" 'எந்திரன் 2.0'ல ரெண்டு எந்திரங்களுக்கு இடையே காதல்!" - மதன் கார்க்கி | Intereview with madhan karky about Kayamkulam Kochunni and enthiran 2 Point 0

வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (13/07/2018)

கடைசி தொடர்பு:16:55 (14/07/2018)

" 'எந்திரன் 2.0'ல ரெண்டு எந்திரங்களுக்கு இடையே காதல்!" - மதன் கார்க்கி

`காயங்குளம் கொச்சுண்ணி' படத்துக்குத் தமிழில் வசனம் எழுதியிருக்கும் மதன் கார்க்கி, படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்துப் பேசியிருக்கிறார்.

`` `பாகுபலி' படத்துக்கு வசனம் எழுதும்போது, என் கற்பனைக்கு நிறைய விஷயங்கள் இருந்துச்சு. கதாபாத்திரத்தோட பெயரை நம்ம விருப்பத்துக்கு ஏத்த மாதிரி மாத்திக்கலாம். ஆனா, `காயங்குளம் கொச்சுண்ணி' படத்தைப் பொறுத்தவரை அப்படியில்லை!.'' என்று பேசத்தொடங்கினார் இப்படத்திற்கு தமிழில் வசனம் எழுதியிருக்கும் மதன் கார்க்கி. 

மதன் கார்க்கி

``இந்தப் படம் நாட்டுபுறக் கலைஞர்களின் நாயகன் பற்றிய கதை. கதை நடக்கும் காலம் ரொம்பப் பழைமையானது. சாமானியன் ஒருத்தன் அரசை எதிர்த்து நிற்கும்போது, என்னென்ன நடக்கும்.. இதுதான் கதை. அதனால, அந்தக் காலகட்டத்துல பயன்படுத்தப்பட்ட சொற்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு ஆங்கிலம் கலக்காத தமிழில் வசனம் எழுதியிருக்கேன். ஒவ்வொரு படத்துக்கும் அதுக்கான மொழினு ஒண்ணு இருக்கு. இந்தப் படத்துல காஸ்டியூம்ஸ், அதைப் பயன்படுத்தியிருக்கிற ஆள்களைப் பொருத்து அமையும்." 

``இந்தப் படத்துக்கு வசனம் எழுதுறதுக்கு முன்னாடி எந்த மாதிரியான ஹோம் வொர்க்ஸ் எடுத்துக்கிட்டீங்க?''

`` `களரி' பற்றிய நிறைய விஷயங்கள் படத்துல இருக்கு. அதனால, களரி பற்றிய விஷயங்களைப் படிச்சேன். தவிர, அந்தக் காலத்துல பயன்படுத்தபட்ட சொற்கள் என்னென்னனு தேடினேன். தங்கத்தை நாம் பொன், பவுன்னு சொல்வோம். அந்தக் காலத்துல `பண விடை'னு சொல்லியிருக்காங்க. கடையில பொருள் வாங்கும்போது ஒரு கிலோனு சொல்வோம். ஆனா, அந்தக் காலத்துல `மரகால்'னு சொல்லியிருக்காங்க. இப்படிப் பல வார்த்தைகளைக் கண்டுபிடிச்சு படத்துல வெச்சிருக்கேன்." 

`` `காயங்குளம் கொச்சுண்ணி' பற்றிய புத்தகங்கள் ஏதாவது படிச்சீங்களா?"

``இல்லை. முழுப் படத்தையும் இயக்குநர் என்கிட்ட கொடுத்தார். படத்தோட கதைக்காக இயக்குநர் நிறைய வொர்க் பண்ணியிருக்கார். அவரே நிறைய ஆய்வுகள் பண்ணி திரைக்கதை எழுதியிருந்ததுனால, நான் பெருசா எதையும் பண்ணலை." 

காயங்குளம் கொச்சுண்ணி

``படத்துக்கான தமிழ் வசனம் எழுதும்போது சவாலா இருந்த விஷயங்கள் என்னென்ன?" 

``மலையாளத்துல இருந்து தமிழுக்கு மாற்றும்போது என்ன தேவையோ அதை மட்டும்தான் பண்ணேன். டைரக்டர் எனக்குப் படத்தோட ஆங்கில மொழியாக்கத்தையும் கையில் கொடுத்துட்டார். அதனால, தமிழ் மொழிக்கு ஏத்தமாதிரி பொருள் கெடாம எழுதியிருக்கேன். ரொம்ப சவாலா இருந்த விஷயம், மலையாள நடிகர்களின் பாடி லாங்குவேஜுக்கும், லிப் சிங்குக்கும் தகுந்தமாதிரி வசனம் எழுதினதுதான்."

``ஆர்டிஸ்ட், டப்பிங் பேசும்போது நீங்களும் உடன்  இருப்பீங்கனு கேள்விப்பட்டோமே?''

``கண்டிப்பா!. முக்கியமான கேரக்டர்கள் டப்பிங் பேசும்போது நான் கூடவே இருப்பேன். முடியாத பட்சத்தில் என்னோட குழு சரியா இதைப் பார்த்துக்குவாங்க. `பாகுபலி' படத்துக்குப் பிறகு எனக்கொரு நல்ல டீம் அமைஞ்சிருக்கு. என் உதவியாளர் விஜயகுமார் எப்பவும் என்கூட இருப்பார். தவிர, டப்பிங் கொடுக்க யாருடைய குரல் சரியா இருக்கும்னு நானே தேர்வு பண்றேன். அதை என் விருப்பத்துக்கே விட்டுடுறாங்க. இந்தப் படத்துல நிவின் பாலி கேரக்டருக்கு சேகர் என்பவர் டப்பிங் பேசியிருக்கார். `நடிகையர் திலகம்' படத்துல விஜய் தேவரகொண்டாவுக்கு டப்பிங் கொடுத்தவர்.

மோகன்லால் கேரக்டருக்கு அவருடைய குரலே நல்லா இருக்கும் என்பதுதான், என் சாய்ஸ். தயாரிப்பாளர் தரப்புல இருந்து மோகன்லால்கிட்ட பேசிக்கிட்டு இருக்காங்க. படத்துல அவருக்குச் சின்ன கேரக்டர்தான். ஆனா, ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கும். நடிகை ப்ரியா ஆனந்த் சொந்தக் குரல்லேயே பேசியிருக்காங்க. ஒரு திரைப்படத்தை அடுத்த லெவலுக்குக் கொண்டுபோறதுல டப்பிங்குக்குப் பெரும் பங்குண்டு. அதனால, யாரா இருந்தாலும் அவங்க சொந்தக் குரல்ல டப்பிங் பேசுறதுதான் சரியா இருக்கும்ங்கிறது என் நிலைப்பாடு." 

`` `எந்திரன்', `2.0' ரெண்டு படத்துக்கும் பாடல் எழுதியிருக்கீங்க. என்ன வித்தியாசம் உணர்றீங்க?" 

`` `எந்திரன்' படத்துல பாட்டு எழுதும்போது ஒருதலைக் காதல் பற்றி சொன்னேன். ஒரு பெண் மீது எந்திரத்துக்கு வர்ற காதலை நல்லா எழுதிட்டேன். `2.0' படத்துல இரண்டு எந்திரங்களுக்கு இடையேயான காதலை எழுதியிருக்கேன்."
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close