தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்! #Bollywood | Welcome to South Indian Cinema Bollywood Stars.!

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (12/09/2018)

கடைசி தொடர்பு:15:31 (12/09/2018)

தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்! #Bollywood

பாலிவுட் நடிகர்கள் பலர் கோலிவுட்டில் அறிமுகமாகி அசத்திக்கொண்டிருக்கிறார்கள்.

தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்! #Bollywood

வட இந்திய சினிமா, தென்னிந்திய சினிமா என்பது மாறி, தற்போது `இந்திய சினிமா' என்ற மாபெரும் கூட்டணி உருவாகிவருகிறது. அதாவது, வட இந்திய நடிகர்கள் தென்னிந்தியப் படங்களிலும், தென்னிந்திய நடிகர்கள் இந்திப் படங்களிலும் நடிப்பது சகஜமாகிவிட்டது. அதற்கு, துல்கர் சல்மான் நடித்த `கர்வான்' எனும் இந்திப் படமும், தமிழில் அனுராக் காஷ்யப் நடித்த `இமைக்கா நொடிகள்' திரைப்படமும் சிறந்த உதாரணங்களாக இருக்க, தற்போது பல பாலிவுட் நட்சத்திரங்கள் தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுத்திருக்கிறார்கள். அவர்களின் பட்டியல் இதோ! 

நஸ்ருதீன் ஷா :

Bollywood


2000-ம் ஆண்டு வெளிவந்த `ஹே ராம்' படத்தில் மகாத்மா காந்தியாக நமக்கு அறிமுகமானவர், நஸ்ருதீன் ஷா. இப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளிவந்தது. தற்போது அறிமுக இயக்குநர் பிரகாஷ் தேவராஜ் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இதில் இவருக்கு வில்லன் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சோனம் கபூர் : 

Bollywood


சோனம் கபூர் மற்றும் துல்கர் சல்மான் நடிக்கும் `தி சோயா ஃபேக்டர்' எனும் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் வெளிவரவிருக்கிறது. இப்படம் `சோயா' எனும் ராஜ்புத் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், இந்திய கிரிக்கெட் அணியைச் சந்திக்கிறார். அதன் பின் அவர் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. 2008-ம் ஆண்டு அகுஜா சௌஹான் எனும் எழுத்தாளர் `தி சோயா ஃபேக்டர்' கதையைப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். இப்படம் தென்னிந்திய ரசிகர்களையும் முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது என்பதால், சோனம் கபூருக்கு ஜோடியாக துல்கர் சல்மானைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 

விவேக் ஓபராய் : 

Vivek Oberoi

' தட்ஸ் மை ஃபிரெண்டு ஃபார் யூ ' விவேகம் படம் முழுக்க இவருக்கு இது தான் வசனம். ஆம், விவேக் ஓபராய் மீண்டும் தென்னிந்திய படங்களில் நடிக்கயிருக்கிறார். பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகும் `லூசிஃபர்' எனும் படத்தில் மலையாள ரசிகர்களுக்கு அறிமுகமாகவிருக்கிறார், விவேக் ஓபராய். இப்படத்தில் மஞ்சு வாரியார் மற்றும் டொவினோ தாமஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆண்டனி பெரம்பவூர் தயாரிக்கும் இப்படம், க்ரைம் திரில்லராக உருவாகவிருக்கிறது. இதில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

அமிதாப் பச்சன் :

Amitab batchan

`உயர்ந்த மனிதன்' என்பதுதான் அமிதாப் பச்சன் தமிழில் அறிமுகமாகும் படத்தின் பெயர். இதில், எஸ்.ஜே.சூர்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். `கள்வனின் காதலி', `மச்சக்காரன்' படங்களின் இயக்குநர் தமிழ்வாணன் இப்படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவிருக்கிறது, இப்படம். ``இப்படத்தின் கதை இரண்டு வருட உழைப்பு. நானும் தமிழ்வாணனும் சேர்ந்துதான் மும்பைக்குச் சென்று அமிதாப் சாரிடம் கதையைச் சொன்னோம். அவர் ஒப்புக்கொண்டவுடன் ரஜினி சார் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து கூறினார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வரும்" என்று எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.  

போமன் இராணி : 

Boman Irani

`நண்பன்' படத்தில் வைரஸ், `வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் வரும் டீன் ஆகிய கதாபாத்திரங்களுக்கு அஸ்திவாரமே போமன் இராணி கேரக்டர்தான். இவர் பல படங்களில் வில்லனாக நடித்து அப்ளாஸ் அள்ளியிருந்தாலும், சில படங்களில் அப்பாவியாகவும் நடித்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார். இவர் தற்போது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மற்றும் சாயிஷா நடிக்கும் படத்தில் வில்லனாக கமிட் ஆகியிருக்கிறார். இதில், மோகன்லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி மற்றும் பலரும் நடித்துக்கொண்டிருக்கின்றனர்.  

நவாஸுதின் சித்திக் : 

Nawazuddin Siddiqui - பாலிவுட் நடிகர்

அனுராக் காஷ்யப்புக்கு நெருக்கமானவர்களில் முக்கியமானவர், நவாஸுதின் சித்திக். `சர்ஃப்ரோஷ்' எனும் படத்தில் தீவிரவாதி கதாபாத்திரத்தில் நடித்து பாலிவுட்டில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டார். பின்பு `கார்பன்', `ஜீனியஸ்', `பதல்பூர்' ஆகிய படங்களில் தன்னை ஒரு சிறந்த கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக அடையாளப்படுத்திக்கொண்ட இவர், ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகிவரும் `பேட்ட' படத்தில் நடிக்கிறார். 

இன்னும் பல பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய சினிமாவை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள். வார்ம் வெல்கம்!


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close