Published:Updated:

``பிரியா பவானி சங்கர் அழகா இருக்காங்கள்ல..?!" - எஸ்.ஜே.சூர்யா

பிர்தோஸ் . அ

``நான் நடிச்சு முதன்முறையா 'யு' சான்றிதழ் வாங்குன படம் இதுதான். என்னோட `வாலி' படத் தயாரிப்பாளர், ``உங்களுக்கு 'யு' சான்றிதழ் வேணும்னா, படத்தோட பெயரை `யு'னு வெச்சிடுங்க"னு சொல்வார். ஒரு காலத்துல 'யு' சான்றிதழ் வாங்கணும்ங்கிறது பெரிய கனவா எனக்குள்ள இருந்தது."

``பிரியா பவானி சங்கர் அழகா இருக்காங்கள்ல..?!" - எஸ்.ஜே.சூர்யா
``பிரியா பவானி சங்கர் அழகா இருக்காங்கள்ல..?!" - எஸ்.ஜே.சூர்யா

மிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை இயக்கியவர், எஸ்.ஜே.சூர்யா. தற்போது, பல முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்த `இறைவி' நடிகராக இவருக்கு திருப்புமுனையைக் கொடுத்தது. இவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஏ.ஆர்.முருகதாஸ் மகேஷ் பாபுவை வைத்து எடுத்த `ஸ்பைடர்' படத்தில் வில்லனாகக் கலக்கினார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த `மெர்சல்' படத்தில் விஜய்க்கு வில்லனானார். தற்போது, `ஒருநாள் கூத்து' நெல்சன் இயக்கியிருக்கும் `மான்ஸ்டர்' படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.  

``பிரியா பவானி சங்கர் அழகா இருக்காங்கள்ல..?!" - எஸ்.ஜே.சூர்யா

அதில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, ``இந்தப் படத்துக்கு ஓர் ஆசீர்வாதம் இருக்கு. படத்தின் வில்லன் ஒரு எலி. அது, பிள்ளையாருடைய வாகனம். தயாரிப்பாளர் பிரபு எனக்குப் போன் பண்ணி, `நீங்களும் ஒரு எலியும் நடிக்கணும்'னு இந்தக் கதையைப் பற்றிச் சொன்னார். பல புலிகளுக்கு வில்லனா நடிச்ச நம்மளுக்கு எலி வில்லனான்னு நினைச்சேன். ஆனா, வீட்டு பால்கனியில உட்கார்ந்து காத்து வாங்குன சந்தோஷத்தை இந்தப் படம் கொடுத்தது. பெரும்பாலும் இந்தப் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து வீட்டுக்குப் போகவே பிடிக்காம, டபுள், ட்ரிபிள் கால்ஷீட் கொடுத்து நடிச்சேன். தயாரிப்பாளர் பிரபு சார் என்கிட்ட நெல்சனைப் பற்றிச் சொல்லும்போது, `ரொம்ப நேர்மையானவர்'னு சொன்னார். டைரக்டர் எலியைப் பற்றி சொன்ன விஷயங்கள் எனக்குப் பிடிச்சிருந்தது. என்னைவிட அதிகமா ஷூட் பண்ணது அந்த எலியைத்தான். நான்கூட சிஜியில பண்ணிக்கலாம்னு சொன்னேன்; நெல்சன் சார் கேட்கவே இல்லை. அந்த எலியை வெச்சு எப்படியெல்லாம் சீன்ஸ் எடுத்திருக்காங்கன்னு டப்பிங் பேசுறப்போதான் பார்த்தேன். ஜஸ்டின் பிரபாகரன் நல்ல மியூசிக் டைரக்டர். `அந்திமழை' பாட்டை ரொம்ப அருமையா ஷூட் பண்ணியிருக்காங்க. இந்தப் பாட்டோட சேர்த்து பிரியா பவானி சங்கரைப் பார்க்கும்போது ரொம்ப அழகா தெரிஞ்சாங்க. இவ்வளவு அழகாக இருக்காங்கன்னு ஃபீல் பண்னேன். பிரியா பவானி சங்கர் உண்மையிலேயே குடும்பக் குத்து விளக்கு.

அப்புறம், அந்த எலியைப் பற்றி சொல்லியே ஆகணும். எலியை வைத்து ஃபர்ஸ்ட் டைம் ஷூட் பண்ணிட்டு முக பாவனைகள் சரியா வரலைன்னு ரெண்டாவது முறையும் ஷூட் பண்ணாங்க. இயக்குநருக்கு ஏத்தமாதிரியே கலை இயக்குநரும் படத்துக்கு வொர்க் பண்ணியிருக்கார். நகரக்கூடிய வீடுகளை செட் பண்ணிக் கொடுத்தார். 

``பிரியா பவானி சங்கர் அழகா இருக்காங்கள்ல..?!" - எஸ்.ஜே.சூர்யா

ஷூட்டிங் ஸ்பாட்ல `நடிக்கணும்; ஆனா, நடிக்கக்கூடாது சார்'ன்னு சொல்வார், நெல்சன். நான் நடிச்சு முதன்முறையா `யு' சான்றிதழ் வாங்குன படம் இதுதான். என்னோட `வாலி' படத் தயாரிப்பாளர், ``உங்களுக்கு `யு' சான்றிதழ் வேணும்னா, படத்தோட பெயரை `யு'னு வெச்சிடுங்க"னு சொல்வார். ஒரு காலத்துல 'யு' சான்றிதழ் வாங்கணும்ங்கிறது பெரிய கனவா எனக்குள்ள இருந்தது. `நியூ' படம் எடுத்தப்போ பலரும் நான் ரொம்ப ஜாலியான மனுஷன்னு நினைச்சிருப்பாங்க. ஆனா, நான் ரொம்பப் பாவப்பட்டவன். என்னோட ரியலான உலகத்தை இந்தப் படத்தின் மூலமா காட்டுன படக்குழுவுக்கு நன்றி." என்றவர், தொடர்ந்தார். 

``இடையில நான் நடிச்ச படங்கள் ரிலீஸாகாம இருந்தது. இது எனக்குக் கஷ்டமா இருந்தது. `உயர்ந்த மனிதன்' ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்தப்போ என்னோட நெற்றியில் குங்குமம் வெச்சு அமிதாப் சார் ஆசீர்வாதம் பண்ணார். அப்போதான் எனக்கு நெல்சன் சார்கிட்ட இருந்து போன் வந்தது. `பிசினஸ் ஹீரோ' ஆகணும்னு ரொம்ப காலமா போராடிக்கிட்டு இருக்கேன். அதுக்கு இந்த `மான்ஸ்டர்' துணையா இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா, எப்போவும் போவேன், வருவேன், குழிக்குள்ளே விழுவேன், எந்திரிப்பேன்... சினிமாவுல இதுதான் எனக்கு நடந்திருக்கு. நான் பெரிய ஹீரோவான்னு தெரியாது. ஆனா, நான் எனக்கு ஒரு ஹீரோவா வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்." என்று முடித்தார், எஸ்.ஜே.சூர்யா

Vikatan

பிர்தோஸ் . அ

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..
பா.காளிமுத்து