``ஸாரி... டைட்டில் ஏன் அப்படி வைச்சோம்னா..?!"- `பொண்ணு வேணும்' அசார் | Azar talks about his film's first look controversy

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (15/02/2019)

கடைசி தொடர்பு:19:00 (15/02/2019)

``ஸாரி... டைட்டில் ஏன் அப்படி வைச்சோம்னா..?!"- `பொண்ணு வேணும்' அசார்

நேற்று தொடங்கிய `கடலை போட ஒரு பொண்ணு வேணும்' படத்தின் போஸ்டருக்கான பேச்சு இன்னும் ஓயவில்லை. இந்தப் பிரச்னை குறித்து, படத்தின் ஹீரோ அசார் பேசியிருக்கிறார்.

``ஸாரி... டைட்டில் ஏன் அப்படி வைச்சோம்னா..?!

`கடல போட ஒரு பொண்ணு வேணும்' - படத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட விளம்பர யுக்தி, பெண்களை இழிவுப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதியும், `இனி படத்திற்கான தலைப்பு வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.' எனத் தெரிவித்திருக்கிறார். சர்ச்சைகள் குறித்தும், தலைப்பு குறித்தும் படத்தின் ஹீரோ அசாரிடம் பேசினேன். 

அசார்

``இந்த புரமோஷனுக்கான யோசனை எப்படி வந்தது?"

``இந்தப் படத்தோட முதல் வார்த்தையை கட் பண்ணிட்டு, பப்ளிசிட்டிக்காக '---- போட ஒரு பொண்ணு வேணும்' போஸ்டர் அடிச்சோம். அந்த இடத்தில் நீங்க என்ன வேணா போட்டுக்கலாம். அந்த இடத்துல எந்த வார்த்தையைப் போட்டாலும் மேட்ச் ஆகும். அதாவது, அழுக்குத்துணி போட பொண்ணு வேணும், கடலை போட பொண்ணு வேணும்... இப்படி எதுவும்! கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஆர்ஜே பாலாஜியோட `ஓட்டுப் போட்டீங்களா?' ஒரு விஷயம் வைரல் ஆச்சு. எங்க படமும் அப்படி ரீச் ஆகணும்னு இதை ஃபாலோ பண்ணோம்."  

``தப்பான அர்த்தம் தருதுனுதானே பிரச்னையே?!" 

``ஹீரோ நான். இன்னும் பல பெரிய பெரிய நடிகர்கள் இந்தப் படத்துல இருக்காங்க. ஒவ்வொண்ணா ரிவில் பண்ணலாம்னு ஐடியா. அதுல ஒரு ஐடியாதான் இப்படியானது. இப்படிப் பண்ணாதான், எங்களை மாதிரி சின்னச் சின்ன படங்களும் வெளியே தெரியும். மத்தபடி, இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும்; படத்துல நடிக்கிறவங்களும் பிடிச்சவங்கதான்." 

அசார்

``என்ன கதை?" 

``இது முழுக்க முழுக்க ஜாலியான ஒரு படம். தலைப்பு இப்படி சர்ச்சை ஆகிடுச்சுனு யாரும் இந்தப் படத்தைப் பற்றித் தப்பா நினைச்சுடாதீங்க. `இருட்டு அறையில் முரட்டுக் குத்து', `த்ரிஷா இல்லனா நயன்தாரா' மாதிரியான படங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது. `அட்டக்கத்தி' மாதிரி ஜாலியான படமா இருக்கும்." 

``இப்படி ஒரு நெகட்டிவ் பப்ளிசிட்டி தேவையா?"

``அப்படி இல்லை. இப்படிப் பண்ணாதான் மக்களை ரீச் பண்ண முடியும்னு எந்த முன் முடிவும் நாங்க பண்ணலை. போஸ்டர் ரிலீஸ் பண்றதுக்கு முன்னாடி ஒரு போட்டி மாதிரி இதைப் பண்ணலாம்னுதான் ஐடியா. காலியாக இருந்த இடத்துல சரியான வார்த்தையை யாரெல்லாம் ஃபில் பண்றாங்கனு பார்க்கலாம்னு நினைச்சோம். அதுல ஜெயிக்கிறவங்களுக்கு கூப்பன், கிஃப்ட்ஸ் எல்லாம் தரலாம்னு ஏற்பாடு பண்ணியிருந்தோம்."  

அசார்

``போஸ்டரை இப்படி உருவாக்கும்போது, அது தவறான பார்வையைக் கொடுக்கும்னு தெரியாதா?" 

``மக்கள் நினைக்கிற மாதிரி முதல் பார்வை தப்பாதான் இருக்கும்னு நெனச்சது, உண்மை. ஆனா, இரண்டாவது, மூன்றாவது முறை பார்க்கும்போது அந்த இடத்துல வேறென்ன வார்த்தை இருக்கும்னு யோசிச்சு, நாங்க யோசிச்ச வார்த்தையைச் சொல்வாங்கனு நினைச்சோம். தவிர, போஸ்டரைக் காதலர் தினம் அன்னைக்கு வெளியிடக் காரணம், அந்த நாளில் `கடல போடுறது'தானே ஸ்பெஷல்?! அதனால, ஈஸியா கண்டுபிடிப்பாங்கனு நினைச்சோம். இந்தப் படத்தோட டைட்டில் சொன்னவுடனே எனக்குப் பிடிச்சிருந்துச்சு. டைட்டிலுக்காவே இந்தப் படத்துல நடிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். ஏன்னா, ஒரு படத்துக்கு டைட்டில் ரொம்ப முக்கியம்."

``சரி, `கடல போட பொண்ணு வேணும்' டைட்டிலுக்கும், படத்தோட கதைக்கும் என்ன தொடர்பு?"

``டைட்டில்தான் படமே! அதைத்தான் ஜாலியா சொல்லப்போறோம். இந்தப் படத்தின் டைட்டில் சமூக ஆர்வலர்கள், பெண்கள்... யார் மனதைப் புண்படுத்தியிருந்தாலும், மன்னிப்பு கேட்டுக்கிறோம். மத்தபடி, இது காமெடியான ஒரு படம்!" என்று முடிக்கிறார், அசார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்