’’ஒரு துரோகம்தான் தம்பி ராமையாவுக்கு ’மைனா’ வாய்ப்பை கொடுத்துச்சு..!’’ - பிரபு சாலமன்

நான் என்கிட்ட இருந்த கொஞ்ச காசை வச்சுத்தான் ’மைனா’ படத்தை ஆரம்பிச்சேன். அவர் கேட்டத் தொகையை என்னால கொடுக்க முடியலை. அவர் அப்படி கேட்டதும் எனக்கு ரெண்டாவது ஆப்ஷனா ஞாபகத்துக்கு வந்தவர் தம்பி ராமையா சார்தான். அந்த நடிகர் எனக்கு செய்த துரோகத்தால்தான் ’மைனா’ வாய்ப்பு தம்பி ராமையா சாருக்கு கிடைச்சது. 

’’ஒரு துரோகம்தான் தம்பி ராமையாவுக்கு ’மைனா’ வாய்ப்பை கொடுத்துச்சு..!’’ - பிரபு சாலமன்

ழுத்து, பாடல்கள், இசை, இயக்கம் என தன் மகன் உமாபதிக்காக வேற லெவலில் களமிறங்கி இருக்கிறார் தம்பி ராமையா. இவர் இயக்கியிருக்கும் ’மணியார் குடும்பம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் இயக்குநர்கள் பாக்யராஜ், சேரன், கரு.பழனியப்பன், வெங்கடேஷ், ’சிறுத்தை’ சிவா, பிரபு சாலமன், மோகன் ராஜா, கெளரவ், சீனு ராமசாமி, நடிகர்கள் சூரி, ஆர்.கே.சுரேஷ், தயாரிப்பாளர் சத்யஜோதி ஃப்லிம்ஸ் தியாகராஜன் மற்றும் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர். 

மணியார் குடும்பம், தம்பி ராமையா

விழாவின் தொடக்கத்தில் அனைவரையும் வரவேற்று பேசிய தம்பி ராமையா, ‘’‘சாட்டை’ படத்தில் நான் நடித்த கேரக்டர்தான் சமுத்திரக்கனி இயக்கிய ’அப்பா’ படத்தின் ஆரம்பப் புள்ளி. அதேபோல் ’தனிஒருவன்’ படத்தின் நான் நடித்த கேரக்டர்தான் மணியார் குடும்பம் படத்தின் ஆரம்பப் புள்ளினு சொல்லலாம். அரவிந்த் சாமியோட அப்பாவி அப்பாவாக அந்தப் படத்தில் நான் நடிச்சிருந்தேன். அந்த கேரக்டரை ஒரு படம் முழுக்க கொண்டுவரணும்னு ஆசைப்பட்டுதான், இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை வடிவமைத்தேன். என் மகனுக்காகத்தான் மீண்டும் நான் இயக்குநராகியிருக்கேன். என் மகனுக்கும் சினிமாவின் மீது காதல் இருந்ததால்தான் அவனையும் சினிமாத்துறைக்கு அழைச்சுட்டு வந்தேன்’’ என்றார். 

கரு.பழனியப்பன்

கரு.பழனியப்பன் பேசும்போது, ‘’தம்பி ராமையா அண்ணன் வெற்றியை ருசிக்க 52 ஆண்டுகள் காத்திருந்தார். ஆனால், அவரோட பையன் உமாபதியை 24 வயசுலேயே சினிமாத்துறைக்கு கொண்டு வந்துட்டார். அதை உமாபதி உணர்ந்து சினிமாவில் ஜெயிக்க வேண்டும்’’ என்றார். 

சூரி

சூரி பேசும்போது, ``ராமையா அண்ணனோட எனர்ஜியைப் பார்த்து நான் மிரண்டு போயிருக்கேன். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள்ள வரும்போதே குதிரை கனைக்கிற மாதிரி ஒரு சவுண்டு விடுவார். அதுலேயே தெரிஞ்சுடும், ராமையா அண்ணன் செட்டுகுள்ள வந்துட்டார்னு. எப்படி இவ்வளவு எனர்ஜினு ஒரு நாள் அவர்கிட்ட கேட்டப்போது, ‘எவ்வளவோ கஷ்டப்பட்டேன். இப்போ இருக்கிற இயக்குநர்கள் எனக்கு நல்ல படங்களா கொடுத்து என் மனசை லேசாக்கிட்டாங்க. அழகான, அன்பான குடும்பம். எந்தக் கஷ்டமும் இல்லாம ஜாலியா இருக்குறனால இந்த எனர்ஜி வருது தம்பி’னு சொன்னார். அதே எனர்ஜி தம்பி உமாபதிக்கும் இருக்கு. அவரோட டான்ஸ் வீடியோவைப் பார்த்தாலே அது நமக்கு தெரியும். இப்போ மோடியும் கோலியும் ஃபிட்னஸ் வீடியோ விட்டாங்களே, அதே மாதிரி தம்பி உமாபதி அவரோட டான்ஸ் வீடியோவை எல்லா நடிகருக்கும் அனுப்பலாம்’’ என்றார்.

பிரபு சாலமன்

பிரபு சாலமன் பேசும்போது, `` ‘மைனா’ படத்தில் தம்பி ராமையா சார் நடித்த கதாபாத்திரத்துக்கு வேறு ஒரு நடிகர்தான் முதலில் கமிட்டாகியிருந்தார். ஷூட்டிங் போவதற்கு சில நாள்கள் முன்பு, ‘எனக்கு ஒரு நாளுக்கு ஒரு லட்சம் சம்பளம் வேணும்’னு கேட்டார். நான் என்கிட்ட இருந்த கொஞ்ச காசை வச்சுத்தான் ’மைனா’ படத்தை ஆரம்பிச்சேன். அவர் கேட்டத் தொகையை என்னால கொடுக்க முடியலை. அவர் அப்படி கேட்டதும் எனக்கு ரெண்டாவது ஆப்ஷனா ஞாபகத்துக்கு வந்தவர் தம்பி ராமையா சார்தான். அந்த நடிகர் எனக்கு செய்த துரோகத்தால்தான் ’மைனா’ வாய்ப்பு தம்பி ராமையா சாருக்கு கிடைச்சது. எனக்கும் அவருக்கும் ரொம்ப கால நட்பெல்லாம் இல்லை. வடிவேலு சாரோட காமெடியில் இவரைப் பார்த்திருக்கேன்; ஒரு ஃபங்ஷனில் பார்த்து பேசியிருக்கோம்; அவ்வளவுதான். ஆனால், இவர் அந்தக் கேரக்டர் பண்ணுனா நல்லாயிருக்கும்னு ஏதோ ஓர் உணர்வு உள்ளுக்குள்ள தோணுச்சு. ’மைனா’ படம் பண்ணும்போதே, ’இந்தப் படத்துக்காக நீங்க தேசிய விருது வாங்குவீங்க’னு சொன்னேன். அதே மாதிரி அவருக்கு விருதும் கிடைச்சது. நடிகனா தம்பி ராமையா சார் எப்படி நல்ல பெயர் எடுத்தாரோ அதே மாதிரி அவரோட பையனும் முன்னுக்கு வரணும்’’ என்றார்.

சேரன்

சேரன் பேசும்போது, ``எனக்கும் தம்பி ராமையா அண்ணனுக்கும் பெரிய பழக்கம் கிடையாது. அவர் என்னுடைய படங்களில் நடிச்சது கிடையாது. ஆனால், தூரத்தில் நின்னு அவரைத் தொடர்ந்து பார்த்துட்டு இருக்கேன். ஒரு இயக்குநராகணும்னு சினிமாவுக்கு வந்து நடிகனாகி, காமெடி பண்ணி, குணசித்திர வேடங்களில் நடிச்சு, தேசிய விருதே வாங்கிட்டார். சில நாள்களாகத் தம்பி உமாபதியையும் கவனிச்சுட்டு இருக்கேன். ஏன்னா, ஜூலை 13-ம் தேதி தொடக்கவிருக்கிற என்னோட புதுப்படத்தில் கதாநாயகனாக உமாபதிதான் நடிக்கிறார். அதை இந்த இடத்தில் அறிவிக்கிறது மிகச்சரியா இருக்கும்’’ என்றார். 

சிறுத்தை சிவா

’சிறுத்தை’ சிவா பேசும்போது, ``வீரம் படத்தில் இருந்துதான் தம்பி ராமையா சாரை எனக்குத் தெரியும். அப்போதிருந்தே என்கிட்ட, ‘உமாபதி நல்ல நடிகனாகணும்’னு சொல்லிட்டே இருப்பார். தன்னுடைய மகன் பெரிய ஆளாக வரணும்னு அதை மட்டுமே யோசிக்கக்கூடிய ஆள்’’ என்றார்.

வாழ்த்துகள் தந்தைக்கும் மகனுக்கும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!