``அப்போலோ காட்சிகள் படத்துல இருக்குமா?" - `தி அயர்ன் லேடி' இயக்குநரின் ஷாக் பதில் | Director Priyadharshini says about their movie 'The Iron lady'!

வெளியிடப்பட்ட நேரம்: 18:07 (02/10/2018)

கடைசி தொடர்பு:15:48 (04/10/2018)

``அப்போலோ காட்சிகள் படத்துல இருக்குமா?" - `தி அயர்ன் லேடி' இயக்குநரின் ஷாக் பதில்

ஜெயலலிதா வாழ்க்கை வராலாற்றுப் படமான `தி அயர்ன் லேடி' படத்தைப் பற்றி இயக்குநர் ப்ரியதர்ஷினி பேட்டி.

``அப்போலோ காட்சிகள் படத்துல இருக்குமா?

``என்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூர். 12-வது படிக்கிற வரைக்கும் கவர்மென்ட் ஸ்கூல்லதான் படிச்சேன். காலேஜ் படிச்சிட்டிருந்த சமயத்துல, இந்தியா போஸ்ட்ல வேலை கிடைச்சது. சில வருடங்கள் அங்க வொர்க் பண்ணினேன். ஆனா, சினிமா மேல எனக்கொரு காதல் இருந்தது. அதனால, பாத்துட்டு இருந்த அரசாங்க வேலையை விட்டுட்டு சினிமாவுக்கு வந்துட்டேன்'' என்று சினிமா மீது தனக்குள் இருந்த தீராக்காதாலோடு பேசத் தொடங்கினார், `தி அயர்ன் லேடி' (ஜெயலலிதா பயோபிக்) படத்தின் இயக்குநர் ப்ரியதர்ஷினி. 

பிரியதர்ஷினி

``மிஷ்கின் சார்கிட்ட சில வருடங்கள் உதவி இயக்குநரா வொர்க் பண்ணினேன். அவர்கிட்ட சினிமா பற்றிய நுட்பமான விஷயங்களை கத்துக்கிட்டேன். நிறைய உலக சினிமா, புத்தங்கள் பற்றின அசைன்மென்ட் கொடுப்பார். அதையெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு தெரிஞ்சுகிட்டு, அதை உண்மைத் தன்மையோட சமிட் பண்ணுவேன். நான் சேகரித்த செய்திகளை வைத்து புத்தங்களே போடலாம். இப்படிப்பட்ட சூழல்ல தனியா படம் எடுக்கலாம்னு நெனச்சு, `சக்தி' படத்தை இயக்கினேன். இதுதான் என்னுடைய முதல் படம். இது பெண்களை மையப்படுத்தின கதை. இன்னும் படத்தின் வேலைகள் முடியலை. படத்துக்கான தயாரிப்பாளரும் நான்தான்.  சில காரணங்களால ஷூட்டிங் தள்ளி போயிட்டே இருக்கு. கூடிய சீக்கிரம் எல்லா வேலைகளும் முடிஞ்சிடும்.

இன்னொரு பக்கம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமா எடுக்கலாம்னு ஒரு யோசனையும் வந்துச்சு. இதுக்கு முக்கியக் காரணம், ஜெயலலிதா அம்மா இறந்தப்போ அவங்களுடைய இறுதிச் சடங்கைப் பார்க்க ராஜாஜி ஹாலுக்குப் போனதுதான். அவங்களை அப்படிப் பார்த்தது எனக்குள்ள பெரிய தாக்கத்தை ஏற்படுத்துச்சு. ஒரு வாரமா அது மட்டும்தான் என் மனசுல ஓடிகிட்டே இருந்ததுச்சு. அப்போதான் அவங்களுடைய வாழ்க்கையை படமா எடுக்கலாம்னு முடிவு பண்ணினேன். கதையையும் அந்த சமயத்துலதான் எழுத ஆரம்பிச்சேன். இந்தப் படத்துகான் விதை ராஜாஜி ஹால்ல எழுந்ததுதான்.  

`அம்மா', `புரட்சி தலைவி', `இதய தெய்ம்'னு இப்படி அவங்களுக்கு நிறைய பெயர்கள் இருக்கு. படத்துக்கு என்ன பெயர் வைக்கலாம்னு யோசிச்சப்போ, `தி அயர்ன் லேடி'ங்கிற பெயர்தான் ஆப்ட்டா இருக்கும்னு தோணுச்சு. யாரை நடிக்க வைக்கலாம்னு யோசிகிட்டே நிறைய படங்கள் பார்க்க ஆரம்பிச்சேன். அவங்களை பிரபதிபலிக்கிற உடலமைப்பும், மனநிலையும் யாருக்கு இருக்கும்னு யோசிச்சு, 5 ஹீரோயின்களை தேர்ந்தெடுத்தேன். அதுல நித்யா மேனன்தான் கரெக்ட்டா இருப்பாங்கனு அவங்களை முடிவு பண்ணினேன். நிறைய விஷயங்கள், செய்திகள்லாம் எடுத்துட்டுப்போய், கிட்டத்தட்ட 7மணி நேரம் அவங்ககிட்ட கதையைச் சொன்னேன். கடைசியில நடிக்க ஓகே சொல்லிட்டாங்க. இதுதான் `தி அயர்ன் லேடி' கதை உருவான கதை. 

நித்யா மேனன் - தி அயர்ன் லேடி

``படத்துல வரலட்சுமி இருக்கிறதா செய்திகள் வந்ததே?"

``சசிகலா ரோல்ல வரலட்சுமியை நடிக்கக் கேட்டது உண்மைதான். ஆனா அவங்க இன்னும் இதுக்கு சம்மதம் தெரிவிக்கலை. பேச்சு வார்த்தைகள் போயிட்டிருக்கு. அவங்க நடிச்சா நல்லாயிருக்கும். ஒருவேளை அவங்க இல்லேன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த ரோலுக்கு சரியா இருப்பாங்கனு தோணுது. இன்னும் இந்தக் கதாபாத்திரத்துக்கு யாருங்கிறதை முடிவு பண்ணலை."

``படத்தில் உண்மைத் தன்மையை எவ்வளவு தூரம் எதிர்பார்க்கலாம்?"

``ஒரு விஷயத்தை அப்படியே சொல்ல நினைக்க இது டாக்குமென்டரி படம் இல்லை. இது ஒரு பீரியட் படம். ஒரு படத்துக்கு தேவையான எல்லா ஃபார்முலாவும் இதுல இருக்கும். அதனால, உண்மைத் தன்மை எவ்வளவு தூரம் இருக்கும்னு சொல்ல முடியாது."

``அரசியல் சார்ந்த தலைவர்களை படத்தில் எதிர்பார்க்கலமா?"

``ஒரு அரசியல் தலைவரோட வரலாற்றைப் படமா எடுக்கும்போது, அவங்க காலகட்டத்துல இருந்த தலைவர்களைத் தாண்டி படத்தைச் சொல்ல முடியாது. அவங்களே ஒரு முறை சொல்லியிருக்காங்க, `என்னுடைய வாழ்க்கை தனித் தீவு கிடையாது'னு. திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர்னு இப்படி எல்லோருடைய வாழ்கையிலும் அவங்க இருந்திருக்காங்க, வாழ்ந்திருக்காங்க. அதனால, அவங்க எல்லாரைப் பத்தியும் கண்டிப்பா படத்துல இருக்கும். வெவ்வேறு காலகட்டங்கள்ல படம் நகரும்போது ஒவ்வொரு தலைவர்களுமே நிச்சயம் இடம்பெறுவாங்க. ஒரு முக்கியமான கதாபாத்திரத்துல எஸ்.ஜே.சூர்யாவை நினைச்சு வெச்சிருக்கேன். ஆனா, இது சம்பந்தமா அவர்கிட்ட இன்னும் பேசலை."

ஜெயலலிதா

``படம் எந்தக் காலத்துல இருந்து பயணிக்கும்?"

``படத்தை 1960-ல் இருந்து ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அதுக்கான முழு வேலைகள் போயிட்டிருக்கு. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகள்ல படத்தை ரிலீஸ் செய்யலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். அதுக்காக நிறைய உழைப்பும் தேவைப்படுது. படத்துடைய ஷூட்டிங் ஜெயலலிதாவுடைய பிறந்த நாள் அன்னைக்கு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்."

"இந்தப் படத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, அரசியல் ரீதியா யாராவது உங்ககிட்ட பேசினாங்களா?"

"யாரும் பேசலை. செய்திதுறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை மட்டும் சந்திச்சு சில டாக்குமென்ஸ் விஷயமா பேசினேன். மற்றபடி வேற யாரும் பேசலை."

``ஜெயலலிதாவின் இறப்பையும் படத்தில் சொல்லுவீங்களா?"

``இதைப் பற்றி இன்னும் அதிகாரபூர்வமா செய்திகள் வரலை. நீதிமன்றத்துலயும் வழக்கு போயிட்டிருக்கு. சட்டப்படி அதை நான் சொல்லவும் கூடாது. அப்போலோ சம்பந்தப்பட்ட எந்தக் காட்சிகளும் படத்துல இருக்காது." என்று பேட்டியை முடித்துக்கொண்டார், இயக்குநர் ப்ரியதர்ஷினி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்