Published:Updated:

"அந்த நிமிஷம், தனுஷ் கவுண்டமணியாவே மாறிட்டார்!" - காளி வெங்கட்

பிர்தோஸ் . அ

`மாரி 2' படத்தின் டிரெயிலர் இன்று வெளியானது. இதைத் தொடர்ந்து படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த காளி வெங்கட்டிடம் பேசினேன்.

"அந்த நிமிஷம், தனுஷ் கவுண்டமணியாவே மாறிட்டார்!" - காளி வெங்கட்
"அந்த நிமிஷம், தனுஷ் கவுண்டமணியாவே மாறிட்டார்!" - காளி வெங்கட்

னுஷ் நடிப்பில் விரைவில் வெளிவரப்போகும் திரைப்படம், `மாரி 2'. அராத்து ஆனந்தியாக சாய் பல்லவி நடித்திருக்கும் இப்படத்தின் சிங்கிள் டிராக், சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. கான்ஸ்டபிலாக `மாரி' படத்தில் நடித்த காளி வெங்கட், `மாரி 2' படத்தில் ஆய்வாளராக ப்ரொமோஷன் ஆகியிருக்கிறார். படத்தைப் பற்றி காளி வெங்கட்டிடம் பேசினேன்.  

"அந்த நிமிஷம், தனுஷ் கவுண்டமணியாவே மாறிட்டார்!" - காளி வெங்கட்

`` `மாரி' படத்தை ஒப்பிடும்போது என்னுடைய ரோல் இதுல கொஞ்சம் கம்மிதான். முதல் பாகத்தில் படத்துடைய கதையையே நான் சொல்ற மாதிரிதான் இருக்கும். இதுலயும் அதே ஆறுமுகம் கதாபாத்திரம். படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துக்கு அப்புறம்தான் வருவேன். ரெண்டு படத்துக்கும் நான் பார்க்கிற வித்தியாசம் ரெண்டுதான். ஒண்ணு, அதுல புறா இருக்கும், இதுல புறா இருக்காது. ரெண்டு, அந்தப் படத்துல இருந்த மாஸைவிட இதுல அதிகமா இருக்கும். தியேட்டர்ல கைதட்டலும், விசில் சத்தமும் தெறிக்கும். இந்தப் படத்துக்காக என்னை நான் மாத்திக்கிட்டது ஒரே ஒரு விஷயத்துலதான். இன்ஸ்பெக்டருக்குத் தகுந்த மாதிரி மீசையைக் கொஞ்சம் ட்ரிம் பண்ணியிருக்கேன், அவ்வளவுதான்" என்று சொல்லி சிரித்த காளி வெங்கட், ``ஆனா, ஒரு நல்ல காவல் துறை அதிகாரியா என்னைப் பார்க்கலாம்" எனச் சொல்லி பேச்சைத் தொடர்ந்தார்.  

``அதே மாதிரி படத்துல எனக்கு வரலட்சுமி மேம்கூட நிறைய போர்ஷன் இருக்கு. அவங்ககூட நடிக்கிறது ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. அவங்க பேசுற வசனங்களை எல்லாம் ரொம்ப கவனமா உத்துக் கேட்கணும். ஏன்னா, புயல் வேகத்துல வசனத்தைப் பேசிட்டுப் போயிடுவாங்க. நமக்கு எதுவுமே புரியாது. அவங்க எங்க டயலாக்கை முடிக்கிறாங்கன்னு அவங்க வாயவே பார்த்துட்டு இருப்பேன். இதுக்கு முன்னாடி, அவங்ககூட `கன்னி ராசி' படத்துல வொர்க் பண்ணியிருக்கேன். ரொம்ப ஜாலியான ஆள், செட்டையே கலகலப்பா வெச்சுக்குவாங்க.  

"அந்த நிமிஷம், தனுஷ் கவுண்டமணியாவே மாறிட்டார்!" - காளி வெங்கட்

அதே மாதிரி தனுஷ் சார்கூட எனக்கு இது மூணாவது படம். அவர்கூட நடிக்கும்போதுலாம் கண்ணு முழியே வெளிய வந்துரும். ஏன்னா, படத்துல ஒரு காட்சிப்படி நான் ஒண்ணு சொல்லும்போது அவர் அதுக்கு கவுன்டர் அடிக்கணும். அப்போ ஒரு செகண்ட்கூட கேப் விடாம கவுன்டர் அடிச்சு, கவுண்டமணியாவே மாறிட்டார். அந்தளவுக்கு ஹ்யூமர் சென்ஸ் உள்ள ஆள். அவரை என்னுடைய வாழ்க்கையின் இன்ஸ்பிரேஷனாதான் பார்க்கிறேன். சின்னச் சின்ன விஷயங்களைக்கூட ரொம்ப நுணுக்கமாப் பண்ணுவார். ஒரு காட்சியுடைய ஹைப்பை கூட்டிக் கொடுக்கிறதே அவருடைய நடிப்புதான். இந்த மாதிரி சினிமா விஷயங்களை அவர்கிட்ட இருந்து கத்துக்குறேன். அவருடைய இயக்கத்துல நடிக்கணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை இருக்கு. கதைக்குத் தேவைப்பட்டா தனுஷ் சார் கண்டிப்பா என்னைக் கூப்பிடுவார். அவர்கூட நடிச்சதுல என்னுடைய ஃபேவரைட் படம் `கொடி'தான். எல்லோரையும் மாதிரி `கொடி 2' வரணும்னு எனக்கும் ஆசையா இருக்கு. அதுக்கும் வாய்ப்பு இருக்குனு நினைக்கிறேன். இன்னும் கன்ஃபார்மா தெரியலை. இருந்தாலும் இயக்குநர் செந்தில் - தனுஷ் காம்போ மீண்டும் நிகழும். 

"அந்த நிமிஷம், தனுஷ் கவுண்டமணியாவே மாறிட்டார்!" - காளி வெங்கட்

அதே மாதிரி `ராட்சசன்' ராம்குமார், தனுஷை வைத்து படம் எடுக்கிறார். அவருடைய எல்லாப் படங்களிலும் நானும், முனீஸ்காந்தும் இருப்போம்னு சொல்லியிருக்கார். அந்த வகையில தனுஷ்கூட மறுபடியும் நடிச்சா நல்லாயிருக்கும். ஸ்க்ரிப்ட் வேலைகள் போயிட்டிருக்கு. நான் நடிக்கிற படங்கள்ல முனீஸ்காந்த் இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன். `முண்டாசுப்பட்டி' படத்துல வந்த மாதிரி பெரிய காம்பினேஷன் காட்சிகளுக்காகக் காத்துருக்கேன்னு கூட சொல்லலாம்."

``வேற யார் கூட நடிக்க ஆசை?" 

``சினிமாவைப் பொறுத்தவரைக்கும் எல்லாருக்கும் அஜித் சார்கூட நடிக்கணும்னு ஆசை இருக்கும். `விஸ்வாசம்' படத்துல நடிக்கிறதுக்காக நிறைய முயற்சி பண்ணினேன். ஆனா, நடக்கமாப் போயிருச்சு. ஆனா, கண்டிப்பா அடுத்து அஜித் சார் படத்துல நான் நடிப்பேன்'' என நம்பிக்கையோடு பேட்டியை முடித்தார்.

பிர்தோஸ் . அ

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..