வெளியிடப்பட்ட நேரம்: 21:36 (25/06/2018)

கடைசி தொடர்பு:21:36 (25/06/2018)

"நண்பர்களுக்கு பார்ட்டினு சொல்லி படம் எடுத்துட்டேன்!" - 'லென்ஸ்' இயக்குநரின் அடுத்த சர்ப்ரைஸ்

'லென்ஸ்' படத்தின் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் இராதாகிருஷ்ணன், தனது அடுத்த படத்துக்கு 'தி மஸ்கிட்டோ பிலாஸஃபி' எனப் பெயரிட்டிருக்கிறார். படத்தைப் பற்றிய அவர்...

" 'லென்ஸ்' படத்துக்குப் பிறகு அடுத்த படத்துக்காக ஹீரோ, தயாரிப்பாளர்னு நிறைய விஷயங்களை யோசிச்சேன். அப்போதான் ஒரு எண்ணம். கதை, திரைக்கதைனு  எதுவும் இல்லாம, கன்டென்ட் மட்டும் வெச்சு படமெடுத்தா என்னன்னு தோணுச்சு. அதுதான், 'தி மஸ்கிட்டோ பிலாஸஃபி' திரைப்படம்" எனச் சிரிக்கிறார், இயக்குநர் ஜெயப்பிரகாஷ் இராதாகிருஷ்ணன். 

தி மஸ்கிட்டோ பிலாஸபி

"என்ன மாதிரியான படம் இது?" 

"படத்துக்கு கதை திரைக்கதை இல்லை. ஸோ, இதுதான் கன்டென்ட்னு முடிவு பண்ணிட்டேன்.  படத்துல நடிச்ச யாருக்கும் கதையோட போக்கு எப்படி இருக்கும்னு தெரியாது.  படத்துக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்னு படம் பார்க்கும்போது தெரியும். படத்துல நான் ஒரு இடத்துல, 'தி மஸ்கிட்டோ பிலாஸஃபி'னு பேசுறதை தலைப்பா வெச்சேன். அது கதைக்கும் பொருத்தமா இருந்தது." 

"யாரெல்லாம் நடிச்சிருக்காங்க?" 

"நான், என் மனைவி, நண்பர்கள்தான் நடிச்சிருக்கோம். எல்லாரும் அவங்க, அவங்களாவே நடிச்சிருக்காங்க. படத்தோட ஹீரோவா என் உதவி இயக்குநர் சுரேஷ் நடிச்சிருக்கார். ஒருநாள் என் நண்பர்கள் எல்லோருக்கும் போன் பண்ணி, 'வீட்டுல ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருக்கேன், வந்திடுங்க'னு சொன்னேன். வந்த யாருக்கும் நானா சொல்றவரை கேமரா இருக்கு, இதைப் படமா எடுக்கப்போறாங்கன்னு தெரியாது. படத்தோட கேமராமேனும் என் நண்பர். அதனால, அவர்கிட்டேயும் சொல்லாம, சும்மாதான் ஷூட் பண்றோம்னு வேலை வாங்குனேன். 

வந்தவங்க, கேமராவைப் பார்த்துட்டு 'என்னடா நடக்குது'னு கேட்டப்போகூட, 'ஒண்ணுமில்ல... சும்மாதான் ஷூட் பண்றோம்'னு சமாளிச்சேன். எல்லாரும் டிரிங் பண்ணிட்டு, திருமணம், சமூகம்னு நிறைய விஷயங்களைப் பேசுனாங்க. அதை அப்படியே படமாக்கிட்டேன். படத்துல இருக்கிற வசனங்கள்கூட ஆன் தி ஸ்பாட்ல பேசிக்கிட்டதுதான். ரீடேக்கூட போகலை."

"அப்படினா, இந்தப் படத்தை உண்மைச் சம்பவம்னு சொல்லலாம்ல...?" 

"உண்மைச் சம்பவத்தில் கொஞ்சம் கற்பனைனுகூட சொல்லலாம். நான் பேசுற வசனம்கூட ஸ்பாட்ல தோன்றினதுதான். ரெண்டே நாள்ல முழுப் படத்தையும் எடுத்து முடிச்சிட்டேன். படத்துல ரெண்டு முக்கியமான பெண் கேரக்டர் இருக்காங்க. என் மனைவியும் ஒரு நடிகையும் தான் அவங்க. ஷூட்டிங் பண்ணும்போது, என் பையன்கூட இடையிடையே கிராஸ் பண்ணிப் போவான். அதெல்லாம் ரியல் ஃபீல் கொடுக்க உதவியிருக்கு. சிலருக்குள்ள நடக்கிற ஒரு சீரியஸான உரையாடலை இந்தப் படத்துல பார்க்கலாம்." 

ஸ்ருதிஹாசன், 'லென்ஸ்' ஜெயப்பிரகாஷ் இராதாகிருஷ்ணன்

"டப்பிங் தேவைப்பட்டிருக்காதே?" 

"லைவ் ரெக்கார்டிங் பண்ணிட்டோம். தெளிவற்ற சில வசனங்களுக்கு மட்டும் டப்பிங் பண்ணோம். ஆனா, படத்தை எடிட் பண்ணி முடிக்கிறதுக்குத்தான் சில நாள்கள் தேவைப்பட்டது. கிட்டத்தட்ட மூணு மாசம் எடிட்டிங் பண்ணோம். 'மை சன் இஸ் கே' படத்துக்கு எடிட்டிங் செய்த டேனியல் சார்லஸ் இந்தப் படத்துக்கு எடிட் பண்ணியிருக்கார். பெங்களூரைச் சேர்ந்த ஐயோ ராமா (நிஜமாவே இதுதான் பெயராம்!) இந்தப் படத்துக்கு மியூசிக் பண்ணியிருக்கார்." 

"படத்தோட தயாரிப்பாளரா ஸ்ருதிஹாசன்?!" 

"ஸ்ருதியோட அம்மா சரிகா மேடம் என் 'லென்ஸ்' படத்தைப் பார்த்திருக்காங்க. மும்பையில் நடந்த ஃபிலிம் ஃபெஸ்டிவெல்ல 'லென்ஸ்' படத்துக்காக அவங்கதான் எனக்கு விருது கொடுத்தாங்க. சென்னை வந்திருந்தப்போ என்னை மீட் பண்ணிப் பேசினாங்க. அப்போதான், 'தி மஸ்கிட்டோ பிலாஸஃபி' படத்தைப் பத்தி சொன்னேன். ரொம்ப ஆச்சர்யப்பட்டாங்க, படத்தையும் பார்த்தாங்க. உடனே, 'எங்க தயாரிப்பு நிறுவனம் மூலமா இந்தப் படத்தை ரிலீஸ் பண்றோம்'னு சொன்னாங்க. நல்ல விஷயமாச்சே... நானும் சம்மதிச்சுட்டேன். ஸ்ருதிஹாசனும் படத்தைப் பார்த்துட்டு பாராட்டினாங்க. 'நாம ஒரு படம் பண்ணுவோம்'னு ஸ்ருதி மேடம் சொல்லியிருக்காங்க, கூடிய சீக்கிரம் அவங்களை வெச்சுப் படம் பண்ணுவேன்னு நம்புறேன்." 

"இயக்குநர் பாலா தயாரிப்புல ஒரு படம் பண்றதா இருந்ததே... அது என்னாச்சு?" 

"அவர் படத்துல கொஞ்சம் பிஸியா இருக்கார். அதனாலதான், கொஞ்சம் தாமதமாகுது.  சீக்கிரம் நடக்கும்னு எதிர்பார்க்குறேன்." 

the mosquito philosophy

"ஸ்கிரிப்ட் பேப்பரே இல்லாம படம் பண்ண அனுபவம் எப்படி இருந்தது?" 

"நல்ல அனுபவம்தான். இந்த அனுபவம் எனக்கு ஈஸியா இருந்ததுனுதான் சொல்லணும். எல்லோரும் எதார்த்தமா இருக்கும்போது, அதை ரசிக்கிறது ஒரு அருமையான அனுபவம். இந்தப் படம் அதை எனக்குக் கொடுத்திருக்கு. யாரும் நடிக்கலை, எல்லாம் எதார்த்தமா இருந்தது. ஒரு வீட்டுல நாலுபேர் பேசிக்கிட்டு இருக்கும்போது எட்டிப் பார்த்தா எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும் இந்தப் படம். உதாரணத்துக்கு, இது 'பிக் பாஸ்' வீடு மாதிரி ஒரு படம்னுகூட சொல்லலாம். இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும்னு நம்புறேன்."

 

 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close