Published:Updated:

``ரெண்டே லொகேஷன்... எக்ஸ்பிரஸ் க்ளிக்ஸ்!’’ - அனுஷ்காவின் வைரல் போட்டோ ரகசியம்

தார்மிக் லீ

அனுஷ்காவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் செம வைரல்! அப்புகைப்படம் எடுத்த அனுபவம் சொல்கிறார், புகைப்படக் கலைஞர் சுந்தர் ராமு.

``ரெண்டே லொகேஷன்... எக்ஸ்பிரஸ் க்ளிக்ஸ்!’’ - அனுஷ்காவின் வைரல் போட்டோ ரகசியம்
``ரெண்டே லொகேஷன்... எக்ஸ்பிரஸ் க்ளிக்ஸ்!’’ - அனுஷ்காவின் வைரல் போட்டோ ரகசியம்

`பாகுபலி' படத்தில் தன்னுடைய வெறித்தன நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் சினிமாவின் தேவசேனாவாக வலம் வந்துகொண்டிருந்தார், நடிகை அனுஷ்கா. பின், `இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக உடல் எடையைக் கூட்டினார். `கடைசியாக அனுஷ்காவை `பாகமதி' படத்தில் பார்த்தது...' என ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்திருக்க, நேற்று இணையத்தில் வைரலானது, அனுஷ்காவின் அழகிய புகைப்படங்கள்.  

``ரெண்டே லொகேஷன்... எக்ஸ்பிரஸ் க்ளிக்ஸ்!’’ - அனுஷ்காவின் வைரல் போட்டோ ரகசியம்

எந்தப் பக்கம் திரும்பினாலும், அனுஷ்காவின் அந்தப் புகைப்படங்கள்தாம். சாதாரண போட்டோதானே என்று கடந்துபோக முடியாமல், அப்படியென்ன இருந்தது அந்தப் புகைப்படத்தில்?! முதல் காரணம், அனுஷ்கா. பல நாள்கள் கழித்து அவரைப் பார்த்தது. இரண்டாவது காரணம், அந்தப் புகைப்படத்தில் அவருடைய லுக்! பல்வேறு முறையில் டயட்களை மேற்கொண்டு அவருடைய உடல் எடையைக் குறைத்திருப்பது. மூன்றாவது காரணம், அந்தப் புகைப்படம், கடற்கரையோர லொகேஷனில் அத்தனை அழகாய் இருந்தது. இவையனைத்தும் ஒரே புகைப்படத்தில் இணைந்திருந்ததுதான், அனுஷ்காவின் ரசிகர்களை இளைப்பாற்றியது. இந்த அழகிய புகைப்படங்களுக்குப் பின்னால் இருப்பவர், சுந்தர் ராமு. `மயக்கம் என்ன', `3', `நான் சிகப்பு மனிதன்' உட்பட சில படங்களில் நடித்தவர். `As I am suffering from kadhal' என்ற வெப் சீரியஸிலும் நடித்திருந்தார். அந்தப் புகைப்படங்களுக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யங்களைத் தெரிந்துகொள்ள அவரைத் தொடர்புகொண்டு பேசினேன். 

``ரெண்டே லொகேஷன்... எக்ஸ்பிரஸ் க்ளிக்ஸ்!’’ - அனுஷ்காவின் வைரல் போட்டோ ரகசியம்

``ரொம்ப நாளைக்கு முன்னாடியே அவங்களை வெச்சு போட்டோஷூட் பண்ணியிருக்கேன். இது ரெண்டாவது ஷூட். ஒருநாள் எனக்கு போன் பண்ணி, `மறுபடியும் நம்ம ஒரு ஷூட் பண்ணலாமா?'னு அனுஷ்கா கேட்டிருந்தாங்க. நானும் ஓகே சொன்னேன். ரெண்டு லொகேஷனைப் பார்த்தோம்; உடனே ஷூட் பண்ணிட்டோம், அவ்வளவுதான். பெருசா எதுவுமே பண்ணலை. அந்தப் போட்டோக்கள் வைரலானதுக்கு முக்கியக் காரணமே, அனுஷ்கா மேடமோட ரசிகர்கள்தான். பொதுவா பெரிய நட்சத்திரங்களுக்கு போட்டோஷூட் பண்ணும்போது, அவங்க ரொம்ப இறுக்கமா இருப்பாங்க. ஆனா, அனுஷ்கா அப்படியே நேரெதிர். எப்போவுமே ரொம்பப் பொறுமையா இருப்பாங்க. இவங்க எப்படியோ, அப்படித்தான் அவங்களுடைய ரசிகர்களும்!. இருக்கிறதிலேயே ரொம்ப சாஃப்ட்டான ரசிகர்கள் இவங்களுக்குத்தான் இருக்காங்கனு நினைக்கிறேன். `எப்படி இவ்வளவு அழகா பண்ணியிருக்கீங்க'னு பலரும் எனக்கு போன் பண்ணிக் கேட்டாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு." என்றவர், தொடர்ந்தார். 

``ரெண்டே லொகேஷன்... எக்ஸ்பிரஸ் க்ளிக்ஸ்!’’ - அனுஷ்காவின் வைரல் போட்டோ ரகசியம்

``இப்போலாம் ஒரு போட்டோவுல நிறைய ஃபில்டர்ஸ் பயன்படுத்தி, அந்தப் புகைப்படத்தின் ஒரிஜினல் அழகையே இல்லாம பன்ணிடுறாங்க. ஒரு போட்டோவுக்கான அழகு, அதுல இருக்கிற இயல்புதான். ரொம்ப இயல்பா எடுத்ததுனாலதான், இந்தப் புகைப்படங்கள் எல்லாம் ரொம்ப அழகா வந்திருக்குனு நினைக்கிறேன். இது எந்தப் படத்துக்கான ப்ரமோஷனும் இல்லை. எனக்கு இந்தப் போட்டோஷூட் அனுபவமும் ரொம்பப் பிடிச்சிருந்தது. நடுவுல அவங்களை ரொம்ப வெயிட் போட்டதா சொன்னாங்க. எனக்கு அப்படியெல்லாம் தெரியலை. அவங்களை முதல் தடவை எப்படிப் பார்த்தேனோ, அப்படியேதான் இருக்காங்க. அவங்க சோஷியல் மீடியாவுல ரொம்ப ஆக்டிவ் இல்லை. ஸ்க்ரீன்லேயும் அவங்களைக் கடைசியா `பாகுபலி', `பாகமதி'னு சில படங்கள்லதான் பார்த்தோம். இந்தச் சமயத்துல போட்டோ வந்ததும் இவ்வளவு வைரலா போனதுக்குக் காரணம். நான் ரஜினி சார், சூர்யா சார் இப்படிச் சில முக்கிய நடிகர்களுக்கு போட்டோஷூட் பண்ணியிருக்கேன். ஆனா, நான் எடுத்த புகைப்படம் இந்தளவுக்கு வைரலானது, அனுஷ்கா மேடமுக்கு எடுத்த இந்தப் புகைப்படங்கள்தான்!"  நெகிழ்ச்சியோடு பேட்டியை முடித்தார், சுந்தர் ராமு.  

தார்மிக் லீ