வெளியிடப்பட்ட நேரம்: 19:44 (24/07/2018)

கடைசி தொடர்பு:19:44 (24/07/2018)

``சினிமாவுக்கு வந்ததிலிருந்து அஜித் படத்துக்கு மியூசிக் பண்ண ஆசை!" - டி.இமான்

இசையமைப்பாளர் இமான் `சீமராஜா' மற்றும் அஜித் நடிக்கும் `விசுவாசம்' படங்களில் பணிபுரிந்த அனுபவம் குறித்துப் பேசியிருக்கிறார்.

``சினிமாவுக்கு வந்ததிலிருந்து அஜித் படத்துக்கு மியூசிக் பண்ண ஆசை!

``என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது எனக்கே பெரும் ஆச்சர்யமா இருக்கு. சீரியலுக்கு மியூசிக் கம்போஸ் பண்ணிக்கிட்டு இருந்த நான், இன்னைக்கு சினிமாவுல 100 படங்களுக்கு மியூசிக் பண்ணிட்டேன். ரொம்பப் போராடி சினிமாவுல இன்னைக்கு நல்ல நிலைமைக்கு வந்திருக்கேன். அதேசமயம், சினிமாவுல என்னைக்குமே என் ஆரம்பப் புள்ளியை நான் மறந்ததே இல்லை. சீரியல்ல வொர்க் பண்ணும்போது, இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள்கிட்ட திட்டு வாங்குன அனுபவத்தையெல்லாம் அடிக்கடி நினைச்சுப் பார்த்துப்பேன்.'' -  மலரும் நினைவுகளுடன் பேசுகிறார், இசையமைப்பாளர் டி.இமான். 

இமான்

`` `சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியின் வெற்றியாளர் செந்தில், `ரஜினி முருகன்' படத்துல ஏற்கெனவே பாடியிருக்கார்ல...?" 

``செந்தில் நல்ல பாடகர். அவருடைய பாடல்கள் எனக்குப் பிடிக்கும். `சூப்பர் சிங்கர்' ஷூட்டிங் ஸ்பாட்லதான் நானும் அவரும் அறிமுகம் ஆனோம். அதுவரை அவரை நான் பார்த்ததில்லை. செந்தில் நிகழ்ச்சியோட வெற்றியாளரா அறிவிக்கப்படலைனாலும், என் படத்துல அவருக்கு நான் வாய்ப்பு கொடுத்திருப்பேன். `சீமராஜா'வுல பாடச்சொல்லி கேட்கும்போது, `சூப்பர் சிங்கர் ஃபைனல் முடியிறவரை போட்டியாளர்கள் சினிமாவில் பாடக் கூடாது'னு சொல்லிட்டதா, சொன்னார். ஃபைனல் முடிஞ்சதும் அவரைப் பாட வெச்சுட்டேன்."  

டி.இமான்

`` `கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' படத்துக்கு இசையமைக்கிற அனுபவம் எப்படி இருக்கு?"

``இதை அனிமேஷன் படமா எடுக்கிறாங்க. முதல்முறையா ஒரு அனிமேஷன் படத்துல வொர்க் பண்றது, சந்தோஷம். இது ஒரு பெரிய ப்ராஜெக்ட். இந்தப் படத்துக்காக என்னை கமிட் பண்ணது, ஐசரி கணேஷ் சார். அவர் படங்கள்ல நான் வொர்க் பண்ணியிருக்கிறதுனால, என் வொர்க்கிங் ஸ்டைல் அவருக்குத் தெரியும். எம்.ஜி.ஆர் படத்துல நாம வொர்க் பண்ணப் போறதை நினைக்கும்போதே, சந்தோஷமா இருந்தது. ஏன்னா, எங்க அப்பா தீவிர எம்.ஜி.ஆர்., ரசிகர். ஒரு பாட்டும் கம்போஸிங் பண்ணி முடிச்சிருக்கேன். இனிதான் இன்னும் பண்ணணும். எம்.ஜி.ஆர் காலத்துப் பாட்டு மாதிரியும், இந்தக் காலத்துப் பாட்டு மாதிரியும் பாடல்கள் இருக்கணும்னு பிளான் பண்ணியிருக்கேன். இந்தப் படத்தோட பாடல்கள் மூலம் வைரமுத்து சார் வரிகள்ல, டிரெண்டிங் எம்.ஜி.ஆரைப் பார்க்கலாம்!''

`` `கும்கி' முதல் `ரூபாய்' வரை... இயக்குநர் பிரபு சாலமன் படங்களுக்கு நீங்கதான் இசையமைப்பாளர். ஆனா, பிரபு சாலமன் இப்போ இயக்கிக்கிட்டு இருக்கிற படங்களுக்கு உங்க இசை இல்லையே ஏன்?" 

``பெரிய காரணம் எதுவும் இல்லை. ரெண்டு பேரும் அடிக்கடி சந்திச்சுப் பேசுவோம். கொஞ்சம் இடைவெளி கொடுத்து, மறுபடியும் ரெண்டுபேரும் சேர்ந்து வொர்க் பண்ணலாம்னு எங்களுக்கு நாங்களே ஒரு முடிவு எடுத்துக்கிட்டோம். வேறெந்த காரணமும் இல்லை. சினிமாவில் நிறைந்த எதிரிகளும் கிடையாது, நண்பர்களும் கிடையாது இல்லையா... சீக்கிரமே நானும் அவரும் சேர்ந்து வொர்க் பண்ணுவோம்!" 

டி.இமான்

``முதல் முறையா அஜித் படத்துக்கு இசையமைக்கிற அனுபவம்?"

``சினிமாவுக்கு வந்த நாளிலிருந்தே அஜித் படத்துக்கு வொர்க் பண்ணணும்னு எனக்கு ஆசை. அஜித் சாரோட சில படங்களுக்கு வொர்க் பண்ற வாய்ப்பு வந்து, சில காரணங்களால முடியாமப் போச்சு. `விசுவாசம்' படத்துக்கு மியூசிக் பண்ண சிவா சார் என்கிட்ட கேட்டப்போ, இந்த முறையும் மிஸ் ஆயிடுமோனு பயந்தேன். அப்படி எதுவும் நடக்கலை. அஜித்துக்கே உரிய மாஸ் பாடல்களை `விசுவாசம்' படத்துல கேட்கப்போறீங்க... இதுவரை இரண்டு பாடல்களை கம்போஸ் பண்ணி முடிச்சிருக்கேன்." என்கிறார், இமான். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்