’’இரஞ்சித் அரசியல் மாதிரி, அது என் அரசியல்னு நினைச்சுக்கோங்க..!’’ - சி.எஸ்.அமுதன் | Tamizh Padam movie director cs amudhan interview

வெளியிடப்பட்ட நேரம்: 09:54 (23/07/2018)

கடைசி தொடர்பு:18:01 (23/07/2018)

’’இரஞ்சித் அரசியல் மாதிரி, அது என் அரசியல்னு நினைச்சுக்கோங்க..!’’ - சி.எஸ்.அமுதன்

’’இரஞ்சித் அரசியல் மாதிரி, அது என் அரசியல்னு நினைச்சுக்கோங்க..!’’ - சி.எஸ்.அமுதன்

எட்டு வருடங்களுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறது ’தமிழ்ப்படம்’. முன்னோட்டத்தில் பலரை கலாய்த்தவர்கள், முழு படத்தில் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருந்த பலருக்கும், இன்ப அதிர்ச்சியை கொடுத்தது ‘தமிழ்ப்படம் -2’. வெற்றி உற்சாகத்தில் இருந்த இயக்குநர் சி.எஸ்.அமுதனை சந்தித்தோம்.

சி எஸ் அமுதன்

தியேட்டர்ல ஆடியன்ஸோட ரெஸ்பான்ஸை போய் பார்த்தீங்களா..?

’’ ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’, ’ஃபாரெஸ்ட் கம்ப்’னு ஹாலிவுட்ல இருந்தும் சில விஷயங்களை படத்துக்குள் வெச்சிருந்தோம். அதனாலேயே படம் ரிலீஸாகுற வரைக்கும், ’எல்லா ஆடியன்ஸுக்கும் இந்த விஷயங்கள் எல்லாம் சரியா போய் சேருமா, நாம எதை சொல்ல வரோம்னு தெரிஞ்சுப்பாங்களா’னு  எனக்கு சில யோசனைகள் இருந்துச்சு. ஆனால், தியேட்டர்ல அந்த சீன்களுக்கு அவங்க என்ஜாய் பண்றதை பார்க்கும் போது சந்தோஷமா இருந்துச்சு. சிட்டியில மட்டுமில்ல சிட்டியைத் தாண்டியும் சில தியேட்டர்களுக்குப் போய்ப் பார்த்தேன். அங்கேயும் இதே ரெஸ்பான்ஸ்தான்.’’

சென்சாருக்கும் உங்களுக்கும் பிரச்னைகள் வந்துச்சா..?

’’பிரச்னையெல்லாம் வரல, நிறைய பேச்சுவார்த்தை போச்சு. ’சில விஷயங்கள் ரொம்ப நேரடியா சொல்ற மாதிரி இருக்கு; அதெல்லாம் வேணாம்’னு அவங்க சொன்னாங்க. நாங்க பேசி சில வசனங்களை வர வெச்சோம்; சில வசனங்களை ம்யூட் பண்ணினோம். எங்களுக்கு யூ சான்றிதழ் வேணும், அதுக்காக அவங்க சொல்ற சில விஷயங்களை ஏத்துக்கிட்டோம். நாங்க சொல்றதையும் அவங்க கேட்டுக்கிட்டாங்க.

தமிழ்ப்படம் 2

முதல் பாகத்தில் படங்களை மட்டும்தான் கலாய்ச்சீங்க... இந்தப் படத்தில் அரசியல்வாதிகளையும், சில நபர்களை பெர்ஷனலாகவும், ஒருதலை பட்சமாகவும் கலாய்ச்சிருக்கீங்கனு சில விமர்சனங்கள் உங்க மேல இருக்கே..?

’’ ‘தமிழ்ப்பட’த்தோட முதல் பாகம் பார்த்த ஆடியன்ஸ் எப்படியும் ரெண்டாவது பாகம் பார்க்க வருவாங்க. அப்படி வரவங்களுக்கு நான் எதாவது சர்ப்ரைஸ் கொடுக்கணும்ல, முதல் பாகம் மாதிரி இதுலேயும் படங்களை மட்டும் கலாய்ச்சா அவங்களுக்கு போர் அடிக்கும்னுதான் இதில் அரசியலையும் கலாய்ச்சோம். 

அப்பறம் இந்தப் படத்தில் நான் சில பேரை பெர்ஷனல் அட்டாக் பன்ணியிருக்கிறதா சொல்றாங்க. அப்படி யாரையும் நான் பெர்ஷனல் அட்டாக் பண்ணலை. ரியல் லைஃப்ல அந்த செலிபிரிட்டி பண்ணுனதைதான் நான் படத்துல வச்சிருக்கேன். அதை தப்புனு சொன்னா, அவங்கதான் அப்படி பேசாம இருந்திருக்கணும்.

அரசியல்வாதிகளை ஒரு தலை பட்சமா நான் கலாய்ச்சிருக்கிறதா சொல்றாங்க. இந்தப் படத்தில் எல்லாரையும் கலாய்க்கிற மாதிரி சீன்கள் வச்சிருந்தேன். முதல் பாதியில் சில காட்சிகளை குறைக்கணும்னு அதெல்லாம் கட் பண்ணியாச்சு. அப்படி அரசியல்வாதிகளை நான் கலாய்க்கிறதுல ஒரு தலை பட்சமா நடந்துக்கிட்டேன்னு சொன்னா அது நான் படத்துல வச்சிருக்கிற அரசியல்னு நினைச்சுக்கோங்க. ரஞ்சித் அவரோட படங்களில் அரசியலை வச்ச மாதிரி; பாலசந்தர் சார் வச்ச மாதிரி, இது நான் வச்ச அரசியல்.’’

‘ரெண்டாவது படம்’ என்ன ஆச்சு..?

ரெண்டாவது படம்

’’ நான் ரெண்டாவது படமா எடுத்த ’ரெண்டாவது படம்’ அடுத்த மாசம் ரிலீஸாகிடும். அதுக்காக பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு. ’இப்படியெல்லாமா நடக்கும்’னு நினைக்கக்கூடிய கதை. அந்தப் படம் இப்போ வந்தாலும், சில காமெடிகளைத் தவிர மத்த எல்லா விஷயமும் ஆடியன்ஸுக்கு புதுசா அண்ட் கனெக்ட் ஆகுற மாதிரிதான் இருக்கும். ’தமிழ்ப்படம் 1 & 2’வோட எந்த சாயலும் அதில் இருக்காது.’’

அடுத்தப்படம்..?

’’இப்போ ரெண்டு படங்களில் கமிட்டாகி இருக்கேன். ஒண்ணு ஆந்தாலஜி ஜானர்ல ரொம்ப சீரியஸான, காமெடியே இல்லாத ஒரு படம். இன்னொன்னு பக்கா கமர்ஷியல் படம். அதில் பெரிய ஹீரோ நடிக்கவும் வாய்ப்பு இருக்கு.’’

முழுப் பேட்டியைக் காண...


டிரெண்டிங் @ விகடன்