`` `சின்னதம்பி'க்கு கம்போஸ் பண்ணும்போது...!’’ - குஷ்பு நெகிழ்ச்சி #IlayaRaja75 | Actress Khushbu shares her memory about ilayaraja

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (30/01/2019)

கடைசி தொடர்பு:10:15 (05/02/2019)

`` `சின்னதம்பி'க்கு கம்போஸ் பண்ணும்போது...!’’ - குஷ்பு நெகிழ்ச்சி #IlayaRaja75

``ராஜா சார் எனக்கும் சரி, என் கணவருக்கும் சரி ரொம்பவே ஸ்பெஷல்’’ என இளையராஜா பற்றி சிலாகிக்க ஆரம்பிக்கிறார் நடிகை குஷ்பூ.

`` `சின்னதம்பி'க்கு கம்போஸ் பண்ணும்போது...!’’ - குஷ்பு நெகிழ்ச்சி #IlayaRaja75

''ராஜா சாரை நேசிக்க ஆரம்பிச்சது, ஹிந்தி படங்கள்ல இருந்துதான். 80-களில் இளையராஜாவின் நிறையப் பாடல்களை ஹிந்தியில அப்படியே எடுத்துப் போட்டுடுவாங்க. பாடல்களும் அவ்வளவு அருமையா இருக்கும். அப்படி மொதல்ல ஹிந்தியில நான் கேட்க ஆரம்பிச்ச பாடல், மூன்றாம் பிறை 'ஏ சிந்தகி' பாடல். அதே படத்தில் 'கண்ணே கலைமானே', அதன் தொடர்ச்சியா நிறைய பாடல்களை ஹிந்தியில கேட்க ஆர்மபிச்சேன். அப்போதான் ராஜா எனக்கு நெருக்கமானார். ஆர்டி பர்மன், கல்யாண்ஜி, ஆனந்த்ஜினு இவங்களுடைய இசையைக் கேட்டு வளர்ந்த நான், இளையராஜாவுடைய பாடல்களையும் வெறித்தனமா ரசிக்க ஆரம்பிச்சேன்." என்ற ராஜாவைப் பற்றி நெகிழ்ந்து பேச ஆரம்பித்தார் குஷ்பு. 

"தமிழ்நாட்டுக்கு வந்தப்புறம், 'ஜானி', 'மூன்றாம் பிறை', மௌனராகம்', 'அக்னி நட்சத்திரம்', 'தளபதி'னு ராஜா சாருடைய ஒவ்வொரு பாடல்களையும் கேட்க ஆரம்பிச்சேன். 'இப்படியொரு இசையமைப்பாளர் இருக்காரா'னு ராஜா சாரை வியந்து பார்த்தேன். இளையராஜா, பாடல்களுக்கு மட்டும் ஸ்பெஷல் இல்லை,  ரீ-ரெக்கார்டிங்குக்கும் ஸ்பெஷல்தான். அவருடைய பின்னணி இசை நிறைய படங்களுக்கு உயிர் கொடுத்திருக்கு. அந்த டச், அவருடைய எல்லாப் படங்கள்லேயும் இருக்கும். அதே மாதிரி ஒரு படத்துல எங்க அமைதியா இருக்கணும், எங்க இசை வரணும், எங்க பில்டப் கொடுக்கணும், எங்க பின்னணி இசை வரணும்... இதுல எல்லாம் ராஜா சார்தான் மாஸ்டர். காலையில ஷூட்டிங் டைம்ல மேக் அப் போடுறப்போ, டிராவல் டைம், வெயிட்டிங் டைம்னு என்னுடைய பல மணி நேரங்களை ஆக்கிரம்பிக்கிறதே ராஜா சாரும் அவருடைய பாடல்களும்தான். எப்பவும் அவர் என்கூட டிராவல் பண்ற மாதிரியே இருக்கும். நான் மட்டும்தான் இப்படின்னு பார்த்தா, என் கணவரும் இப்படித்தான் இருக்கார்."

குஷ்பூ

''நான் ஷூட்டிங் போனாலும் சரி, பிரசாரத்துக்குப் போனாலும் சரி, அங்கலாம் ஒரு MP3 ப்ளேயர் வாங்கிருவேன். அப்போலாம் MP3 ப்ளேயர் சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்கள்லதான் ரொம்ப ஃபேமஸ். அங்க இருக்கிற என்னுடைய ஃப்ரெண்ட்ஸ்கிட்ட இருந்து திருடிட்டு வந்துருவேன். அதுல ராஜா சாருடைய பாடல்களைக் கேட்குற சுகமே தனிதான். அவருடைய பாடல்கள்லாம் எத்தனை முறை கேட்டாலும் முதல் தடவ கேட்குற மாதிரி இருக்கும். கேட்க கேட்க சலிக்காதது ராஜா சாருடைய பாடல்கள்தான். அவருடைய பாடல்கள் எல்லாமே எனக்கு மனப்பாடமா தெரியும். கேட்கும்போது தன்னாலே மனப்பாடம் ஆகிடும். இதுதான் ராஜா சாருடைய மேஜிக்." 'ஜானி' படத்துல வர்ற, 'என் வானிலே' பாடல் எனக்கு ரொம்ப உயிர். அந்தப் பாட்டுக்கு ஆரம்பத்துல வர்ற, 'நோ... நோ... நோ...' ப்பா சான்ஸே இல்லை. பிரசாத் ஸ்டூடியோவுலதான் அப்பலாம் மியூஸிக் போடுவாங்க. 'சின்னதம்பி' படத்துக்கும் அங்கதான் மியூஸிக் போட்டாங்க. அவர் இசையமைக்கிறப்போ நான் அங்கதான் இருந்தேன். ரொம்ப நேரம் அவரையே கண் சிமிட்டாம பார்த்திட்டிருந்தேன். இசையில அப்படியே நம்மைக் கட்டிப் போட்டிருவார்.  

குஷ்பூ

இன்னொரு விஷயம் தெரியுமா, 'சின்னதம்பி' படத்துல இருக்கிற ஐந்து பாடல்களையும் ஒரே நாள்ல இசையமைத்தார், ராஜா சார். ஊர்ல எங்க மஞ்சள் நீராட்டு விழா நடந்தாலும் 'அரச்ச சந்தனம்' பாட்டு அங்க கண்டிப்பா போட்டுருவாங்க. அந்தக் காலத்துல ராஜா சார் எதைத் தொட்டாலும் தங்கமா மாறின காலம். அவர் முன்னாடி நின்னா மரியாதை தன்னால வந்துரும். இன்னைக்கு மட்டுமில்ல என்னைக்குமே அவர் ராஜாதான்" என்று நெகிழ்ந்தபடி பேட்டியை முடித்தார், குஷ்பு.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்