`90 எம்.எல், '96, 7, 8'... ரிலீஸுக்குக் காத்திருக்கும் நம்பர் படங்கள்

இப்போது தமிழ் சினிமாவில் 'எண்களை'ப் பெயர்களாகக் கொண்ட படங்கள் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.  

`90 எம்.எல், '96, 7, 8'... ரிலீஸுக்குக் காத்திருக்கும் நம்பர் படங்கள்

மிழ் சினிமாவில் 'நம்பர்'களை மையமாகக் கொண்ட படங்கள் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. அந்தப் படங்களின் பட்டியல் இதோ! 

`96

96

விஜய் சேதுபதி - த்ரிஷா ஜோடியாக நடிக்கும் முதல் படம் இது. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். நடிகர் ஜனகராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடித்திருக்கிறார். காதலை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தின், 'காதலே காதலே' பாடலுக்கு இணையத்தில் மாஸ் ரெஸ்பான்ஸ். வருடத்தைக் குறிக்கும் விதமாக '96 எனப் பெயரிடப்பட்டுள்ள இது, செப்டம்பர் மாதம் வெளியாகவிருக்கிறது.  

90 எம்.எல்

90 எம்.எல்

'குளிர் 100' படத்தை இயக்கிய அனிதா உதீப் இப்படத்தை இயக்கியிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியா கமிட்டான முதல் படம் இது. ஐந்து பெண்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்துக்கு சிம்பு இசையமைத்துள்ளார். ஓவியா இதில் ஆக்‌ஷன் காட்சிகளிலும் ரொமான்ஸ் காட்சியிலும் நடித்திருக்கிறாராம். இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கும் இப்படம் இந்த வருட இறுதியில் வெளியாகும் எனத் தெரிகிறது. 

2.0

2.0

'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகம்தான் '2.0' என்ற செய்திகள் வந்தபோது, அதற்கும் இதற்கும் நேரடித் தொடர்பில்லை என அறிவித்தது '2.0' படக்குழு. 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் இப்படம், ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், படத்தின் கிராஃபிக்ஸ் மற்றும் வி.எஃப்.எக்ஸ் பணிகள் முழுமை பெறாத காரணத்தால், நவம்பர் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.  

100

100

ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த 'டார்லிங்', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படங்களை இயக்கிய சாம் அண்டன் இயக்கி வரும் படம், '100'. இதில், போலீஸ் அதிகாரியாக அதர்வாவும் அவருக்கு ஜோடியாக ஹன்சிகாவும் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்துக்கு, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். யோகி பாபு, 'எரும சாணி' ஹரிஜா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். 

100% காதல் 
 

100% காதல்

நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற '100% லவ்' படத்தின் தமிழ் வெர்ஷன்தான், '100% காதல்'. ஜி.வி. பிரகாஷ் குமார், 'அர்ஜுன் ரெட்டி' ஷாலினி பாண்டே இப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். காதலர்களுக்கு இடையே இருக்கிற ஈகோவைப் பற்றிய படமாக உருவாகியிருக்கும் இதை, சந்திரமெளலி இயக்கியிருக்கிறார். 

4G 
 

4G

அறிமுக இயக்குநர் வெங்கட் பாக்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், காயத்ரி நடித்திருக்கும் படம் '4G'. ஃபேன்டஸி காமெடிப் படமான இதில், சதீஷ் முக்கியக் கேரக்டரில் நடித்திருக்கிறார்.  


 

8 நம்பர் படங்கள்

பரத் ஹீரோவாகவும், பூஜா ஜாவேரி ஹீரோயினாகவும் நடித்திருக்கும் படம் '8'. இதில், சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹாரர் படமான இதை, அறிமுக இயக்குநர் விஜய் கவிராஜ் இயக்கியிருக்கிறார். 

7

7

ரகுமான், ரெஜினா, நந்திதா, அனிஷா அம்ப்ரோஸ் ஆகியோர் நடித்திருக்கும் படம் '7'. ‘சுட்டகதை', 'நாய்கள் ஜாக்கிரதை’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நிஷார் ஷஃபி, இப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகம் ஆகிறார். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு பென்மேட்சா ரமேஷ் வர்மா கதை எழுதியிருக்கிறார். 

இதில் எந்தப் படத்துக்கு நீங்கள் வெயிட்டிங்? கமென்ட் பாக்ஸில் பதியலாமே...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!