```என் வீல்சேர் டயரை நக்கிட்டு கிடங்க' வசனம் ஏன் வெச்சேன்?'' - `அக்னி தேவ்' ஜான்பால் ராஜன் | Director JPR talks about his 'agni dev' movie

வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (27/11/2018)

கடைசி தொடர்பு:17:26 (27/11/2018)

```என் வீல்சேர் டயரை நக்கிட்டு கிடங்க' வசனம் ஏன் வெச்சேன்?'' - `அக்னி தேவ்' ஜான்பால் ராஜன்

`அக்னி தேவ்' படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனம் குறித்தும் அந்தப் படம் குறித்தும் பேசியிருக்கிறார் இயக்குநர் ஜான்பால் ராஜன்.

```என் வீல்சேர் டயரை நக்கிட்டு கிடங்க' வசனம் ஏன் வெச்சேன்?'' - `அக்னி தேவ்' ஜான்பால் ராஜன்

'சென்னையில் ஒருநாள் 2' படத்தின் இயக்குநர் ஜான்பால் ராஜன், தற்போது சாம் சூர்யா என்பவருடன் இணைந்து, 'அக்னி தேவ்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், மதுபாலா மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. படத்தின் அரசியல் வசனங்கள் அரசியல்வாதிகளை நேரடியாகவே குறிப்பிடும் விதத்தில் இருக்கவே, படம் குறித்து இயக்குநர் ஜான்பால் ராஜனிடம் பேசினேன். 

அக்னி தேவ்

```சென்னையில் ஒருநாள் 2' படத்தின்போது நானும் எழுத்தாளர் ராஜேஷ் குமாரும் இணைந்து `அக்னி தேவ்' படத்தின் ஒன்லைன் கதையை உருவாக்கி வெச்சிருந்தோம். ராஜேஷ் குமார் எழுதிய ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய ஒன்லைன் அது. இப்படத்தை, நானும் குறும்பட இயக்குநர் சாம் சூர்யாவும் சேர்ந்து இயக்கியிருக்கோம். இவர் என் உறவினர். `நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருதுகள் வென்றவர். 'சென்னையில் ஒருநாள் 2' படத்தையே நானும் இவரும் சேர்ந்துதான் இயக்குவதாக இருந்தது. அது முடியாம போச்சு. இப்போ, 'அக்னி தேவ்' மூலமா அது சாத்தியமாகியிருக்கு. படத்துல, குரு என்ற கேரக்டரில் பாபி சிம்ஹா நடிச்சிருக்கார். அவரைத் தவிர வேற யாரையும் இந்தக் கேரக்டருக்காக நாங்க அப்ரோச் பண்ணலை.

படத்துல வர்ற சகுந்தலா தேவி கேரக்டரை மதுபாலா பண்ணா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. ஏன்னா, தமிழில் இதுவரைக்கும் அவங்க நெகட்டிவ் கேரக்டர் பண்ணலை. தவிர, நான் அவங்களை அப்ரோச் பண்றப்போ, அவங்களும் ஒரு நல்ல நெகட்டிவ் கேரக்டர் கிடைச்சா, நடிக்கலாம்னுதான் இருந்தாங்க. 'அக்னி தேவ்' கதையைச் சொன்னதும், உடனே ஓகே சொல்லிட்டாங்க. படத்துல மதுபாலா மூணு விதமான சாயலை வெளிப்படுத்தியிருக்காங்க. அவங்கதான், இந்தக் கதைக்கு முக்கியமான கேரக்டர்னுகூட சொல்லலாம். இந்தப் படத்துக்காக அவங்களுக்கு விருது கிடைக்கும்ங்கிற நம்பிக்கையில உழைச்சிருக்காங்க. ஒரு காட்சியை நான்கைந்து விதமா நடிச்சுக்காட்டுவாங்க. படத்துல, சகுந்தலா தேவி கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருந்தாலும், ஹீரோவா இந்தப் படத்துல சூப்பரா நடிச்சிருக்கார் பாபி சிம்ஹா.  

மதுபாலா

``சகுந்தலா தேவி கேரக்டர் ஒரு முக்கியமான அரசியல்வாதியை நினைவுபடுத்துதே..." 

"ட்ரெய்லரைப் பார்த்துட்டு பலரும், சகுந்தலா தேவி கேரக்டர் ஜெயலலிதா அம்மாவை ஞாபகப்படுத்துறதா சொல்றாங்க. இது ரொம்பத் தவறான கண்ணோட்டம். ஏன்னா, ஜெயலலிதா என் இன்ஸ்பிரேஷன். படத்துலகூட சகுந்தலா தேவி கேரக்டர் வர்ற காட்சிகளுக்குப் பின்னணியில ஜெயலலிதா, இந்திரா காந்தி படங்களைப் பயன்படுத்திருக்கேன்." 

``டைட்டில் மூலமா என்ன சொல்ல வர்றீங்க?" 

``அக்னி தேவ்னா, 'நெருப்புக்கு இறைவன்'னு அர்த்தம். படத்துல வர்ற எல்லாக் கேரக்டருக்கும் நெருப்போட சம்பந்தம் இருக்கும். காமெடி கேரக்டர்ல வர்ற சதீஷுக்கு உதயா, ரம்யா நம்பீசனுக்கு தீபா, பாபி சிம்ஹாவுக்கு குரு... இப்படி 'அக்னி'யை சம்பந்தப்படுத்திதான் பெயரும் வெச்சிருக்கேன்."  

``படம் பேசவிருக்கும் அரசியல் என்ன?"

``ஆணவக் கொலையை மையமாகக் கொண்ட படம் இது. அதைத் தேவையான அளவுக்குச் சொல்லியிருக்கோம். தவிர, அவையாவும் உண்மைகள்தான். இப்போ நடக்கிற சமூக அவலங்களும் படத்துல இருக்கும். எந்த அரசியல் கட்சியையும் நான் குறிப்பிட்டுப் பேசலை. 5 வருடம் ஆட்சியில இருக்கிறவங்க மக்களுக்குப் பண்றது என்ன, அவங்க பண்ற விஷயங்கள் மக்களை எப்படிப் பாதிக்குதுனு சொல்லியிருக்கோம். முழுப் படத்தையும் கோயம்புத்தூர்ல எடுத்து முடிச்சிருக்கோம்."

``ட்ரெய்லரில் இருக்கிற சில வசனங்கள் சில அரசியல்வாதிகளைத் தாக்குற மாதிரி இருக்கே?" 

``படத்துல மதுபாலா மேடம் மாற்றுத் திறனாளியா வர்றாங்க. அதனால, `என் வீல்சேர் டயரை நக்கிட்டு கிடக்கிறதா இருந்தா கிடங்க'னு வசனம் வெச்சிருக்கேன். இது யாரையும் புண்படுத்துறதுக்காக அல்ல!’’  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்