Published:Updated:

"தமிழ்படம் 2 ஸ்பாட்ல சிவா நடிச்சதை பார்த்திருக்கணுமே..!’’ - ஐஸ்வர்யா மேனன்

பிர்தோஸ் . அ

`தமிழ்ப் படம் 2' படத்தில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன், சினிமா என்ட்ரி குறித்துப் பேசியிருக்கிறார்.

"தமிழ்படம் 2 ஸ்பாட்ல சிவா நடிச்சதை பார்த்திருக்கணுமே..!’’ - ஐஸ்வர்யா மேனன்
"தமிழ்படம் 2 ஸ்பாட்ல சிவா நடிச்சதை பார்த்திருக்கணுமே..!’’ - ஐஸ்வர்யா மேனன்

``நான் பிறந்தது ஈரோடு. வளர்ந்தது சென்னை. சின்ன வயசுல இருந்து சினிமாவுல ஹீரோயினா நடிக்கணும்னு ஆசையிருந்துச்சு. அந்த ஆசை இப்போ நிறைவேறிருச்சு!'' சந்தோஷமாகப் பேசுகிறார், `தமிழ்ப் படம் 2' படத்தின் நாயகி ஐஸ்வர்யா மேனன். 

``இஞ்ஜினீயரிங் படிச்சு முடிச்சுட்டு கொஞ்சநாள் மாடலிங் ஃபீல்ட்ல இருந்தேன். சில விளம்பரப் படங்களிலும் நடிச்சிருக்கேன். சினிமாவில் ஹீரோயினா நடிக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன். இடையில் சில படங்களில் கேமியோ ரோலில் நடிக்க வாய்ப்புகள் வந்துச்சு. அதையும் தவிர்க்காமல் நடிச்சேன். கண்டிப்பா நம்ம ஹீரோயினா வந்துடுவோம்ங்கிற நம்பிக்கை மட்டும் இருந்தது. சினிமாவுல நடிக்கப்போறேன்னு சொன்னதும் வீட்டுல எங்க அம்மா, அப்பா கொஞ்சம் ஷாக் ஆனாங்க. என் ஆசையும், கனவும் சினிமாதான்னு புரிஞ்சுக்கிட்டு ஓகே சொல்லிட்டாங்க. 

நடிகர் கிருஷ்ணா நடிச்ச `வீரா' படத்துல ஹீரோயினா அறிமுகமானேன். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர். இதில் எனக்கான ரோலை நல்லபடியா நடிச்சேன். எனக்கு நல்லா தமிழ் தெரியும்ங்கிறதால, ஷூட்டிங் ஸ்பாட்ல எப்போதும் ரீடேக் எடுக்கமாட்டேன். ஸ்பாட்ல எப்போவும் எல்லோர்கிட்டேயும் தமிழ்லதான் பேசிக்கிட்டு இருப்பேன். நான் நடிச்ச ரெண்டு படத்துக்கும் நானே டப்பிங் பேசினேன்.  

`தமிழ்ப் படம் 2' படத்துக்காக ஆடிஷன் நடக்குதுனு கேள்விப்பட்டு கலந்துகிட்டேன். ஸ்க்ரீன் டெஸ்ட் வெச்சாங்க. அதுல செலக்ட் ஆகி, ஹீரோயின் ஆனேன். `தமிழ்ப் படம்' ரிலீஸ் ஆனப்போ நான் ஸ்கூல் ஸ்டூடன்ட். இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தேன்னு ஞாபகம் இல்லாத அளவுக்குப் பார்த்திருக்கேன். படத்துல சிவா நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் என்னைக்குமே அகில உலக சூப்பர் ஸ்டார்தான். இந்தப் படத்துல அவரைத் தவிர யாரும் இவ்வளவு சிறப்பா நடிச்சிருக்க முடியாது. காமெடியான வசனங்களைக் கொஞ்சம்கூட சிரிக்காமப் பேசி, அசால்ட் பண்ணுவார் சிவா. டேக் ஓகே ஆனதுக்குப் பிறகு, அந்த வசனத்தைச் சொல்லிச் சொல்லி சிரிப்பார். 

இந்தப் படத்துல கமிட் ஆனதும், இயக்குநர் அமுதன் சார் படத்தோட முழுக் கதையையும் என்கிட்ட சொன்னார். எனக்கும் நடிக்கிறதுக்கு நிறைய ஸ்கோப் இருந்தது. நிறைய கெட்டப்ல நடிச்சு அசத்திட்டேன். பத்துப் படங்கள்ல பண்ண வேண்டியதை இந்த ஒரு படத்துல பண்ணிட்டேன். என்னைவிட என் கேரக்டருக்காக அதிகம் மெனக்கெட்டது, மேக்கப் ஆர்ட்டிஸ்ட்தான். முக்கியமா, `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கலீஸி கெட்டப்புக்கு என்னை மாத்துறதுக்கு ரொம்பவே சிரமப்பட்டாங்க. இந்தப் படம் என் கரியர்ல மிக முக்கியமான படம். 

`தமிழ்ப் படம் 2' டீம் யாருக்கும் மற்ற நடிகர், நடிகைகளைக் கலாய்க்கணும்னு நோக்கம் இல்லை. தியேட்டருக்கு வர்ற ரசிகர்கள் சிரிச்சுட்டுப் போகணும்னு மட்டும்தான் நினைச்சோம். ரிலீஸுக்குப் பிறகு படத்துக்குக் கிடைச்ச ரெஸ்பான்ஸைப் பார்த்து, நாங்க நினைச்சது நடந்தது சந்தோஷம். என் ஃப்ரெண்ட்ஸ், ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லோரும் என் நடிப்பு நல்லா இருக்குனு பாராட்டினாங்க.  

படம் ரிலீஸான முதல்நாள் ஆடியன்ஸ்கூட சேர்ந்துதான் நாங்க படம் பார்த்தோம். அதுவரை எங்க இயக்குநர் எங்களுக்குப் படத்தைப் போட்டுக்காட்டவே இல்லை. `தமிழ்ப் படம் 3' வருமானு தெரியலை. வந்தா நல்லாதான் இருக்கும்!. இந்தப் படத்துக்குப் பிறகு நிறைய படங்களில் நடிக்க சான்ஸ் வருது. எனக்கு சூர்யா சார்கூட நடிக்கணும்னு ஆசை. தவிர, தமிழ்ல இருக்கிற எல்லாப் பெரிய நடிகர்களோடும் நடிக்கணும். அடுத்து ஒரு பெரிய படத்துல கமிட் ஆகியிருக்கேன். தமிழ் மற்றும் தெலுங்கு ரெண்டு மொழியிலும் இந்தப் படம் தயாராகப்போகுது. அந்தப் படம் என்னங்கிறது சஸ்பென்ஸ்!" எனச் சிரிக்கிறார், ஐஸ்வர்யா மேனன்.

பிர்தோஸ் . அ

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..
குமரகுருபரன்