வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (20/08/2018)

கடைசி தொடர்பு:21:55 (20/08/2018)

கருணாநிதியாக இவர்தான் நடிக்கணுமாம்... Guess Who..? #VikatanSurveyResult

கருணாநிதியாக இவர்தான் நடிக்கணுமாம்... Guess Who..? #VikatanSurveyResult

லையாளம், தெலுங்கு, இந்தி என இந்திய சினிமாவின் ஏனைய மொழிகளில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் பயோபிக் தயாராகி வருகின்றன. நிறைய பிரபலங்கள் உச்சம் தொட்டபோதும், பயோபிக் எடுப்பதற்கு இன்ஸ்பயரிங்கான கதைகொண்ட சில நபர்களின் வாழ்க்கை மட்டுமே படமாக உருவாகும். அப்படி ஓர் இன்ஸ்பயரிங்கான கதைக்குச் சொந்தக்காரர்தான் கருணாநிதி. 

திருக்குவளையில் பிறந்து ஐந்து முறை முதல்வர், சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் தொடர்ந்து 13 முறை வெற்றி, இலக்கியச் சிற்பி, சினிமா ஆளுமை என 50 வருடம் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகயிருந்த இவரின் கதையைப் படமாக எடுத்தால், அந்தப் படத்தில் கருணாநிதி கேரக்டரில் எந்த நடிகர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என விகடன் இணையதளத்தில் சர்வே ஒன்றை நடத்தினோம். அதன் முடிவு இதோ...

கருணாநிதி

மோகன் லால்:

கருணாநிதி பயோபிக்கில் நடிப்பதற்கான நடிகர்களின் தேர்வு தமிழ் சினிமாவில் மட்டும் இருக்கக் கூடாது என மற்ற மொழி நாயகர்களைப் பற்றி யோசிக்கும்போது, மோகன்லால்தான் முதல் ஆளாக மனதில் தோன்றினார். இருவர் படத்தில் இவர் எம்.ஜி.ஆர் ரோலில் நடித்திருந்தாலும், கருணாநிதியின் உடல் தோற்றத்தோடு சற்று பொருந்திப்போவார் மோகன் லால். இவர் கருணாநிதி பயோபிக்கில் நடிக்கச் சரியானவர் என 9.6 சதவிகித வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.

குரு சோமசுந்தரம்:

கோலிவுட்டின் நவாசுதீன் சித்திக் எனப் பரவலாக அழைக்கப்படுபவர் குரு சோமசுந்தரம். நடிப்பின் மேல் தீராத காதல் கொண்டிருக்கும் குரு, கருணாநிதியின் இள வயது தோற்றத்துக்கு சரியாக இருப்பார் என இந்த சர்வேயில் இணைத்திருந்தோம். இவருக்கு 13.9 சதவிகித வாசகர்கள் வாக்களித்துள்ளனர்.

விக்ரம்:

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு நடிக்கக்கூடியவர், விக்ரம். இவர் கருணாநிதியின் பயோபிக்கில் நடிக்க தேர்வானால், எப்படியும் கருணாநிதியாகவே மாறி நம் கண்முன் நிற்பார். அவரின் கடின உழைப்பு இந்தப் படத்துக்கு தேவை என்பதாலும், இவர்தான் இந்த ரோலுக்கு சரியாக இருப்பார் எனவும் 15.8 சதவிகித வாசகர்கள் இவருக்கு வாக்களித்துள்ளனர். விக்ரமும் கருணாநிதிக்கு நெருக்கம் என்பதால், அவர் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது.

பிரகாஷ் ராஜ்:

இருவர் படம் மூலம் பிரகாஷ் ராஜை கருணாநிதியாகப் பார்த்தவர்கள், இன்னும் அந்தக் கதாபாத்திரத்தை மறக்கவில்லை. அதனால்தான் 28.2 சதவிகித வாக்குகளைக் கொடுத்து இரண்டாவது இடத்தில் வைத்திருக்கிறார்கள். இவர் ஏற்கெனவே கருணாநிதியாக நடித்திருக்கிறார் என்பதால் ஆடியன்ஸ் ஈசியாக கனெக்ட் செய்துகொள்வார்கள். அவருக்கும் இருவர் படத்தின் தொடர்ச்சியாக இது இருக்கும் என்பதால் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கலாம்.

கமல்:

கமல்

கருணாநிதியாக நடிக்க இவரே சரியாக இருப்பார் என 32.5 சதவிகித வாசகர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த சர்வேயில் வெற்றி பெற்றிருக்கிறார் கமல். சிறு வயதிலிருந்தே படங்களில் நடிக்கும் கமல், சினிமா சார்ந்தும் அரசியல் சார்ந்தும் கருணாநிதியிடன் அதிகம் பழகியிருப்பார். அந்தப் பழக்கம் இந்தப் பயோபிக்கு அதிகம் பயன்படும். தற்போது சினிமாவிலிருந்து அரசியலுக்குள் நுழைந்திருக்கும் கமலுக்கு, இந்தப் பயோபிக் அவரது அரசியல் கரியருக்கும் உதவலாம். இந்தப் படத்தை அவரே கதை, திரைக்கதை எழுதி இயக்கியினால் கூடுதல் மகிழ்ச்சி.